250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்டாக கேடிஎம் உருவெடுத்துள்ளது என்றால் அதில் மிகையில்லை. ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த பைக்குகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

கேடிஎம் இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 8,857 பைக்குகளை உள்நாட்டிலும், இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை, மொத்தமாக 11,205 கேடிஎம் பைக்குகள் விற்கப்பட்டு இருந்த 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20.95% குறைவாகும்.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

அதேபோல் 2021 ஜனவரி உடனான ஒப்பிடுகையிலும், கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 34.83% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து மொத்தமாக 13,591 யூனிட் பைக்குகளை கேடிஎம் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த மாத 8,857 யூனிட்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை என்று பார்த்தால், 4,640 யூனிட்களாகும்.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

மீதி 4,217 யூனிட்கள் இந்தியாவில் உள்ள பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். உள்நாட்டில் வழக்கம்போல் 200சிசி கேடிஎம் பைக்குகளே கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 2,398 200சிசி கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

2021 ஜனவரியை (2,979 யூனிட்கள்) காட்டிலும் இந்த எண்ணிக்கை 19.50% குறைவு என்றாலும், இதற்கு முந்தைய 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 56.22% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1,535 200சிசி கேடிஎம் பைக்குகளே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 250சிசி கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் அதிக பேரால் கடந்த மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

வழக்கமாக 200சிசி-க்கு அடுத்து 125சிசி கேடிஎம் பைக்குகளே அதிகளவில் விற்பனையாகும். ஆனால் கடந்த மாதத்தில் 125சிசி பைக்குகளை முந்திக்கொண்டு கேடிஎம்-இன் 250சிசி பைக்குகள் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளன. கடந்த ஜனவரியில் மொத்தம் 1,223 250சிசி கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜனவரியிலும் சரி, 2021 டிசம்பரிலும் சரி கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை கூட தொடவில்லை.

Rank KTM Domestic Jan-22 Jan-21 Growth (%)
1 200 2,398 2,979 -19.50
2 250 1,223 560 118.39
3 125 778 2,516 -69.08
4 390 241 722 -66.62
Total 4,640 6,777 -31.53
250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

125சிசி கேடிஎம் பைக்குகள் கடந்த மாதத்தில் 778 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜனவரியில் சுமார் 2,516 கேடிஎம் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்திலும் 988 125சிசி கேடிஎம் பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இந்த வகையில், கேடிஎம் 125 பைக்குகளின் விற்பனை 69.08% மற்றும் 21.26% குறைந்துள்ளது.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை

இந்தியாவில் இருப்பதிலேயே அதிக சிசி கொண்ட கேடிஎம் மாடலான 390 கடந்த மாதத்தில் 241 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் இதன் விற்பனை எண்ணிக்கை 722 யூனிட்கள் என 66.62% அதிகமாக இருந்தாலும், கடந்த டிசம்பரில் வெறும் 159 கேடிஎம் 125 பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன.

250சிசி-யிலும் கேடிஎம் பைக்கை வாங்க இத்தனை பேரா!! 125சிசி பைக்குகள் தவிர்க்க படுகின்றனவா? 2022 ஜனவரி விற்பனை
Rank KTM Exports Jan-22 Jan-21 Growth (%)
1 200 1,708 1,234 38.41
2 250 1,302 1,376 -5.38
3 390 1,207 3,354 -64.01
4 125 0 850 -100
Total 4,217 6,814 -38.11

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கேடிஎம் பைக்குகள் என்று பார்த்தால், 200சிசி பைக்குகள் அதிகப்பட்சமாக 1,708 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 1,302 கேடிஎம் 250 பைக்குகளும், 1,207 கேடிஎம் 390 பைக்குகளும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் கேடிஎம் 390 பைக்குகள் கடந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 3,354 யூனிட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. கேடிஎம் 125 பைக்குகள் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, February 18, 2022, 11:19 [IST]
English summary
Ktm india sales exports jan 2022 details
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+