கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா ?

மார்க்கெட்டில் ரூ50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம் வாருங்கள்.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

இந்தியாவில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு அதிகமாகியுள்ளது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதாகப் பல செய்திகள் வந்தாலும் பெட்ரோல் விலையேற்றம் காரணமாக மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், KOMAKI, Ampere, Avon, Kabira Mobility, Ather போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

பலர் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த செய்தியில் நாம் மார்கெட்டில் ரூ50,000க்கும் குறைவாக விற்பனையாகும் டாப் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றிக் காணப்போகிறோம்.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஹீரோ எலெக்ட்ரிக் டேஷ்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் டேஷ் (DASH) என்ற ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 25 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். ரூ49,999 என்ற விலையிலிருந்து இது விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ

இதே செக்மெண்டில் அடுத்ததாக விற்பனையாவது ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ என்ற ஸ்கூட்டர். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை பயணிக்கும். பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5-6 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இது அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதுவும் ரூ49,999 என்ற விலையிலிருந்து விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஆப்டிமா எல்ஏ

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா எல்ஏ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 50 கி.மீ. வரை பயணிக்கக்கூடியது. இது அதிகபட்ச வேகமாக 25 கி.மீ வரை செல்லும். இது மார்கெட்டில் ரூ47,490 முதல் விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

கொலிகியோ

இந்த செக்மெண்டில் அடுத்ததாக உள்ள ஸ்கூட்டர் கபீரா மொபிலிட்டி நிறுவனத்தின் கொலிகியோ என்ற ஸ்கூட்டர்தான். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை பயணிக்க கூடியது. இது அதிகபட்சமாக 24 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில், ரூ45,990 என்ற விலையில் விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

கோமகி XGT KM

கோமகி நிறுவனத்தின் XGT KM என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கி.மீ வரை பயணிக்கக்கூடியது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 6-8 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். மார்கெட்டில் இந்த ஸ்கூட்டர் ரூ42,500 என்ற விலையில் விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஆம்பியர் ரியோ

ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ என்ற ஸ்கூட்டர் ஊரக பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்கூட்டராக இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் வரை செல்லும். அதிகபட்சமாக 25 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் ஆக 8-10 மணி நேரம் வரை எடுத்து கொள்ளும்.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஒகினவா ரைஸ்

ஒகினவா நிறுவனம் ரைஸ் என்ற எலெக்டரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியள்ளது. இது முறை சார்ஜ் செய்தால் 66 கி.மீ வரை பயணிக்கும். அதிகபட்சமாக 25 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த ஸ்கூட்டர், ரூ42,328 என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகிறது.

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

Avon E-LITEDX

ஏவான் நிறுவனத்தின் E-LITEDX என்ற ஸ்கூட்டர் அசாம் மாநிலத்தில் மட்டுமே தற்போது விற்பனையாகி வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ பயணிக்கும். ஒரு முறை சார்ஜ் ஆக 4-6 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். அதிகபட்சமாக 24 கி.மீ வரை பயணிக்கும்

கம்மியான விலையிலேயே இவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குதா?

ஹீரோ ஃப்ளாஷ் இ5

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர் இரண்டு விதமான பேட்டரி வேரியண்டில் வருகிறது. அதில் VRLA பேட்டரி வேரியண்ட் ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஆக 4-5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இது மார்கெட்டில் ரூ39,550 என்ற விலையில் விற்பனையாகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 3, 2022, 19:50 [IST]
English summary
List of best electric scooter below 50k available in market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+