ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி கண்டுவரும் கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி & பவர் சொல்யூஷன்ஸ் (Kinetic Green Energy & Power Solutions) அதன் புதிய அதிகவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஜிங் (Zing) மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் செல்லக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கைனெட்டிக் பிராண்டில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஜிங் -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப்-ஸ்பீடு 60kmph ஆக இருக்க, புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 125கிமீ ஆகும்.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

அதாவது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். நார்மல், ஈக்கோ & பவர் என 3 விதமான ரைடிங் மோட்களை ஜிங் ஸ்கூட்டரில் கைனெட்டிக் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த 3 ரைடிங் மோட்களும் ஒவ்வொரு விதமான வேகத்தை வழங்கக்கூடியவை.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனை 3 மணிநேரத்திற்கு உள்ளாக முழுவதுமாக, அதாவது 0-இல் இருந்து 100% சார்ஜ் நிரப்பி விடலாம் என்கிறது கைனெட்டிக் நிறுவனம். இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் அமைப்பை 3 விதமாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பும் உள்ளது.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

இத்துடன் கைனெட்டிக் ஜிங் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் நின்றுவிடவில்லை. க்ரூஸ் கண்ட்ரோல், பல்வேறு செயல்பாடுகளை வழங்கக்கூடிய டேஸ்போர்டு, யுஎஸ்பி துளை, ஸ்கூட்டரில் இருந்து நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் ஸ்மார்ட் ரிமோட் கீ என தொழிற்நுட்ப வசதிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

ஜிங் அதிவேக ஸ்கூட்டருக்கு 3 வருட உத்தரவாதத்தை கைனெட்டிக் க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன் தனது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான நிதி திட்டங்களை வழங்குவதற்காக ஸ்ரீராம் சிட்டி யூனியன், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், டாடா கேபிட்டல் நிதி சேவைகள், இந்துஸிந் பேங்க் உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் கைனெக்ட்டிக் க்ரீன் நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

ஜிங் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து கைனெட்டிக் க்ரீன் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான சுலாஜ்ஜா ஃபைரோடியா மோத்வானி பேசுகையில், "ஜிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகமானது, உலகத் தரம் வாய்ந்த இவி தொழிற்நுட்பத்தை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மேலும், இந்த மாடலை 125கிமீ-இல் சிறந்த-இன்-கிளாஸ் வரம்பு மற்றும் அம்சங்களுடன் அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

2022-23ஆம் ஆண்டிற்கான அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் & இ-லூனாவில் பல்வேறு சலுகைகளுடன் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த நிறுவனம் ஆக்ரோஷமான திட்டங்களை கொண்டுள்ளது. கைனெட்டிக் குழுமம் இருசக்கர எலக்ட்ரிக் வாகன துறையில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளது. மேலும், லூனா மற்றும் ஹோண்டா ஸ்கூட்டர் போன்ற மேம்பட்ட, அதேநேரம் மலிவான விலையிலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் கைனெட்டிக் க்ரீன் வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன துறையில் அதிக ஈடுப்பாட்டுடன் செயல்பட உறுதிக் கொண்டுள்ளது.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

இந்த பிராண்ட் இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன துறையில் புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறது" என்றார். எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகன பிரிவில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ள கைனெட்டிக் க்ரீன் நிறுவனம் அதே வெற்றியை எலக்ட்ரிக் இருசக்கர வாகன துறையிலும் பெற மும்முரமாக உள்ளது. கைனெட்டிக் பிராண்டில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டில் இரு எலக்ட்ரிக் 2-வீலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

கைனெட்டிக் ஜிங் மித-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அதிவேக மாடல்), கைனெட்டிக் ஜூம் என்பவை அந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவை இரண்டை தற்போதுவரையில் மட்டுமே 40,000 யூனிட்களுக்கும் அதிகமாக கைனெட்டிக் க்ரீன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் மித-வேக ஜிங் மாடலின் ரேஞ்ச் ஆனது 80கிமீ ஆகும்.

ரூ.85,000 மட்டும் தானாம்... விற்பனைக்கு வந்துள்ள புதிய கைனெட்டிக் ஜிங் இ-ஸ்கூட்டர்!! டாப்-ஸ்பீடு இவ்ளோவா...!

அதுவே கைனெட்டிக் ஜூம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். புதிய ஜிங் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் உள்ள கைனெட்டிக் க்ரீன் நிறுவனத்தின் பிரத்யேக டீலர்கள் மூலமாகவும் வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2022, 11:21 [IST]
English summary
Kinetic green zing e scooter launched at rs 85000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+