இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

வெளிநாட்டை சேர்ந்த பல மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன, இதற்கு முன்பும் விற்பனை செய்துள்ளன. ஆனால் இதில் சில பிராண்ட்கள் மட்டுமே நம் நாட்டு சந்தையில் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம்-மும் ஒன்று என சொல்லலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இந்தியாவில் கேடிஎம் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இதேபோன்று மற்றொரு ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹஸ்க்வர்னாவின் பைக்குகளும் பஜாஜின் தொழிற்சாலையில் தான் உருவாக்கப்பட்டு வருகின்றன. முதன்முதலாக ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இந்த பிராண்டில் இருந்து 250சிசி-யில் ஸ்வார்ட்பிளேன் & விட்பிளேன் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் மொத்தமாக கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் 48 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 297 ஸ்வார்ட்பிளேன் 250 & விட்பிளேன் 250 பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

No Domestic Dec 2021 Dec 2020 Growth (%)
1 125 - - -
2 200 - - -
3 250 48 297 -83.84
4 401 - - -
Total 48 297 -83.84
இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இந்த வகையில் உள்நாட்டில் ஹஸ்க்வர்னா பைக்குகளின் விற்பனை சுமார் 83.84% குறைந்துள்ளது. இந்த இரு 250சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் மட்டுமின்றி, 125சிசி, 200சிசி மற்றும் 401சிசி ஹஸ்வர்னா (ஸ்வார்ட்பிளேன் & விட்பிளேன்) பைக்குகளும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பஜாஜின் புனே தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!
No Exports Dec 2021 Dec 2020 Growth (%)
1 125 631 504 25.20
2 200 72 145 -50.34
3 250 210 295 -28.81
4 401 1,825 160 1040.63
Total 2,738 1,104 148.01

இதில் 125சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 631 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் 504 125சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த பைக்குகளின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 25.20% அதிகரித்துள்ளது. மறுப்பக்கம் 200சிசி & 250சிசி ஹஸ்க்வர்னா பைக்குகளின் ஏற்றுமதி முறையே 50.34% மற்றும் 28.81% குறைந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இவை இரண்டும் கடந்த மாதத்தில் 72 மற்றும் 210 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 டிசம்பரில் இவற்றின் ஏற்றுமதி எண்ணிக்கைகள் முறையே 145 மற்றும் 295 யூனிட்கள் என இருந்தன. ஆனால் உலகளவில் பிரபலமான ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் அதிகப்பட்சமாக 1,825 யூனிட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

ஆனால் 2020 டிசம்பரில் வெறும் 160 ஹஸ்வர்னா 401 பைக்குகளே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ஹஸ்க்வர்னா பைக்கின் ஏற்றுமதி சுமார் 1040.63% அதிகரித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 2,738 ஹஸ்க்வர்னா பைக்குகளை தனது சாகான் தொழிற்சாலையில் தயாரித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 148.01 குறைவாக 1,104 யூனிட்களாக பதிவாகி இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 26,077 ஹஸ்க்வர்னா பைக்குகள் பஜாஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஹஸ்க்வர்னா 401 பைக்குகளின் ஏற்றுமதி எண்ணிக்கையே (13,519 யூனிட்கள்) அதிகமாகும்.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இதற்கடுத்து 125சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் 4,873 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் மொத்தம் 2906 ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 250 & விட்பிளேன் 250 பைக்குகள் கடந்த 2021ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே இந்த 250சிசி பைக்குகள் மொத்தம் 2,474 யூனிட்கள் கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனையாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இவ்வளவுதானா!! ஏற்றுமதி மட்டும் டாப் கியரில் இருக்கு!

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான சந்தை மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஹஸ்க்வர்னா அதன் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. பஜாஜ் சேத்தக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட உள்ள இதில் 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 29, 2022, 21:22 [IST]
English summary
Husqvarna sales exports 2021 svartpilen vitpilen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+