இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

சிறுவர், சிறுமியர்களுக்கான தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்திருக்கிறது கவாஸாகி நிறுவனம். கவாஸாகியின் இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

கவாஸாகி மோட்டார்சைக்கிள்களை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்... கவாஸாகி பைக் வாங்கும் அளவிற்கு வசதி இல்லாவிடினும் நிச்சயமாக பெரும்பாலானோர்க்கு கனவு கவாஸாகி பைக் என்று ஒன்று இருக்கும். இப்படிப்பட்ட இந்த பிரபலமான ஜப்பானிய பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் பைக் எப்போது வெளிவரும் என்று உங்களை போல் நாங்களும் ஆவலாக காத்திருந்தோம்.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

ஏனெனில் உலகளவில் பிரபலமான அனைத்து மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் பணியில் ஏற்கனவே இறங்கிவிட்டன. இந்த நிலையில் கடந்த மே மாத இறுதியில் ஒருவழியாக தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை ஜூன் 7ஆம் தேதி வெளிக்காட்ட உள்ளதாக கவாஸாகி அறிவித்து, டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

ஆனால் அந்த வீடியோவில் ரைடர்கள் இளம் வயதினர் போன்று காட்டப்பட்டு இருந்ததால், சற்று சந்தேகம் கிளம்பியது. இருப்பினும் அனைவரையும் கவரும் விதத்தில் அட்டகாசமான தயாரிப்பை கவாஸாகி களமிறக்கும் என நம்பிக்கையாக இருந்தோம். ஆனால் தற்போது சந்தேகித்தப்படி, சிறுவர்களுக்கான எலக்ட்ரிக் பைக்கை கவாஸாகி நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

எலக்ட்ரோட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் பெடல் பை-சைக்கிள்களுக்கும், சிறிய-அளவிலான மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் என கவாஸாகி நம்பிக்கை கொண்டுள்ளது. புதிய எலக்ட்ரோட் ஆனது தன்னிச்சையாக சமநிலைப்படுத்தி கொள்ளக்கூடிய எலக்ட்ரிக் பைக் ஆகும்.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

இந்த மினி எலக்ட்ரிக் பைக்கின் மத்திய சட்டகத்திற்குள் 36 வோல்ட் 5.1 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள 250-வாட் ப்ரஷ்லெஸ் எலக்ட்ரிக் மோட்டார் வாயிலாக இயக்க ஆற்றலை பின் சக்கரத்திற்கு வழங்கும். இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்பிக்கொண்டு தொடர்ச்சியாக, அதிகப்பட்சமாக 2.5 மணிநேரங்களுக்கு பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

அதேபோல் இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பவும் 2.5 மணிநேரங்கள் தேவைப்படுமாம். எலக்ட்ரோடின் பேட்டரியை சார்ஜ் செய்ய தற்போதைக்கு வழக்கமான 5 ஆம்பியர் சார்ஜிங்கை வீட்டு உபயோக மின்சாரத்தின் மூலம் பெறப்படுகிறது. மற்றப்படி, விரைவு சார்ஜர் குறித்து எந்த விபரமும் இல்லை. சிறுவர்களுக்கான பயன்பாட்டு எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும், எலக்ட்ரோடில் லோ, மீடியம் & ஹை என 3 விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

இவை ஒவ்வொன்றிலும் அதிகப்பட்சமாக மணிக்கு முறையே 8 கிமீ, 12கிமீ மற்றும் 20கிமீ வேகத்தில் செல்லலாம். சிறுவர்களின் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு ரைடிங் மோடையும் மாற்றும்போது குறிப்பிட்ட குறியீட்டு சொல்லை பயன்படுத்த வேண்டும். இந்த குறியீட்டு சொல்லை இரகசியமாக பெற்றோர்களே வைத்திருக்கலாம் என்கிறது கவாஸாகி.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

இந்த குறைந்த வேகத்தையும் சமாளிக்க முடியவில்லை எனில், ரைடர் கால் வைக்கும் பகுதியை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாமாம். ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரோட் எலக்ட்ரிக் பைக்கை 3 வயதில் இருந்து 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்றதாக கவாஸாகி வடிவமைத்துள்ளது. இதற்கேற்ப பைக்கின் ஹேண்டில்பார் மற்றும் இருக்கை தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

இந்த மினி எலக்ட்ரிக் பைக்கின் மொத்த சுமக்கும் திறன் 45 கிலோ ஆகும். இதன் சட்டகம் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பு எதுவும் கிடையாது. இதன் அலுமினியம் சக்கரங்கள் 16-இன்ச்சில் உள்ளன. இந்த சக்கரங்களில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்ற டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின் சக்கரத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லிவர் பொசிஷன் உடன் 160மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

எலக்ட்ரோடின் மொத்த எடை வெறும் 15 கிலோ மட்டுமே. லைம் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த மினி எலக்ட்ரிக் பைக்கின் விலை சர்வதேச சந்தைகளில் 1,099 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.85,435 ஆகும். கவாஸாகி தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையிலும் வரும் வருடங்களில் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக முன்பு கூறியிருந்தோம்.

இதுதான் கவாஸாகியின் முதல் எலக்ட்ரிக் பைக்கா!! இன்னும் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தோம்!

ஆனால் அளவில்-சிறிய மினி பைக்காக உருவாக்கப்பட்டிருப்பதால், எலக்ட்ரோட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே. அறிமுகமாக நேர்ந்தாலும், அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். கவாஸாகியின் இந்த முதல் எலக்ட்ரிக் பைக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Most Read Articles
English summary
Kawasaki unveils first fully electric bike elektrode
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X