2022 இல் அறிமுகமான ரெட்ரோ பைக்குகளின் லிஸ்ட்... இத்தன வந்திருக்கிறது நம்ம கவனத்துக்கு தெரியாம பேச்சோப்பா!

நடப்பு 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்ரோ கிளாசிக் ரக இருசக்கர வாகனங்களின் பட்டியலையே இந்த பதிவில் பிரத்யேகமாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 5 பைக்குகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. வாருங்கள் இவை குறித்த விரிவான தகவலைக் காணலாம்.

2022 ஆம் ஆண்டின் முடிவை முன்னிட்டு, இந்த ஆண்டில் வாகன உலகம் சார்ந்து அரங்கேறிய சுவாரஷ்ய சம்பவங்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் தொகுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், டாப் 10 கார் அறிமுகம், 2022 இல் அதிக பாதுகாப்பானவை ரேட்டிங் பெற்ற கார் மாடல்கள் மற்றும் புதிதாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட போக்குவரத்து விதிகள் என பல தகவல்களை தொகுத்து வழங்கி உள்ளோம். இவற்றின் வரிசையில் புதிதாக நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்ரோ கிளாசிக் இருசக்கர வாகனங்களின் பட்டியலை வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரெட்ரோ பைக்

ராயல் என்பீல்டு ஹண்டர் 350:

இந்தியர்களின் கவனத்தை வெகு நாட்களாக ஈர்த்த வந்த மோட்டார்சைக்கிள் மாடலே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த ஹண்டர் 350 ஆகும். இதனை நடப்பாண்டிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. விற்பனையில் இந்த பைக் மாடல் தற்போது புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. தனது மூத்த சகோதரன்களான கிளாசிக் மற்றும் புல்லட் ஆகியவற்றை போல் இதுவும் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகஸ்டு மாதமே இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தனது புகழ்பெற்ற ஜே பிளாட்பாரத்தில் வைத்தே இந்த பைக்கை நிறுவனம் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 1.49 லட்சம் ஆகும். நிறுவனத்தின் அனதை்து தயாரிப்புகளைக் காட்டிலும் விலை குறைவான பைக் மாடல் இதுவே ஆகும். ரெட்ரோ ஃபேக்டரி, மெட்ரோ டேப்பர் மற்றும் மெட்ரோ ரிபெல் என மூன்று விதமான நிற தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டாரே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber)

யாரும் எதிர்பார்த்திராத ஓர் சர்ப்ரைசாக ஜாவாவின் இந்த பைக் மாடல் இருக்கின்றது. ஆமாங்க, யாரும் எதிர்பார்த்திராத நேரத்திலேயே ஜாவா நிறுவனம் அதன் 42 பாபர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகம் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே அரங்கேறியது. இதற்கு அறிமுகமாக ரூ. 2.06 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைவான விலைக் கொண்ட பாபர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்த பைக்கில் எல்சிடி கன்சோல், ஃப்ளோட்டிங் ரக இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையை இரு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். 334 சிசி மோட்டாரே ஜாவா 42 பாபர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இம்மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Yezdi Scrambler)

யெஸ்டி நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் எனும் பெயரிலேயே ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை இந்த ஆண்டிலேயே தொடக்க காலத்தில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் அட்டகாசமான சிறப்பு அணிகலன்கள் மற்றும் நவீன கால அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்ட ரெட்ரோ கால மோட்டார்சைக்கிள் இதுவாகும். இந்த பைக்கில் ஸ்கிராம்ப்ளர் உணர்வைக் கொடுக்கும் விதமாக குறைவான பாடி பேனல்கள், உயரமான ஃபென்டர், அப்ஸ்வெப்ட் எக்சாஸ்ட் மற்றும் ரிப்பட் ரக இருக்கை உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், பைக்கில் சிங்கிள் பாட் வட்ட வடிவ திரை எல்சிடி தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி, ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வழங்கும். இத்துடன்,
ரோட், ஆஃப்-ரோட் மற்றும் மழை என மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. எஞ்ஜினை பொருத்தவரை 334 சிசி திறன் கொண்ட டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லிக்யூடு-கூல்டு எஞ்ஜின் ஆகும். 28.7 பிஎச்பி பவரையும், 28.2 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கீவே எஸ்ஆர் 125 (Keeway SR125)

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் ரக மோட்டார்சைக்கிளுக்கு போட்டி அளிக்கும் விதமாக சீன நிறுவனமான கீவே இந்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வந்த இருசக்கர வாகன மாடலே இந்த எஸ்ஆர் 125 ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.19 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் இந்நிறுவனம் கால் தடம் பதித்து சில மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த இருசக்கர வாகனத்தில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஎச்சி 2-வால்வ் ஏர் கூல்டு மோட்டாரே பொருத்தப்பட்டுது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9.7 எச்பி பவரையும், 8.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக இப்பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒற்றை துண்டு அமைப்பிலான இருக்கை, வட்ட வடிவ ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் என பல அம்சங்கள் எஸ்ஆர் 125க்கு அழகு சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175)

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிய மிகக் குறைவான விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கின்றது. இது விற்பனைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. இந்த பைக்கின் விலை ரூ. 1.47 லட்சம் ஆகும். இதை விட குறைவான விலையில் நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பையும் இந்தியாவில் வாங்க முடியாது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாகவே இந்தியாவில் களமிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 28, 2022, 16:56 [IST]
English summary
List of retro twowheelers launched in 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+