வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்! ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா!!

வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) அன்று கோமகி நிறுவனத்தின் புதுமுக அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிடி 3000 விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோமகி (komaki)-யும் ஒன்று. இந்நிறுவனம், முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய தயாரிப்புகளை பன்முக சிறப்பு வசதிகள் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இத்துடன், நிறுவனம் மலிவு விலையிலும் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. கோமகி நிறுவனத்தின் இந்த செயல் ஜாம்பவான் நிறுவனங்களுக்குகூட தலை வலியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் மிக விரைவில் புதுமுக மின்சார இரு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

அது, டிடி 3000 (DT 3000) எனும் புதுமுக உயர்-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுக நிகழ்வு வரும் வெள்ளி (மார்ச் 25ம் தேதி) அன்று அரங்கேற இருக்கின்றது. இந்த நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள் சிலவற்றின் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

அதாவது, ஓர் முழுமையான சார்ஜில் 180 கிமீ முதல் 220 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் மற்றும் மணிக்கு 90 கிமீ வேகம் உள்ளிட்ட சூப்பரான தயாரிப்பாக கோமகி டிடி 3000 விற்பனைக்கு வர இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் மட்டுமே புதிய மின்சார ஸ்கூட்டர் பற்றி வெளியாகியுள்ளது.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் விலை போன்ற முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அறிமுக தினத்தின்போது வெளியிட வேண்டும் என்பதற்காக நிறுவனம் அதனை ரகசியம் காத்து வருகின்றது. அதேவேலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் புதிய கோமகி டிடி 3000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1.15 லட்ச ரூபாய்க்கும் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இத்துடன், 3000 வாட் பிஎல்டிசி மோட்டார், 62V52AH திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. கோமகி நிறுவனம் மிக சமீபத்திலேயே இரு புதிய தயாரிப்புகளை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியது.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

ரேஞ்ஜர் (இ-பைக்) மற்றும் வெனிஸ் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்) ஆகிய இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்களையே நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து நடப்பாண்டில் தனது மூன்றாவது தயாரிப்பாக டிடி 3000 வாகனத்தையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ரேஞ்ஜர் எனும் பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது ஓர் எலெக்ட்ரிக் க்ரூஸர் ரக பைக்காகும்.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இந்த ரகத்தில் இன்னும் எந்தவொரு மின்வாகன உற்பத்தி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் 5000 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஒரு முழுமையான சார்ஜில் 250 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய பேட்டரி பேக்கும் ரேஞ்ஜரில் வழங்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இதேபோல் கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நிறுவனத்தின் மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய இருக்கை, அதிக ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், சேர்த்து கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

ரிப்பேர் ஸ்விட்ச், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் ஸ்விட்ச் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இருசக்கர வாகனம் மிக சிறந்த ரெகுலர் பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளி அன்று அறிமுகமாகிறது கோமகி டிடி3000 மின்சார ஸ்கூட்டர்... அட ஒரு முற சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா?

இதன் வெளிப்பாடாகவே மிக அதிகளவில் சிறப்பு வசதிகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான ஓர் மிக சிறந்த மின்சார வாகனமாகவே வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் கோமகி டிடி 3000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 22, 2022, 11:16 [IST]
English summary
Komaki dt 3000 electric scooter launch in march 25
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+