ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4

இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்கள் மற்றும் தோற்றத்தில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது ஐகோவைஸ் (iGowise Mobility) நிறுவனத்தின் ட்ரிகோ பிஎக்ஸ்4 (Trigo BX4) எலெக்ட்ரிக் டூ-வீலர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

எதிர்பார்த்ததைவிட இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த சான்றாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருக்கன்றது. இது வேறு எந்த நிறுவனம் செய்திராத விற்பனை எண்ணிக்கையாகும்.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நிலவிக் கொண்டிருப்பதால், புதுமுக வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதிய தயாரிப்புகளை இந்தியாவை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

அந்தவகையில், ஐகோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) எனும் புதுமுக நிறுவனம் அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் டூவீலரை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம். இந்நிறுவனம் ட்ரிகோ பிஎக்ஸ்4 (Trigo BX4) எனும் இருசக்கர வாகனத்தையே அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

முற்றிலும் தனித்துவமான ஸ்டைலில் இந்த இருசக்கர வாகனத்தை ஐகோவைஸ் உருவாக்கியிருக்கின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்திய இருசக்கர வாகன உலகம் இதுவரை சந்தித்திராத ஓர் புதிய தோற்றத்திலேயே ட்ரிகோ பிஎக்ஸ்4 எலெக்ட்ரிக் வாகனத்தை நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இதனை நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

இந்த இ-வாகனத்தை தயாரிப்பு நிறுவனமான ஐகோவைஸ் எஸ்யூவி காருக்கு இணையான வசதியைக் கொண்டது என தெரிவித்துள்ளது. ஓர் எஸ்யூவி கார் எந்த அளவு மிக தாராளமான இட வசதி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்குமோ அதைபோலே இந்த வாகனமும் அனைத்திலும் பெஸ்ட்டானதாக இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

அதேவேலையில், இதன் விலையும் பிற மின்சார வாகனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.1 லட்சம் முதல் 1.2 லட்ச ரூபா வரையிலான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், மும்மடங்கு அதிக நிலைப்புத் தன்மை, 2 மடங்கு அதிக இட வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

ஆகையால், கார்களில் கிடைக்கும் பயண அனுபவம் இந்த வாகனம் தாராளமாக கிடைக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 145 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். இந்த சூப்பர் வேக திறனுக்காக 180 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டார் ட்ரிகோ பிஎக்ஸ்4-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

இவற்றுடன் இந்த டூ-வீலரில் செல்ஃப் ஸ்டெபிலைசேஷன் அம்சமும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த அம்சம் குறைவான வேகத்தில் பயணிக்கும்போதுகூட சாயாமல் பயணிக்க உதவும். இதேபோல், அதிக வேகத்தின் பாதுகாப்பை வழங்கும் விதமாக இன்டலிஜென்ட் ஆட்டோ-ஸ்விவெல்லிங் (intelligent auto-swivelling) அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

இந்த அனைத்து அம்சங்களும் அதிக சொகுசான பயணத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து 6 அங்குல ஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட திரை மற்றும் சென்சிபிள் ஸ்மார்ட் சார்ஜிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இந்த எலெக்ட்ரிக் டூவீலரில் வழங்கப்பட்டுள்ளது.

ஓலாவையே சாப்பிட்ரும் போலிருக்கே... இதுவரை கேள்விப்பட்டிராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகிறது ட்ரிகோ பிஎக்ஸ்4 இ-ஸ்கூட்டர்!

இவ்வளவு சிறப்பு வசதிகளுடன் சேர்த்து முதல் ஐயாயிரம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாரண்டி, இலவச அலங்கார அணிகலன்கள், உறுதியான ரீசேல் மதிப்பு மற்றும் பை-பைக் வசதி உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஆகையால், இந்த இருசக்கர வாகனம் இந்தியர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் ஓலா எலெக்ட்ரிக், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 7, 2022, 15:29 [IST]
English summary
Igowise mobility all set to launch trigo bx4 ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+