இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் லிமிடெட் எடிசன் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. சமமான பந்தய களத்தில் தனது ஆதிக்கத்தை கொண்டாடும் விதத்தில் இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இந்தியன் எஃப்டிஆர் பைக்கை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

பெயரில் மட்டுமே இந்தியாவை கொண்டுள்ள பழமை வாய்ந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்ட் இந்தியன் ஆகும். இதுதவிர்த்து இந்த பிராண்டிற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்க சம பந்தய கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 முறை பட்டத்தை வென்றுள்ளது.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இதனை கொண்டாடும் விதமாகவே புதிய எஃப்டிஆர் லிமிடெட் எடிசன் பைக் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய பைக் வெறும் 400 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. இவை உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளன என்றாலும், இதில் பெரும்பான்மையானவற்றை அமெரிக்க வாடிக்கையாளர்களே பெற்றுவிடுவர்.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

சம பந்தய கள போட்டிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியன் எஃப்டிஆர்750 போட்டிக்கு-மட்டும் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாம்பியன்ஷிப் எடிசனிற்கு பிரத்யேகமான கருப்பு-சிவப்பு நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சம பந்தய கள போட்டிகளில் பிராண்ட் தொடர் 5 வெற்றிகளை வாடிக்கையாளர்களுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு முத்திரை பெட்ரோல் டேங்கிற்கு மேற்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

2017இல் இருந்து கடந்த 2021 வரையில் நடைபெற்ற அமெரிக்க சம பந்தய கள போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பட்டத்தை வென்றுள்ளது. பெட்ரோல் டேங்க் பகுதியில் வெள்ளை நிறமும், முன்பக்க சஸ்பென்ஷன் யூனிட் தங்க நிறத்திலும், இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் அலுமினியத்தின் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

கிட்டத்தட்ட பந்தய களத்திற்கு மட்டுமான பைக்கின் தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பினும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப பல்வேறு அம்சங்கள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் அமைப்பு, எடை குறைவான கார்பன் ஃபைபர் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் பிக்கி ஷாக் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இருப்பினும் அதேநேரம் பந்தய கள பைக்கின் டச் இருக்க வேண்டுமென்பதற்காக ப்ரோ-டாப்பர் சம பந்தய களத்திற்கான அலுமினியம் ஹேண்டில்பாரை புதிய எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்கள் பலருக்கு பிடித்த அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பன் ஃபைபர்-ஆல் ஆன பாகங்களாக முன்பக்க ஃபெண்டர், காற்றுப்பெட்டி கவர்கள், இருக்கை கௌல் மற்றும் ஹெட்லைட் கூடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இந்த கார்பன் ஃபைபர் பாகங்களுடன், பின்பக்கம் மேல்தூக்குவது தடுப்பு உடன் வீலிங் கண்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 ரைட் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் போன்ற தொழிற்நுட்பங்களும் புதிய எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசனில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இவற்றில் பந்தய கள பைக்குகளின் பாணியில் ட்ரெட் பேட்டர்ன் உடன் டன்லுப் ஸ்ட்ரீட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், போதுமான கண்ட்ரோல் மற்றும் நிறுத்தல் ஆற்றலை வழங்கக்கூடிய இரட்டை டிஸ்க்குகள் முன் சக்கரத்தில் பிரெம்போ காலிபர்களுடன் வழங்கப்பட்டுள்ளன. புதிய இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக்கில் 1,203சிசி, லிக்யுடு-கூல்டு, வி-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 121.3 பிஎச்பி மற்றும் 120 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. அமெரிக்க சம பந்தய கள போட்டிகளில் தொடர் 5 வெற்றிகளில் 2017இல் பெற்ற முதல் வெற்றியில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சார்பில் எஃப்டிஆர்750 மாடல் களமிறக்கப்பட்டது.

இந்தியன் எஃப்டிஆர் சாம்பியன்ஷிப் எடிசன் பைக் உலகளவில் வெளியீடு!! காசு இருந்தாலும் சொந்தமாக்குவது ரொம்ப கஷ்டம்!

ஏற்கனவே கூறியதுபோல் பழமையான அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்கும் இந்தியனில் இருந்து பல துணை பிராண்ட்களும் பல வருடங்களாக செயல்பாட்டில் உள்ளன. இதில் ஒன்று இந்தியன் சீஃப் ஆகும். கிட்டத்தட்ட 100 வருடங்களாக இந்தியன் சீஃப் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை கொண்டாடும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் 4 புதிய பைக்குகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, March 14, 2022, 17:21 [IST]
English summary
Indian ftr championship edition revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+