அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

ஹங்கேரியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான கீவே (Keeway) பெண்டா வி302சி (Benda V302C) என்கிற பெயரில் புதிய க்ரூஸர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கீவே க்ரூஸர் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

ஹங்கேரியா நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கீவே சில மாதங்களுக்கு முன்னர் தான் இரு ஸ்கூட்டர்கள் மற்றும் கே-லைட் 250வி என்கிற பெயரிலான ஒரு க்ரூஸர் பைக்குடன் இந்திய சந்தையில் களம்புகுந்தது. அதனை தொடர்ந்து தற்போது பெண்டா வி302சி என்கிற பெயரில் புதியதாக மற்றொரு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஒன்று கீவே பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

பெண்டா வி302 சி என்ற பைக்கின் பெயரில் உள்ள சி என்ற எழுத்தானது க்ரூஸர் என்பதை குறிப்பதாக உள்ளது. இந்தியாவில் கீவே நிறுவனத்தின் வரிசையில், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட கே-லைட் 250வி க்ரூஸர் பைக்கிற்கு மேலாக, அதனை காட்டிலும் விலை மிகுந்ததாக புதிய வி302சி பைக் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

பளபளப்பான க்ரே, பளபளப்பான கருப்பு மற்றும் பளபளப்பான சிவப்பு என 3 விதமான நிறத்தேர்வுகளில் கீவே பெண்டா வி302சி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பளபளப்பான க்ரே நிறத்தில் இந்த புதிய கீவே பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.89 லட்சம், பளபளப்பான கருப்பு நிறத்தேர்வில் ரூ.3.99 லட்சம் மற்றும் பளபளப்பான சிவப்பு நிறத்தேர்வில் ரூ.4.09 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

க்ரூஸர் பைக்குகள் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்கும் ஹங்கேரிய கீவே பிராண்ட், புதிய வி302சி பைக்கையும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி புத்தம் புதியதாக உருவாக்கியுள்ளது. அதேநேரம், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட கே-லைட் 250வி பைக்கில் இருந்து தோற்றத்தில் வித்தியாசப்படும் வகையிலும் புதிய பெண்டா வி302சி பைக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

மற்றொரு முக்கியமான விஷயம்... புதிய பெண்டா வி302சி பைக் ஆனது கீவே நிறுவனம் மட்டுமின்றி, சீன 2-வீலர் பிராண்டான பெண்டாவும் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இதனாலேயே ஐரோப்பிய-சீன ஸ்டைலில் இந்திய இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அட்டகாசமான தோற்றத்தை பெண்டா வி302சி பைக் பெற்றுள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

பைக்கை சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க ஹெட்லைட் ஆனது வட்ட வடிவில் பொருத்தப்பட்டுள்ளதால், வி302சி பைக் மாடர்ன்-கிளாசிக் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. என்ஜின் அமைப்பு மற்ற பைக்குகளில் உள்ளதை போல் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, என்ஜினிற்கு முன்பக்கத்தில் பெரிய ரேடியேட்டர் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

இவை எல்லாம் கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்தாலும், இருக்கையின் நீளத்தில் கீவே நிறுவனம் சற்று கோட்டைவிட்டது போன்றுதான் தெரிகிறது. ஏனெனில் ஒரே துண்டாக வழங்கப்பட்டுள்ள இருக்கை அமைப்பில் பின் இருக்கை பயணிக்கான இருக்கை மிகவும் நறுக்கப்பட்டது போன்றதான வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, படங்களை வைத்து பார்க்கும்போது பின் இருக்கை பயணி சற்று அசவுகரியமாகவே அமர வேண்டும் போலருக்கிறது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

இந்த பைக்கின் என்ஜினில் மொத்தம் இரு சிலிண்டர்கள் உள்ளன. என்ஜினிற்கு முன் மற்றும் பின்பக்கமாக பொருத்தப்பட்டுள்ள இந்த சிலிண்டர்கள் வெளியிடும் புகை தனித்தனியாக பெறப்பட்டாலும், ஒரே எக்ஸாஸ்ட் குழாய் வழியாகவே வெளிவரும். நீர்த்துளி வடிவில் வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க் ஆனது மொத்தம் 15 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஸ்பீடோ மீட்டர் கன்சோல் எல்சிடி-ஆக கியர் பொசிஷனுக்கான இண்டிகேட்டர் உடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய கீவே வி302சி பைக்கில் 298சிசி வி-ட்வின் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பில் உள்ள ஒவ்வொரு சிலிண்டருக்கும் 4 வால்வுகள் மற்றும் SOHC கொடுக்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா... ரூ.4 லட்சத்தில் 300சிசி க்ரூஸர் பைக்கா!! ராயல்என்பீல்டு பைக்குகள் தான் முக்கியமான டார்க்கெட்டாம்

அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 30 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 26.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கிடைக்க பெறும் இயக்க ஆற்றல்கள் பெல்ட் ட்ரைவ் வாயிலாக பைக்கின் சக்கரங்களுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 30, 2022, 17:27 [IST]
English summary
Keeway launches v302c for the indian market
மேலும்... #கீவே #keeway
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+