எப்போ பற்றி எரியுமோ என்கிற அச்சம் இல்லாமல் பயணிக்கலாம்... தீயை தவிர்க்கும் பேட்டரியை அறிமுகம் செய்த கோமகி!
தீயை தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை தங்கள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக கோமகி (Komaki) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி (Komaki) தீ விபத்தைத் தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்து நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர் கதையாகி வருகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே நிறுவனம் தீயை தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருக்கின்றது. தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நிறுவனம் தற்போது பேட்டரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பெரும்பாலான மின்சார இருசக்கர வாகன தீ விபத்து சம்பவங்கள் சார்ஜ் போடும் ஏற்பட்டிருக்கின்றன.

சார்ஜ் போடும்போது பேட்டரியில் அதிகம் வெப்பம் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்பமே சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தீ விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஓர் பேட்டரியையே கோமகி தற்போது உருவாக்கியுள்ளது. இந்த பேட்டரி அடுத்த மாதத்தில் இருந்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் இடம் பெற இருப்பதாக கோமகி தெரிவித்துள்ளது.

லித்தியம் அயன் ஃபெர்ரோ பாஸ்பேட் (LiFePO4) ரக பேட்டரியையே தீயை தவிர்க்கும் திறனில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த பேட்டரியில் அயர்னே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதுவே மிகவும் இக்கட்டான சூழலிலும் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மூன்றில் ஒரு பங்கு செல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது உச்சபட்ச வெப்பத்தைத் தவிர்க்க உதவியாக இருக்கும். இந்த பேட்டரியின் வாழ்க்கை சுழற்சி 2500 முதல் 3000 வரை என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிக்கல், மக்னீசியம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றால் ஆன பேட்டரிகளைக் காட்டிலும் 800 வாழ்க்கை சுழற்சி இதில் அதிகம் ஆகும்.

இத்தகைய பேட்டரியையே விரைவில் தனது அனைத்து தயாரிப்புகளிலும் கோமகி நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சமீப காலமாக அதிகரித்து வரும் மின்சார இருசக்கர வாகன தீ விபத்து சம்பவங்கள், மின் வாகன பயன்பாட்டிற்கு பெரும் தடைக் கல்லாக மாறத் தொடங்கியிருக்கின்றது.

குறிப்பாக, மின் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் "எப்போ இந்த வாகனம் பற்றி எரியுமோ" என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி பலர் தொடர் தீ விபத்தைக் காரணம் காட்டி மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கும் பிளானையே தள்ளிப் போட்டிருக்கின்றனர்.

இவை அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்து, மின் வாகனங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு கோமகி நிறுவனம் தீயை தவிர்க்கும் பேட்டரியை அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது நிறுவனத்தின் கீழ் பன்முக மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக வெனிஸ், எஸ்இ மற்றும் டிஎன்95 உள்ளிட்டவையே காட்சியளிக்கின்றன. இவை மட்டுமின்றி நிறுவனத்தின் ரேஞ்ஜர் மற்றும் டிடி 3000 ஆகிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஒன்பது குறைந்த வேக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும், ஆறு ஹை-ஸ்பீடு மின்சார இருசக்கர வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

நிறுவனத்தின் புதிய லித்தியம் அயன் ஃபெர்ரோ பாஸ்பேட் ஒரு முழு சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் தரும் திறனில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இதன் வருகை இந்தியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, மின் வாகன பிரியர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








