சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது என்பது இன்றைய சூழலில் அன்றாட நிகழ்வாக மாறி விட்டது. தேவை அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

எனவே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் ஒரு சில வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகதான் இருந்து கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது விழிப்புணர்வுடன் உள்ளனர். வாடிக்கையாளர்கள் அதிக விபரங்களை தெரிந்து வைத்திருப்பதால், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றிருப்பது அவசியமாகிறது. அத்துடன் நகர பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என அனைத்து வகையான சாலைகளிலும் ஓட்டக்கூடிய திறனையும் அவை பெற்றிருக்க வேண்டும்.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இப்படி அனைத்து வகைகளிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், ஐவூமி (iVoomi) நிறுவனம் ஆர்வமாக உள்ளது. இந்த சூழலில் ஐவூமி எஸ்1 (iVOOMi S1) மற்றும் ஜீட் (iVOOMi Jeet) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இவை இரண்டுமே ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இதில், ஐவூமி எஸ்1 ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, 84,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 65 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்ல கூடியது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 75 கிலோவாக உள்ளது.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஐவூமி எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லித்தியம் அயான் பேட்டரியை, 3-4 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 115 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

மறுபக்கம் ஐவூமி ஜீட் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் ஜீட் வேரியண்ட் 82,999 ரூபாய் என்ற விலையிலும், ஜீட் ப்ரோ வேரியண்ட் 92,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீட் மற்றும் ஜீட் ப்ரோ ஆகிய 2 மாடல்களின் பேட்டரிகளையும் ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 130 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

எஸ்1 மற்றும் ஜீட் ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என ஐவூமி நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் தற்போது நிறைய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ், பஜாஜ், சிம்பிள் எனர்ஜி போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் ஆம்பியர், ஒகினவா போன்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகமாக நிறுவனங்களாக உள்ளன. இதுதவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்கவுள்ளன.

சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ஓடும்! சூப்பரான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இதில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் யமஹா குறிப்பிடத்தக்கது. யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நடப்பு 2022ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் ஏப்ரல் மாதமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதை தொடர்ந்து முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 22, 2022, 17:02 [IST]
English summary
Ivoomi s1 and jeet electric scooters launched in india here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+