ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

2022 கேடிஎம் 390 அட்வென்சர் (2022 KTM 390 Adventure) மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பக்கம் மக்களை கவர வேண்டும் என்பதற்காக சில சிறப்பு நிதி திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், அதன் அட்வென்சர் ரக இருசக்கர வாகன மாடலான 390 அட்வென்சர் (2022 KTM 390 Adventure) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது 2022 வெர்ஷன் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே அட்வென்சர் இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan), பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) மற்றும் யெஸ்டி அட்வென்சர் (Yezdi Adventure) ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

அறிமுக விலையாக இப்பைக்கிற்கு ரூ. 3.28 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலையை போலவே இந்த பைக்கின் தோற்றத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. வாடிக்கையாளர்களை இப்பைக்கின் கவர வேண்டும் என்பதற்காக மலிவான இஎம்ஐ தொகையில் வழங்கவும் நிறுவனம் முன் வந்துள்ளது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

விருப்பமுள்ளவர்களை இப்பைக்கை ரூ. 6,999 மாத தவணை திட்டத்தில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, கவர்ச்சிகரமான ஃபைனான்ஸ் ஆஃபர்களையும் நிறுவனம் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சுகின்ற வகையில் பைக்கின் தோற்றம் இருக்கின்றது. ஆம், ரேலி ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையாக அதன் தோற்றம் இருக்கின்றது. அதாவது, மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் பைக் காட்சியளிக்கின்றது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

அந்தவகையில், மிக சிறந்த அப்டேட்டாக புதிய இரு நிற பெயிண்ட் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது. கிரே/பிளாக் மற்றும் நீல நிறம் ஆகிய நிற ஸ்கீம்களிலேயே புதிய 2022 கேடிஎம் 390 அட்வென்சர் விற்பனைக்குக் கிடைக்கும். இரு நிறங்களும் அட்வென்சர் 890 இடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இத்துடன், பைக்கில் புதிய டேங்க் பட்டைகள் மற்றும் சைடு பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

சைடு பேனல்கள் சற்று அகலமானதாக காட்சியளிக்கின்றது. சேடிலைக் காட்டிலும் அகலமானதாக அதுக் காட்சியளிக்கின்றது. இது மிக சிறந்த கன்ட்ரோலை வழங்கும். இதுபோன்று இன்னும் சில புதிய அம்சங்களை இப்பைக் பெற்றிருக்கின்றது. ஆனால், அனைத்து மாற்றங்களும் பைக்கின் ஸ்டைலை மாற்றிவிடாத வகையில் செய்யப்பட்டுள்ளன.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

இதன் காரணமாகவே முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்பிளிட் டைப் ஹெட்லேம்ப், முன் பக்கத்தில் விஷர், உயரமான பின் பக்கம், பெரிய மற்றும் ஸ்பிளிட் ரக இருக்கைகள் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மாற்றம் செய்யப்படாததைப் போல் தெரியலாம். ஆனால், லேசான மாற்றங்கள் இவற்றிலும் செய்யப்பட்டுள்ளன.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

அந்தவகையில், எல்இடி லைட்டில் லேசான மாற்றமும், அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன் மற்றும் 12வோல்ட் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கில் கேடிஎம் நிறுவனம் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை முழு கலர் வசதி மற்றும் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

அந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்கிற தகவலை வழங்கக் கூடியது. இதனைத் தொடர்ந்து, பைக்கின் டிராக்சன் கன்ட்ரோலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது ஸ்ட்ரீட் மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

கேடிஎம் 390 அட்வெனச்ர் பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 42.3 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இந்த கியர்பாக்ஸில் மிக சிறப்பான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்குவதற்காக பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 7 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியுமா?... குறைவான மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை வாங்கலாம்!

இதுதவிர ரைடிங் அனுபவத்தை மெருகேற்றும் வகையில் புதி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட ஆறு ஸ்போக் வீல்கள், நான் இன்வெர்டடர் ஃபிரண்ட் ஃபோர்க், டபிள்யூபி அபெக்ஸ் ரியர் மோனோ ஷாக் பின் பக்கத்தில் மற்றும் சிங்கிள் டிஸ்க் பிரேக் இரு வீல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரட்டை சேனல் ஏபிஎஸ், ஆஃப்-ரோடு மோடுடன் வழங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2022, 21:08 [IST]
English summary
Ktm 2022 390 adventure motorcycle launched in india at inr 3 28 lakh
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+