கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் விலை விபரம் வெளியானது... எவ்வளவு தெரியுமா?
கேடிஎம் நிறுவனம் ஆர்சி 390 பைக்கின் விலையை தனது வெப்சைட்டில் அறிவித்துள்ளது. இந்த பைக்கின் விலை எவ்வளவு? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? வாருங்கள் இந்த செய்தியில் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் இளைஞர்கள் அதுவும் 20-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு பிடித்த பைக்காக இருப்பது கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகள் தான். அதன் கலர், வடிவமைப்பு, ஸ்டைல், சத்தம், பெர்ஃபாமென்ஸ் என பல விஷயங்கள் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதால் இளைஞர்களின் கனவாகவே இந்த பைக் மாறிவிட்டது. எப்படி 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராயல் என்பீல்டு பைக்கை பலர் கனவாக கொண்டிருந்தார்களோ அப்படியாக தற்போது கேடிஎம் பைக்குகளை இன்றைய இளைஞர்கள் கனவாக கொள்ள துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் கேடிஎம் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் புதிய 390 பைக்கை வெளியிடப்போவதாக அறிவித்திந்தது. விரைவில் இந்த பைக் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பைக் குறித்த விலை விபரங்களை அந்நிறுவனம் தனது வெப்சைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே 390 கேட்டகிரியில் டியூக் 390, அட்வென்சர் 390 ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில் அந்த வரிசையில் ஆர்சி 390 பைக்கையும் விற்பனை செய்து வருகிறது. அதில் சில அப்டேட்டகளை செய்து விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த பைக்கின் விலையை பற்றி பார்க்கும் இந்த பைக்கில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கிறது என காணலாம் வாருங்கள்

இந்த 2022 ஆர்சி 390 பைக் பழைய பைக்கிலிருந்து பல புதிய மாற்றங்களைப் பெற்றுள்ளது. முக்கிய மாக பைழய பைக்கில் இருந்த ஒரு எல்இடி ஹெட்லைட் இந்தபைக்கில் இரண்டு புரோஜெக்டர் ஹெட்லைட்டாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பைக்கின் இன்டிகேட்டர்களும் ஷார்ப்பான லுக்கை தருகிறது. மேலும் பைக்கின் முழுவதும் புதிய கிராபிக் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பைக் லுக்கில் மட்டுமல்ல மேலும் பல அம்சங்களையும் மாற்றியுள்ளது. இந்த 2022 கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் ப்ளு டூத் உடன் கூடிய TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது 390 டியூக் பைக்கில் கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போலவே உள்ளது. அதில் அம்பியன்ஸ் லைட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் வெளிப்புறத்தின் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப இதன் வெளிச்சம் அதிகமாவதும் குறைவதும் தானாகவே செய்து கொள்ளும்.

இந்த பைக்கின் சீட்கள் பழைய பைக்கிலிருந்து வேறு மாதரியான ஃபினிஷிங்கை பெற்றுள்ளது. வீலை பொறுத்தவரை பழைய பைக்கில் உள்ள அதே வீல் தான் இந்த பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதின் 5 ஸ்போக் டிசைன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆர்சி 390 பைக் இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகவுள்ளது. ஃபேக்டரி ரேசிங் ப்ளு, மற்றும் எலெக்ட்ரிக் ஆரஞ்ச் ஆகிய கலர்களில் இது விற்பனைக்கு வரவுள்ளது. இதில் உள்ள கிராபிக்ஸ்களும் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஆர்சி 390 பைக்கில் டபிள்யூபி அபெக்ஸ் 43 அப்சைடு டவுன் 120 மிமீ ஃபோர்க்ஸ் முன்பகுதியிலும் டபிள்யூபி அபெக்ஸ் 150 மிமீ மோனோ ஷாக் சஸ்பென்சன் பின்பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 158 மி.மீ மற்றும் சீட் உயர் 824 மி.மீ வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக் 10 லிட்டர் முதல் 13.7 லிட்டர் வரையிலான பெட்ரோல் டேங்க் கொள்ளளவைக் கொண்டது. பெட்ரோல் நிரப்பாமல் இந்த பைக் மொத்தம் 160 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

இந்த பைக்கின் முன்பக்க பிரேக்கில் 320 மிமீ சிங்கிள் 4 பிஸ்டஸ் ஃபிக்ஸட் கேலிபர் மற்றும் பின்பக்க பிரேக்கில் 230 மிமீ சிங்கிள் பிஸ்டன் ஃபிளோட்டிங் கேலிபர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் போஸ்ச் 9.1 எம்பி 2 சேனல் அண்ட்லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பின்பக்க ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது. இந்த பைக்கில் டிராக்சன் கண்ட்ரோலும் உள்ளது.

இந்த பைக்கின் சேஸிஸை பொறுத்தவரைப் பழைய மாடல் பைக்கிலிருந்து 1.5 கிலோ எடை குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹேண்டில் பார் கிளிப் பழைய பைக்கிலிருந்து 15மிமீ உயரமாக உயள்ளக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உயரம் கம்ஃபோர்ட் மற்றும் விசிபிலிட்டிக்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயரத்தை ரேஸர் ரைடிங் போசினில் ஓட்ட 10 மிமீ வரை குறைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரைடு செய்பவர்கள் மிட்கார்னரில் பிரேக் பிடித்தால் வீல் லாக் ஆகாமல் இருக்கும்.

2022 கேடிஎம் ஆர்சி 390 பைக்கை பொறுத்தவரை 373 சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 42.9 எச்பி மற்று 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், இந்த பைக்கில் பெரிய ஏர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லா ஆர்பிஎம்களிலும் பவர் மற்றும் டார்க் திறனை சிறப்பாக வெளிப்படுத்தும், மேலும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ரைடு பை ஒயர் சிஸ்டம் த்ராட்டலை சரியாக இன்ஜினிற்கு கடத்தி சிறந்த பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும். இந்த பைக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஸிப்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலையாக அந்நிறுவனம் அதன் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலை என்பது ரூ3,13,922 என்பதாகும். இது எக்ஸ் ஷோரூம் விலை இதற்குப் பின்னர் இன்சூரன்ஸ், ஆர்டிஓ செலவுகள் எல்லாம் தனியாகச் சேர்க்கப்பட்டு ஆன்ரோடு விலைகுறித்த விபரம் பைக் அறிமுகமாகும் போது வெளியாகும். மேலும் இந்த ஆர்சி 390 பைக் இதே நிறுவனத்தின் மற்ற 390 பைக்கிலிருந்து ரூ20 ஆயிரம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு பைக்கிற்கு விலையில் ரூ20 ஆயிரம் மாற்றம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








