கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

கீவே நிறுவனத்தின் எஸ்ஆர் 125 ரெட்ரோ கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

கீவே நிறுவனம் அதன் மலிவு விலை இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஸ்ஆர் 125 மோட்டார்சைக்கிளையே இந்தியாவில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.19 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிளாஸ்ஸி ஒயிட் (Glossy White), கிளாஸ்ஸி பிளாக் (Glossy Black) மற்றும் கிளாஸ்ஸி ரெட் (Glossy Red) ஆகிய நிற தேர்வுகளிலேயே கீவே எஸ்ஆர் 125 விற்பனைக்குக் கிடைக்கும்.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் ஏழாவது இருசக்கர வாகன மாடல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் கால் தடம் ஒரு சில மாதங்களே ஆகின்ற நிலையில் அதிரடியாக ஏழாவது மாடலை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கீவே நிறுவனம் இந்தியாவில் கால் தடம் முதல் நாளிலேயே கே-லைட் 250வி, வீஸ்டே 300 மற்றும் சிக்ஸ்டீஸ் 300ஐ ஆகிய மூன்று இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

கடந்த மே மாதம் இந்த சம்பவம் அரங்கேற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக வி 302சி (V302C), கே 300என் (K300 N) மற்றும் கே 300ஆர் (K300 R) ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அடுத்தடுத்தாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்தே இந்தியாவிற்கான ஏழாவது மாடலும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

அறிமுகத்தைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ. 1,000 முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் ஸ்டைல் பழைய ஸ்கூல் பாய் என கூறுமளவிற்கு முற்றிலும் அழகிய ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையிலேயே பெரிய ஃப்யூவல் டேங்க் (14.5 லிட்டர் கெபாசிட்டி கொண்டது), ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, வட்ட வடிவ ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட் ஹாலோஜன் ரக மின் விளக்காகும். இதை சுற்றிலும் கருப்பு கேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் பைக்கிற்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த இருசக்கர வாகனம் மிக முக்கியமாக கேடிஎம் ட்யூக் 125 மற்றும் ஆர்சி 125 ஆகியவற்றிற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

இவையிரண்டைக் காட்டிலும் இதன் விலை குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கு மட்டுமின்றி, பஜாஜ் பல்சர் 125, ஹோண்டா எஸ்பி 125, ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ரைடர் உள்ளிட்ட பிற 125 சிசி பைக்குகளுக்கும் இந்த வருகை போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கீவே நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஎச்சி 2-வால்வ் ஏர் கூல்டு மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 9.7 எச்பி பவரையும், 8.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக இப்பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

கீவே நிறுவனத்தின் அட்டகாசமான ரெட்ரோ கிளாசிக் ரக பைக் அறிமுகம்... கேடிஎம் ட்யூக்கைவிட குறைவான விலையில்!

இத்துடன், சூப்பரான பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவதற்காக 300 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 210 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் மற்றுமொரு அட்டகாசமான வசதியாக அனைத்து சாலைகளையும் சமாளிக்கக் கூடிய டயர்களும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான அம்சங்களால் இருசக்கர வாகனம் முற்றிலும் சூப்பரான ஓர் தயாரிப்பாக காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 13, 2022, 17:37 [IST]
English summary
Keeway launches it s 7th model bike sr 125 in india
மேலும்... #கீவே #keeway
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+