மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் பிராண்டான ஜாய் இ-பைக்கில் இருந்து 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

வார்ட் விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபைலிட்டி நிறுவனத்தின் இவி பிராண்டாக விளங்கும் ஜாய் இ-பைக் இந்தியாவில் வேகமாக தனது தயாரிப்புகளை விரிவுப்படுத்தி வருகிறது. இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக வூல்ஃப்+ மற்றும் ஜென்ரேஷன் நெக்ஸ்ட் நானு+ அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

இதில் வூல்ஃப்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,10,185 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேட் கருப்பு, க்ரே மற்றும் அடர் வைன் நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம் மிட்நைட் க்ரே மற்றும் மேட் வெள்ளை நிறத்தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜென்ரேஷன் நெக்ஸ்ட் நானு+ இ-ஸ்கூட்டரின் விலை ரூ.1,06,991 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

இவற்றுடன் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டெல் கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வார்ட் விசார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,14,500 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த லாஸ்ட்-மைல் டெலிவிரிகளுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கருப்பு மற்றும் க்ரே என்ற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

இந்த விலைகள் அனைத்தும் ஃபேம்-2 மானியம் குறைக்கப்பட்டதற்கு பிறகான எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். இதன்பின் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களையும், சலுகைகளையும் பொறுத்து இந்த விலைகள் மேலும் குறைக்கப்படும் என்றாலும், ஜிஎஸ்டி, ஆர்டிஒ பதிவிற்கான தொகை, இன்சூரன்ஸ் மற்றும் மற்ற இதர கட்டணங்களை சேர்க்கும்பட்சத்தில் ஆன்-ரோடு விலை மேலே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

வூல்ஃப்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது நீண்ட தூர பயணத்திற்கான ஸ்கூட்டராகவும், ஜென்ரேஷன் நெக்ஸ்ட் நானு+ இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்தும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் வூல்ஃப்+ மாடலில் தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரம் 740மிமீ ஆகவும், வீல்பேஸ் 1,345மிமீ ஆகவும் உள்ளது. நானு+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓட்டுனர் இருக்கை 730மிமீ உயரத்திலும், வீல்பேஸ் 1,325மிமீ நீளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

மற்றப்படி மற்ற பரிமாண அளவுகளான நீளம் (1800மிமீ), அகலம் (460மிமீ) மற்றும் உயரம் (1100மிமீ) உள்ளிட்டவற்றில் இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே உள்ளன. இந்திய சாலைகளுக்கு ஏற்ப இவற்றில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 160மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் யு-டர்ன் செய்ய குறைந்தப்பட்சம் 1.6 மீட்டர் ஆரத்தில் நிலப்பரப்பு தேவைப்படும்.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

சஸ்பென்ஷனுக்கு இந்த புதிய ஜாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்பக்கத்தில் இரட்டை ஃபோர்க் ஹைட்ராலிக்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப அம்சமாக சாவியில்லா நுழைவு வசதி இந்த ஸ்கூட்டர்களில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை ஆன்/ஆஃப் செய்ய ஒரு ஸ்விட்ச்சை க்ளிக் செய்தாலே போதுமாம். இத்துடன் ஏகப்பட்ட ஸ்மார்ட் வசதிகளுக்காக பல்வேறு வகையிலான சென்சார்கள் ஸ்கூட்டரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

இவற்றுடன் ப்ளூடூத் மூலம் செயல்படக்கூடிய ஜாய் இ-கனெக்ட் செயலியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வசதியின் மூலமாக வாகனம் இருக்கும் இடத்தை அறிதல், பேட்டரியின் நிலை உள்ளிட்டவற்றை மொபைல் போன் வழியாகவே ஓட்டுனர் அறிய முடியும். அதுமட்டுமின்றி ரைடர்கள் தங்களது ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ப வாகனத்தை இயக்க ஈக்கோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என்கிற 3 ரைடிங் மோட்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

மேலும், இந்த ஜாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ரிவர்ஸில் குறைந்த வேகத்தில் செல்வதற்கான மோடும் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த ஜாய் வூல்ஃப்+ மற்றும் ஜென்ரேஷன் நெக்ஸ்ட் நானு+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 1.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஜாய் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.07 லட்சம்

20 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் இந்த இ-ஸ்கூட்டர்களில் அதிகப்பட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லலாமாம். இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் 60 வாட்ஸ் 35 ஆம்பியர் பேட்டரி தொகுப்பு முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 100கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 11, 2022, 21:28 [IST]
English summary
Three New Joy Electric Scooters Launched – Price From Rs 1.07 Lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+