அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கினை பற்றி முழுமையாக தொடர்ந்து பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

கேடிஎம் இந்தியா நிறுவனம் இன்று (டிச.12) 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சரின் முந்தைய வெர்சனின் விலையும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் இருந்தது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

இந்த குவார்டர்-லிட்டர் பிரீமியம் கேடிஎம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இரு விதமான பெயிண்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிறத்தேர்வுகளில் கேடிஎம் எலக்ட்ரானிக் ஆரஞ்ச் மற்றும் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் நீலம் என்பவை அடங்குகின்றன. 2022 250 அட்வென்ச்சர் பைக் இந்தியா முழுவதும் உள்ள கேடிஎம் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் கிடைக்கும்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை மாதத்திற்கு ரூ.6,300 என்கிற குறைந்த மாதத்தவணையில் வாங்கலாம் என இந்த ஆஸ்திரியன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் கவனிக்கத்தக்க அளவில் பெருகி வருவதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

குறிப்பாக த்ரில்லிங்கான ரைடிங் மற்றும் அதி செயல்திறன்மிக்க பயணத்தை விரும்பக்கூடிய இளம் தலைமுறையினர் மத்தியில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், ஹூரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

2022 250 அட்வென்ச்சர் பைக்கில் சவுகரியமான நீண்ட தூர பயணத்திற்காக சிறப்பான காற்று இயக்கவியலுக்கு இணக்கமான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 250 அட்வென்ச்சர் பைக் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே எடை குறைவான ப்ளாட்ஃபாரத்தை உபயோகித்துதான் கேடிஎம் 390 அட்வென்ச்சரும் உருவாக்கப்படுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

டக்கர் ராலி போட்டியில் ஈடுப்படுத்தப்படும் கேடிஎம் 450 ராலி பைக்கினை அடிப்படையாக கொண்டு இந்த அட்வென்ச்சர் பைக்கினை கேடிஎம் நிறுவனம் தயாரிக்கிறது. முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் கூர்மையான தோற்றத்திலான எல்இடி ஹெட்லேம்ப்பை கொண்டுள்ளது. இதன் செதுக்கப்பட்டது போன்றதான வடிவத்தை கொண்ட பெட்ரோல் டேங்க் 14.5 லிட்டர் கொள்ளளவில் உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, பிளவுப்பட்ட இருக்கைகள், சறுக்கு தட்டு, எல்இடி டெயில்லைட் உள்ளிட்டவை இந்த கேடிஎம் பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாகும். புதிய 250 அட்வென்ச்சர் பைக்கின் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிளில் 248சிசி, 4-வால்வு, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

அதிகப்பட்சமாக 30 பிஎஸ் மற்றும் 24 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 200மிமீ ஆகும். அதாவது தரையில் இருந்து பைக்கின் அடித்தட்டு 200மிமீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது. இதனால் எந்தவொரு பாதைக்கு இந்த அட்வென்ச்சர் பைக்கினை பயமின்றி எடுத்து செல்லலாம்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

இதன் 19-இன்ச் முன் சக்கரத்திலும், 17-இன்ச் பின் சக்கரத்திலும் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க இந்த அட்வென்ச்சர் பைக்கில் முன்பக்கத்தில் 320மிமீ-லும், பின்பக்கத்தில் 230மிமீ-லும் பைப்ரே டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் போஸ்ச் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

புதிய 250 அட்வென்ச்சர் பைக்கில் சஸ்பென்ஷன் யூனிட்களாக முன்பக்கத்தில் 170மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 177மிமீ சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட புதிய 250 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் சுமீத் நரங் கருத்து தெரிவிக்கையில், "250 அட்வென்ச்சர் ஆனது டிராவல்-எண்டூரோ மோட்டார்சைக்கிள் ஆகும்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்!! ரூ.6,300 என்கிற மாதத்தவணையிலும் வாங்கலாம்!

இது தினசரி டார்மாக் பயணங்கள் மற்றும் வார இறுதியில் ஆஃப்-ரோடு அட்வென்ச்சர் பயணங்களில் சுவாரஸ்யமான சவாரி அனுபவத்தை வழங்கக்கூடியது. சமீபத்திய தொழிற்நுட்பத்துடன் டாப்-ஸ்பெக் கூறுகளை இணைத்து, கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் அட்வென்ச்சர் பிரிவில் ஒரு அளவுக்கோலை அமைத்துள்ளது." என்றார்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Ktm launched 250 adventure updated model in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X