இதை உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தாதீங்க... அப்புறம் வண்டியைக் காயலான் கடைக்குத்தான் போடனும்...

பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் உள்ள இன்ஜின் கில் சுவிட்ச் இன்ஜினையே காலியாகும் குணம் கொண்டது. இதனால் பைக் முழுவதும் பாழாகும் வாய்ப்புள்ளது. இது குறித்து விபரமாகக் காணலாம்

பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் சிவப்பு நிறத்தில் ஒரு ஒரு சுவிட்ச் இருக்கும் இந்த சுவிட்சிற்கு இன்ஜின் கில் சுவிட்ச் என பெயர். இன்ஜினை சாவி மூலமாக இல்லாமல் நேரடியாக இன்ஜினை ஆப் செய்வதற்காகப் பயன்படும் சுவிட்ச்.

அதைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் இன்ஜினிற்கே கூட ஆபத்து ஏற்படலாம். இதைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னவெல்லாம் ஆகும்? அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

இன்றைய காலங்களில் பெரும்பாலான பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் இந்த இன்ஜின் கில் சுவிட்ச் இருக்கிறது. இந்த சுவிட்சை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தலாம். இது பெரும்பாலும் வாகனத்தின் வலது பக்க ஹேண்ட்பர் பகுதியில் இருக்கும். இது பைக், ஸ்கூட்டரை எளிதாக இயக்குவதற்காக வழங்கப்பட்ட ஒரு வசதி தான். இது நேரடியாக இன்ஜின் காயிலில் உள்ள தொடர்பைத் துண்டிக்கும். அதனால் இன்ஜின் ஆஃப் ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்தினால் வாகனமே சேதமாகும் நிலை கூட ஏற்படும்.

பைக்கின் மைலேஜ் குறையும்

இன்ஜின் கில்சுவிட்சை அடிக்கடி பயன்படுத்தினால், மீண்டும் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது அதிகமான பெட்ரோல் தேவைப்படும். சிலர் சிக்னலில் நிற்கும் போது அல்லது தற்காலிகமாக சில நிமிடங்கள் நிற்கும் போது கூட இந்த சுவிட்ச் மூலம் இன்ஜினை ஆப் செய்து பின்னர் ஆன் செய்கின்றனர். இதனால் பெட்ரோல் அதிகம் செலவாகி பைக்கின் மைலேஜ் குறையும்.

செஃல்ப் மோட்டார் பாதிக்கப்படும்

அடிக்கடி இந்த கில் சுவிட்சை பயன்படுத்தி பைக்கை ஆஃப் செய்தால் பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது செல்ஃபை பயன்படுத்துவார்கள். இதனால் செல்ஃப் மோட்டாரின் ஆயுள் குறையும். இன்று வரும் சில பைக்குகளில் கிக்கர்களே கிடையாது. அப்படியான பைக்குகளில் செல்ஃப் பாதிக்கப்பட்டால் பைக்கை ஸ்டார்ட் செய்வதே பெரிய தலைவலியாக மாறிவிடும்.

பேட்டரி லைஃப் குறையும்

இன்ஜின் கில் சுவிட்ச் நேரடியாக பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதை தேவையில்லாமல் அடிக்கடி பயன்படுத்தினால் இன்ஜின் கில் சுவிட்சை பயன்படுத்தும் போது எல்லாம் பேட்டரி ஆக்டிவேட் ஆகும். இதனால் பேட்டரியின் வாழ்நாள் குறையும்.

இன்ஜின் பாதிக்கப்படும்

அடிக்கடி பைக்கை ஆஃப் செய்து ஆன் செய்வது நேரடியாக இன்ஜினில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படியாக நீங்கள் தொடர்ந்து இன்ஜின் கில் சுவிட்சை பயன்படுத்தினால் பைக்கின் இன்ஜினை கூட இது பாதித்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 9, 2022, 12:59 [IST]
English summary
How engine kill switch affects engine when wrongly used
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+