நிறம் மட்டும்தான் வேற... ரூ. 5 ஆயிரம் கூடுதல் விலையில் Z650 RS 50th Anniversary Edition பைக் அறிமுகம்!
இந்தியாவில் கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இசட்650ஆர்எஸ் 50வது அன்னிவர்சரி எடிசன் (Z650 RS 50th Anniversary Edition) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), அண்மையில் இசட்650 ஆர்எஸ் 50வது அன்னிவர்சரி எடிசன் (Z650 RS 50th Anniversary Edition) பைக்கை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகம் அரங்கேறி சில வாரங்களே ஆகின்ற நிலையில் தற்போது இப்பைக்கை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இது ஓர் பிரத்யேக தயாரிப்பு என்கிற காரணத்தினால் சற்று காஸ்ட்லியான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 6.79 லட்சம் இசட்650 ஆர்எஸ் 50வது அன்னிவர்சரி எடிசன் பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வெர்ஷனைக் காட்டிலும் ஐயாயிரம் ரூபாய் அதிக விலை ஆகும்.

அப்படி என்ன சிறப்பு வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன என நீங்கள் கேட்கலாம். இப்பைக்கை புதிய நிறங்களால் அலங்கரித்திருக்கின்றது. கவாஸாகி இசட்1 பைக்கை பிரதிபலிக்கும் வகையில் ஃபையர்கிராக்கர் சிவப்பு எனும் பிரத்யேக நிறத்தை கவாஸாகி இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது.

இந்த நிற தேர்வே வழக்கமான இசட்650 இடம் இருந்து புதிய சிறப்பு பதிப்பை வேறுபடுத்திக் காட்டுகின்றது. மேலும், கவர்ச்சியான ரெட்ரோ தோற்றத்திலும் காட்சிப்படுத்த வைத்துள்ளது. இந்த தோற்றத்தை கூடுதலாக மெருகேற்றும் வகையில் ஆங்காங்கே குரோம் பூச்சு கொண்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன், கோல்டன் நிறத்திலான ரிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஏற்கனவே பிரீமியம் தோற்றத்தில் காட்சியளித்து வந்த இசட்650 பைக்கை இன்னும் பன் மடங்கு அதிக பிரீமியம் தோற்றம் கொண்டதாக மாற்றியிருக்கின்றது.

இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் கவாஸாகி நிறுவனம் இசட்650 ஆர்எஸ் 50வது அன்னிவர்சரி எடிசன் பைக்கில் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆகையால், எஞ்ஜின் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றில் வழக்கமான இசட்650 பைக்குடன் சிறப்பு பதிப்பு இசட்650 ஆர்எஸ் பைக் ஒத்து போகும் வகையில் உள்ளது.

கவாஸாகி இசட்650 பைக்கில் 649 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜினே தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் இசட்650 ஆர்எஸ் 50வது அன்னிவர்சரி எடிசன் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஸ்போர்ட்ஸ் ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் குரோம் பெசல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரெட்ரோ தோற்றத்தை வழங்கும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட பைக்கையே கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வருகையைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகளையும் நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








