இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175). இந்த பைக் செப்டம்பர் 25ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கவாஸாகி டபிள்யூ175 பைக் இன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

இந்திய சந்தையில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் ஆரம்ப விலை 1.47 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கவாஸாகி டபிள்யூ175 பைக்கானது, ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) என மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலைதான் 1.47 லட்ச ரூபாய் ஆகும்.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

மறுபக்கம் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டின் விலை 1.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டின் விலை 2 ஆயிரம் ரூபாய் அதிகம். இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் என்ற பெருமையை கவாஸாகி டபிள்யூ175 பைக் பெற்றுள்ளது.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

கவாஸாகி டபிள்யூ175 பைக்கில், 177 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டட், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13 பிஎஸ் பவரையும், 13.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் 30 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

பிரேக்கிங்கை பொறுத்தவரையில் இந்த பைக்கின் முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் ஹாலோஜன் ஹெட்லேம்ப்களும், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

அதே நேரத்தில் இந்த பைக்கில் சிங்கிள்-பீஸ் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் எபோனி ஆப்ஷனும், ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டில் கேண்டி பெரிசிம்மன் ரெட் கலர் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவாஸாகி பைக்கையாவது சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும்.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

ஆனால் கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளின் விலை மிகவும் அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது கவாஸாகி டபிள்யூ175 பைக் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைதான் எதிர்பாத்தோம்... மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் விற்பனைக்கு அறிமுகம்... அதுக்குனு இவ்ளோ கம்மியா

இந்திய சந்தையில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம், இந்த பைக் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகும். இந்திய சந்தையை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) ஆகிய பைக்குகளுடன் கவாஸாகி டபிள்யூ175 பைக் போட்டியிடும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki w175 launched in india
Story first published: Sunday, September 25, 2022, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X