இரண்டு பைக்குகளையுமே வாங்கலாம் போல... கீவே-வின் இரு புதுமுக பைக்குகள் அறிமுகம்! ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு!
கீவே நிறுவனத்தின் இரு புதுமுக பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கீவே நிறுவனம் இந்திய சந்தையில் கே300 என் மற்றும் கே300 ஆர் ஆகிய இரு இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவை ட்வின் ரக பைக்குகளாகும். ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் சற்றே மாறுபட்ட தோற்றத்தில் இப்பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த இரட்டையர்கள் இருசக்கர வாகனங்களுக்கான புக்கிங் பணிகளை கீவே நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இம்மாதம் இறுதிக்குள் இப்பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. இதில், கே300 என் என்பது நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.

இதற்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கே300 ஆர் ஆனது அதிக அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த இரட்டையர்களையே கீவே நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இவற்றின் விலை விபரம் இதோ:
| கே300 என் | கே300 ஆர் | ||
| வண்ண தேர்வு | விலை | வண்ண தேர்வு | விலை |
| Matte White | ₹2,65,000 | Glossy White | ₹2,99,000 |
| Matte Red | ₹2,75,000 | Glossy Red | ₹3,10,000 |
| Matte Black | ₹2,85,000 | Glossy Black | ₹3,20,000 |

2022 கீவே கே300 என் மூன்று விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மேட் ஒயிட், மேட் சிவப்பு மற்றும் மேட் பிளாக் ஆகிய நிறங்களே அவை ஆகும். அதேவேலையில், கே300 ஆர் குளாஸ்ஸி வெள்ளை, குளாஸ்ஸி சிவப்பு மற்றும் குளாஸ்ஸி பிளாக் ஷேட் ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். நிறத்திலும், தோற்றத்திலும் சற்றே மாறுபட்டாலும் இவ்விரு மோட்டார்சைக்கிள்களிலும் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரே மாதிரியான அம்சங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, எஞ்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றில் ஒரே மாதிரியான இப்பைக் காட்சியளிக்கின்றது. 292.4 சிசி மோட்டாரே இந்த இரு பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 27.1 பிஎச்பி பவரையும், 25 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த ட்வின் மோட்டார்சைக்கிள்களில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மிக சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் விதமாக டிஸ்க் பிரேக்குகள் அனைத்து வீல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர முன் பக்கத்தில் 4 பிஸ்டன் காலிபரும், பின் பக்கத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபரும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவர்ச்சியான ஹெட்லைட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரே பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டிருப்பதனாலயே அனைத்திலும் இவை ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. ஒரே மாதிரியான ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமிலேயே இவ்வாகனம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் வகையில் இரு மோட்டார்சைக்கிள்களிலும் 110/70-17 டயர் முன் பக்கத்திலும், 140/60-17 டயர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரே மாதிரியான அம்சங்களை பெற்றிருப்பதனாலேயே இந்த பைக்குகள் இரட்டையர்களாக காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில், உருவ தோற்றத்தில் பல மடங்கு இப்பைக் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

இந்த இருசக்கர வாகனங்கள் சிஎஃப் மோட்டோ 300என்கே மற்றும் சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் ஆகிய இருசக்கர வாகனங்களின் டிசைன் தாத்பரியங்களை தழுவி உருவாக்கப்பட்டதைப் போல் காட்சியளிக்கின்றது. இவற்றின் வருகை இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், சமீபத்திய அறிமுகமான ஜி 310 ஆர்ஆர், சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் எஸ்எஃப் 250 ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








