Hop oxo : 100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5ல் அறிமுகம்...

ஹோப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வரும் செப் 5ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் குறித்த விரிவான தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இந்தியாவில் புதிதாக எலெக்ட்ரிக் பைக்களை தயாரிக்கும் நிறுவனம் ஹோப். இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் Hop Oxo என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இதற்கான புக்கிங்கையும் அப்பொழுதே துவங்கியது. இந்நிறுவனம் தனது பைக்கிற்கான முன்பதிவிற்காக ரூ999 தனது வெப்சைட் மூலம் வசூலித்தது.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகத்திற்குப் பிறகு மக்கள் அந்த ஸ்கூட்டர்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதையடுத்து பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்களை தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதில் ஒரு முன்னணி நிறுவனம் தான் ஹோப் இந்நிறுவனம் தனது கம்பெனியை நிறுவி முதல் பைக்காக Hop Oxoவை அறிமுகப்படுத்தியது.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

தற்போது இந்நிறுவனத்திற்கு ARI சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் உள்ள 20 நகரங்களில் சுமார் 75,000 கி.மீ. ஓட்டியது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், பாட்னா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த டெஸ்டிங்கை நடத்தி தற்போது இந்த இந்த பைக்கிற்கான சான்றை வாங்கியுள்ளது.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இந்நிலையில் இந்த பைக்கை அந்நிறுவனம் வரும் செப் 5ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமே இந்த பைக் எலெக்ட்ரிக் பைக்காக இருந்தாலும் இது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த அம்சமே இந்த பைக் குறித்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் எகிற வைத்தது. இதனால் இந்த பைக்கிற்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்தது.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இதுவரை சுமார் 5 ஆயிரம் புக்கிங் வந்த நிலையில் அந்நிறுவனம் இந்த பைக்கிற்கான புக்கிங்கை நிறுத்திவிட்டது. இந்த பைக்கில் அந்நிறுவனம் லித்தியம் அயான் பேட்டரியை நிறுவியுள்ளது. இது தவிர இந்த பைக் குறித்த தொழிற்நுட்ப தகவல்களை அந்நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

ஆனால் இந்த பைக் முழு சார்ஜில் 100-150 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போக இந்த பைக்கின் அதிகபட்ச வேகமாக 100 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக் ரூ1.20 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இந்த பைக்கின் லுக்கின் முக்கிய அம்சமே இந் பைக்கின் எல்இடி ஹெட்லைட் தான் இதன் வடிவமைப்பு பார்க்க யமஹா எஃப்இசட்-எஃப்ஐ 2.0 பைக்கின் ஹெட்லைட் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் போல வடிவமைக்கப்பட்ட பகுதியில் பக்கவாட்டிலேயே எல்இடி லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் பேட்டரி பெரியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

100 கீ.மீ வேகத்தில் சீறிப் பாயும் ஹோப் எலெக்ட்ரிக் பைக் செப் 5 ல் அறிமுகம் . . .

இந்த பைக் மார்கெட்டில் ஏற்கவே விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் பைக்களாக ரிவோல்ட் ஆர்வி400, டார்க் கேரோடோஸ், ஓபன் ரோர் ஆகிய பைக்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்நிறுவனம் இந்த பைக்கை விற்பனை செய்ய நாடு முழுவதும் 140 டச் பாய்ண்ட்களும், நிறுவன முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே 60 டீலர்ஷிப்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 28, 2022, 21:51 [IST]
English summary
Hop oxo bike plans to launch on September 5 know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+