பைக்கின் பின்பக்க டயர் பெரியதாக இருந்தால் நல்லதா? சிறியதாக இருந்தால் நல்லதா?
பைக்கின் பின் வீல் டயரை பெரிய டயராக மாற்றுவது நல்லதா, கெட்டதா? இது குறித்த விரிவான தகவல்களைக் கீழே காணலாம்.
இன்றைய பைக் விரும்பிகள் பலர் தங்கள் பைக்கின் பின்பக்க வீலை பெரிய டயரை கொண்டு மாடிஃபிகேஷன் செய்கின்றனர். அப்பொழுது தான் தங்கள் பைக் மற்ற பைக்குகளிலிருந்து சற்று வித்தியாசமாகத் தெரியும் என்பதற்காக இதைச் செய்கின்றனர்.

இப்படியாக பைக்கிற்கு பெரிய டயரை மாற்றுவது உண்மையிலேயே பைக்கிற்கு நல்லதா? அல்லது பைக்கின் ஃபேக்டரி ஃபிட்டிங் டயரிலேயே பயன்படுத்துவது சரியா?
பொதுவாகச் சாதாரண பைக்குகளில் பின்பக்க டயர் சிறிய டயரை தான் வழங்குவார்கள். ஆனால் பலர் வெளி மார்கெட்டில் இதைப் பெரிய டயராக மாற்றிவிடுகின்றனர். பெரிய டயராக மாற்றுவது மட்டும் பைக்கிற்கு அதிகமான கிரிப் கிடைக்கிறது. சிறிய டயரை விட அகலமான பெரிய டயர்களுக்கு தான் கிரிப் அதிகமாக இருக்கும். இதனால் சாலையில் பயணிக்கும் போது திரும்பும்போது, பைக்கில் சடன் பிரேக் போடும் போது மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போது உதவியாக இருக்கும்.
எப்படி நல்ல விஷயம் இருக்கிறதோ அதே போல சில கெட்ட விஷயங்களும் இருக்கிறது. நார்மல் டயரை விடப் பெரிய டயரை பொருத்துவதால் பைக்கின் ஓட்டு மொத்த எடை அதிகமாகும். எடை அதிகமாவதால் பைக்கின் ஒட்டு மொத்த மைலேஜ் குறையும். இதே போல பைக்கின் ஓட்டு மொத்த பெர்ஃபாமென்ஸூம் குறையும்.
இது குறித்து வல்லுநர்கள் கூறுவது 100-150 சிசி வரையிலான பைக்குகளுக்கு சாதாரண டயர்களே சிறந்தது என்றும், 150 சிசிக்கு அதிக திறன் கொண்ட பெரிய டயர்கள் சிறந்தது என்றும் கூறுகிறார்கள் மேலும் பைக்குக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பைக்கின் எடையைக் கணக்கிட்டே அதற்கு ஏற்ற சைஸில் டயர்களை பொருத்துவார்கள்.
அதை நீங்கள் வெளிமார்கெட்டில் மாற்றினால் பைக்கில் பெரிய பாதிப்புகள் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் பைக்குக்கு ஏற்ற டிசைனில் பைக் நிறுவனங்கள் வழங்கிய அளவிலான அகலத்தைக் கொண்ட டயர்களையே பயன்படுத்துவது சிறந்தது எனக் கூறுகிறார்கள்.
இல்லை உங்களுக்கு உங்கள் பைக்கின் பின் டயர் சிறியதாக இருப்பதால் பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பைக்கின் பின் டயர் கிரிப் இல்லாமல் இருக்கிறது என நீங்கள் கருதினால் உங்களுக்கான தீர்வு அகலமான டயரை மாற்றுவது அல்ல நீங்கள் டியூப் டயரை பயன்படுத்தினால் அதை டியூப்லெஸ் டயராக மாற்றிப் பாருங்கள். டியூப் டயர்களை விட டியூப்லெஸ் டயர்கள் இன்னும் நல்ல கிரிப்பை தரும். இதுவே உங்கள் பைக்கிற்கு போதுமானதாக இருக்கும். டியூப் லெஸ் டயர் டியூப் டயர்களை விடச் சற்று விலை அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








