ஆக்டிவாவைவிட அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்! கண்கட்டின குதிரை மாதிரி இத்தன நாள் இருந்திருக்கோம்!

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இருசக்கர வாகனம் எது என கேட்டால் சின்ன குழந்தைங்ககூட அது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்னு சொல்லுவாங்க. அந்தளவிற்கு நாட்டு மக்களிடையே இந்த டூ-வீலருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்களுக்கு பிடித்தமான இருசக்கர வாகனமாக இருக்கின்றது.

குறிப்பாக, குறைந்த பராமரிப்பு செலவு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் குறைவான விலையில் ஸ்கூட்டருக்கான உதிரி பாகங்களை வாங்கிவிடலாம் என பல உள்ளன. இதுமட்டுமின்றி, இதன் மலிவு விலையும், அதிக மைலேஜ் தரும் திறனும் இந்த ஸ்கூட்டரை இந்தியர்கள் அதிகம் வாங்க காரணமாக இருக்கின்றது. அப்படினா இந்தியாவுல அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர் ஆக்டிவா மட்டும்தானா என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இதற்கான எங்களுடைய பதில் இல்லை என்பதே ஆகும்.

ஸ்கூட்டர்

ஆம், ஹோண்டா ஆக்டிவாவைக் காட்டிலும் பெஸ்டான மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களும் சந்தையில் உள்ளன. இந்தியர்கள் மிக பெரிய மைலேஜ் விரும்பிகள் என்பதை அறிந்து சில இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஸ்கூட்டர்கள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர் மாடல்களை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி
மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும்.

முதலில் ஹோண்டா ஆக்டிவாவின் மைலேஜ் விபரத்தை பார்க்கலாம். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா ஒரு லிட்டருக்கு 60 கிமீ மட்டுமே மைலேஜ் தருகின்றது. 110 சிசி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆக்டிவா 6ஜி மாடலின் ரேஞ்ஜ் திறனே இது ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி-யை ரூ. 75 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்குகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும்.

டிவிஎஸ் ஜுபிடர்
மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும்.

டிவிஎஸ் நிறுவனத்தின் பெரும்பாலான இருசக்கர வாகன மாடல்கள் அதிக மைலேஜிற்கு பெயர்போனவையாக இருக்கின்றன. அந்தவகையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கே டஃப் கொடுக்கும் மைலேஜ் தரும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜுபிடிர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு 62 கிமீ வரையில் மைலேஜ் தரும். 110 சிசி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஜுபிடரே இந்த சூப்பரான மைலேஜை வழங்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.4 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் இன்டெலிகோ எனும் ஸ்பெஷல் டெக்னாலஜியை டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இதுவே அதிக மைலேஜிற்கு வழி வகுக்கின்றது. ஐடில் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்ய இந்த அம்சம் உதவும்.

சுஸுகி அக்செஸ் 125
மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 64 கிமீ மைலேஜ் தரும்.

சுஸுகி நிறுவனத்தின் இந்த இருசக்கர வாகனம் ஒரு லிட்டருக்கு 64 கிமீ வரையில் மைலேஜ் தரும். இது அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர் மட்டுமே இல்லைங்க. நல்ல திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்காக 125 சிசி மோட்டார் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் ஆரம்ப விலை ரூ. 77,600 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். சுஸுகி அக்செஸ் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். ஆகையால், இதற்கு தனித்துவமான டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி அதிகம் பிரீமியம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவும் அக்செஸ் 125 காட்சியளிக்கின்றது.

யமஹா ரே இசட்ஆர் 125
மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும்.

யமஹா ரே இசட்ஆர் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சூப்பரான ஸ்கூட்டர்களில் ஒன்று என கூறலாம். இதற்கேற்ப அதிக மைலேஜை அது வழங்குகின்றது. லிட்டர் ஒன்றிற்கு 66 கிமீ வரை யமஹா ரே இசட்ஆர் 125 மைலேஜ் வழங்குகின்றது. இது 80 ஆயிரத்து 230 ரூபாவுக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிஎஸ்6 தர 125 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி திறனை 6,500 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த அதிகபட்சமாக மைலேஜ் திறனுக்காக மைல்டு ஹைபிரிட் அம்சம் ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தானியங்கி ஸ்டார்ட், ஸ்டாப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் நிறுத்தத்தின்போது எரிபொருள் வீணாவதைத் தவிர்க்க உதவும். இத்துடன், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் இயக்கத்தைத் துண்டிக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ப்ளூடூத் இணைப்பு, கன்னெக்ட் எக்ஸ் செல்போன் செயலி போன்ற சிறப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

யமஹா ஃபஸினோ 125
மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும்.

யமஹா நிறுவனத்தின் மற்றுமொரு அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டராக யமஹா ஃபஸினோ 125 இருக்கின்றது. மேலே பார்த்த ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 76,600 ஆகும். இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 125 சிசி மோட்டார் 8 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 21:19 [IST]
English summary
List of high mileage scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+