ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்...

ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

ஐவூமி எனெர்ஜி (iVOOMi Energy) நிறுவனம் அதன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜீட்எக்ஸ் (JeetX) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் உயர் வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஐவூமி எனெர்ஜி தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

ஜீட்எக்ஸ் (JeetX) மற்றும் ஜிட்எக்ஸ் 180 (JeetX180) ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 99,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டான ஜீட் எக்ஸ் தேர்வின் விலையாகும். மேலும், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

இதன் உயர்நிலை தேர்வாக ஜீட் எக்ஸ் 180 உள்ளது. இது ரூ. 1.4 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இரு கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்குடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஜீட் எக்ஸ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜையும், ஜீட் எக்ஸ் 180 வேரியண்ட் ஓர் முழு சார்ஜில் 180 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

இதே இருசக்கர வாகனங்கள் ஈகோ மோடில் வைத்து இயக்கும்போது கூடுதலாக 20 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஐவூமி நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு பல மடங்கு வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

இந்த மாதிரியான சூழலிலேயே ஐவூமி நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்திருக்கின்றது. பன்முக ரைடிங் மோட்கள், டிஸ்க் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பன்முக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர இன்னும் சில அம்சங்களும் இந்த வாகனத்தில் இடம் பெற இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

ஐவூமி நிறுவனம் இந்த வாகனத்தை நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஸ்கார்லட் ரெட் (Scarlet Red), இங்க் ப்ளூ (Ink Blue), போஷ் ஒயிட் (Posh White) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey). ஐவூமி நிறுவனம் ரெட்ரோ டிசைனில் இந்த வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த தோற்றத்திற்கு ஏற்ப டைமண்ட் வடிவ ஹெட்லைட், பாடி பேனல்கள், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

இவை அனைத்தும் இருசக்கர வாகனத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் இருக்கின்றன. ஐவூமி நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தை செப்டம்பர் 1 தேதியில் இருந்து விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், ஜீட்எக்ஸ் எனும் ஆரம்ப நிலை வேரியண்டே அந்த நாளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஜீட் எக்ஸ் 180 வேரியண்டின் விற்பனை செம்படம்பர் இறுதியில் தொடங்க இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஐவூமி நிறுவனம் முதலில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அக்சஸெரீஸ்களை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 10 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு இந்தியாவில் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்குறித்து நிறுவனத்தின் ஐவூமி நிறுவனத்தின் எம்.டி மற்றும் இணை நிறுவனர் சுனில் பன்சால் கூறியதாவது, "நாங்கள் உள்நாட்டு தயாரிப்புகளின் வாயிலாக வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முயற்சி செய்கிறோம். மேலும், இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமான மின் வாகனங்களைக் கொண்டு வருவதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்" என்றார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஐவூமி ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இது ட்யூவல் பேட்டரி பேக் வசதி கொண்டது!

மேலே குறிப்பிடப்படவற்றின் அடிப்படையிலேயே புதிய ஐவூமி ஜீட் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் தனித்துவமான ஸ்டைல் மற்றும் அதிக ரேஞ்ஜ் தரும் திறன் இப்போதே மக்களைக் கவர்ந்திழுக்க தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனத்தின் வருகை ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகியவற்றிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 23, 2022, 16:09 [IST]
English summary
Ivoomi energy unveiled its upcoming jeetx electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+