இந்தியாவில் கேடிஎம் பைக்குகளுக்கு மவுசு குறையுதா? கடந்த மாதத்தில் விற்கப்பட்டவை இவ்வளவுதான்!!
கடந்த 2022 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உதாரணங்களாக ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சொல்லலாம். வெளிநாட்டை சேர்ந்த பிராண்ட்களுக்கும் இதே விதிதான்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பிரீமியம் தர பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் யமஹா, கேடிஎம் போன்ற நிறுவனங்களும் கணிசமாக விற்பனையை கண்டு வந்தன. ஆனால் இதில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் கடந்த 2022 ஜூன் மாத விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் சரிவை கண்டுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1,360 கேடிஎம் பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 2021 ஜுன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 57.82% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 3,224 கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2021 ஜூன் மாதத்துடன் மட்டுமின்றி, கடந்த 2022 மே மாத விற்பனை உடன் ஒப்பிடுகையிலும் கேடிஎம் பைக்குகளின் விற்பனை கடந்த மாதத்தில் 43.36% குறைந்துள்ளது.

ஏனென்றால், கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகளின் எண்ணிக்கை ஆனது 2,401 ஆகும். கடந்த ஜூன் மாதத்திலும் வழக்கம்போல் 200சிசி கேடிஎம் பைக்குகளே அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவற்றின் 2021 மே மற்றும் 2022 மே மாதங்களின் விற்பனை உடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் விற்பனை ஆனது 35% - 45% குறைந்துள்ளது.
| Rank | KTM Domestic | Jun-22 | Jun-21 | Growth (%) YoY |
| 1 | 200 | 767 | 1,404 | -45.37 |
| 2 | 390 | 374 | 432 | -13.43 |
| 3 | 250 | 218 | 536 | -59.33 |
| 4 | 125 | 1 | 852 | -99.88 |
| Total | 1,360 | 3,224 | -57.82 | |
| Rank | KTM Domestic | Jun-22 | May-22 | Growth (%) MoM |
| 1 | 200 | 767 | 1,197 | -35.92 |
| 2 | 390 | 374 | 558 | -32.97 |
| 3 | 250 | 218 | 642 | -66.04 |
| 4 | 125 | 1 | 4 | -75.00 |
| Total | 1,360 | 2,401 | -43.60 | |

அதாவது, 2021 ஜூன் மாதத்தில் 1,404 கேடிஎம் 200 பைக்குகளும், 2022 மே மாதத்தில் 1,197 கேடிஎம் 200 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 767 200சிசி கேடிஎம் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஜூன் மாதத்தில் கேடிஎம் 200 பைக்குகளின் விற்பனை ஆனது ஏறக்குறைய பாதியாக குறைந்துள்ளது.

200சிசி மாடல்களுக்கு அடுத்து 390சிசி கேடிஎம் பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கேடிஎம் 390 பைக்குகளின் எண்ணிக்கை 374 ஆகும். இது 432 கேடிஎம் 390 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.43%-மும், 558 கேடிஎம் 390 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 32.97%-மும் குறைவாகும்.
| Rank | KTM Domestic | Jun-22 | Jun-21 | Growth (%) YoY |
| 1 | 200 | 767 | 1,404 | -45.37 |
| 2 | 390 | 374 | 432 | -13.43 |
| 3 | 250 | 218 | 536 | -59.33 |
| 4 | 125 | 1 | 852 | -99.88 |
| Total | 1,360 | 3,224 | -57.82 | |
| Rank | KTM Domestic | Jun-22 | May-22 | Growth (%) MoM |
| 1 | 200 | 767 | 1,197 | -35.92 |
| 2 | 390 | 374 | 558 | -32.97 |
| 3 | 250 | 218 | 642 | -66.04 |
| 4 | 125 | 1 | 4 | -75.00 |
| Total | 1,360 | 2,401 | -43.60 | |

இதேபோன்று 250சிசி பைக்குகளின் விற்பனையும் கடந்த மாதத்தில் வழக்கத்தை காட்டிலும் பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த ஜூனில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் 250 பைக்குகளின் எண்ணிக்கை ஆனது 218 ஆகும். இவையெல்லாவற்றையும் விட கேடிஎம் 125 பைக்குகளின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் 125 பைக்குகளின் எண்ணிக்கை ஆனது வெறும் 1 ஆகும். ஆம் நீங்கள் சரியாகதான் வாசித்தீர்கள், வெறும் ஒன்றே.


Click it and Unblock the Notifications








