கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

கடந்த 2022 ஜூலை மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கேடிஎம் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனையாகி உள்ளன என்பதை பற்றியும் இனி பார்ப்போம்.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

இந்தியாவில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்டிற்கு பெரியதாக வரவேற்பு இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் அதில் விதிவிலக்காக இந்திய இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள மோட்டார்சைக்கிள் பிராண்ட், கேடிஎம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணியில் உள்ளது.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

இந்த கூட்டணி கொள்கையின்படி, புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தான் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள் பந்தய களத்திற்கு ஏற்ற தோற்றத்தில் (ஆர்சி), பேனல்கள் அதிகளவில் இல்லாத தோற்றத்தில் (ட்யூக்) மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப (அட்வென்ச்சர்) சந்தைப்படுத்தப்படுகின்றன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

இந்த 3 விதமான உடலமைப்புகளில் கேடிஎம் பைக்குகள் 125சிசி-யில் இருந்து 373சிசி வரையிலான என்ஜின்களுடன் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஜுலை மாத விற்பனையை பொறுத்தவரையில், இந்தியாவில் மொத்தம் 2,962 கேடிஎம் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூலை மாதத்தில் 4,181 கேடிஎம் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் கேடிஎம் பைக்குகள் விற்பனை கிட்டத்தட்ட 29.16% குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலும் வழக்கம்போல் மற்றவைகளை காட்டிலும் கேடிஎம் 200சிசி பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 200சிசி கேடிஎம் பைக்குகளாக ட்யூக் 200 மற்றும் ஆர்சி 200 மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

கடந்த ஜூலையில் மொத்தம் 1,607 கேடிஎம் 200 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூலை மாதத்தில் 2,019 கேடிஎம் 200 பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இதன்படி, வருடம்-வருடம் ஒப்பீடுகையில் கேடிஎம் 200 பைக்குகளின் விற்பனை ஆனது 20.41% குறைந்துள்ளது. 200சிசி பைக்குகளுக்கு அடுத்து கடந்த மாதத்தில் 250சிசி கேடிஎம் பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டுள்ளன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

கடந்த மாதத்தில் விற்கபட்ட கேடிஎம் 250சிசி பைக்குகளின் எண்ணிக்கை ஆனது 847 ஆகும். கேடிஎம் 200சிசி பைக்குகளை போல் 250சிசி பைக்குகளின் விற்பனையும் 2021 ஜூலை உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 15.47% குறைந்துள்ளது. ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் 1,002 கேடிஎம் 250சிசி பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!

250சிசி பைக்குகளுக்கு அடுத்து, கேடிஎம் 390சிசி பைக்குகள் அதிக பேரால் வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் விற்கப்பட்ட கேடிஎம் 390சிசி பைக்குகள் எண்ணிக்கை 494 ஆகும். இத்தனைக்கும், 2021 ஜூலையில் விற்பனையான கேடிஎம் 390சிசி பைக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் இது 20.19% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 411 கேடிஎம் 390சிசி பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

கேடிஎம் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு!! கடந்த ஜூலையில் விற்பனையானவை இவ்ளோ தான்!
Rank KTM Domestic July-22 July-21 Growth (%) YoY
1 200 1,607 2,019 -20.41
2 250 847 1,002 -15.47
3 390 494 411 20.19
4 125 14 749 -98.13
Rank KTM Exports July-22 July-21 Growth (%) YoY
1 390 3,696 2,791 32.43
2 200 1,840 2,075 -11.33
3 250 1,056 1,208 -12.58
4 125 1,010 758 33.25

125சிசி-யில் தற்போதைக்கு கேடிஎம் பைக்குகள் விற்பனையில் இல்லை. கடந்த ஜூலை மாதத்திலும் 14 கேடிஎம் 125சிசி பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜூலையில் 749 கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு, அந்த சமயத்தில் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் இருந்தது. இவ்வாறான காரணங்களால் கேடிஎம் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை குறைந்திருந்தாலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகளின் எண்ணிக்கை 11.27% அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 28, 2022, 7:30 [IST]
English summary
Ktm sells 2962 units in july 2022 sales break up
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+