தீபாவளிக்குப் பட்டாசு வாங்கறதுக்கு பதிலா இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்னை வாங்கலாம்!
தீபாவளிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் ஐடியாவில் இருக்கிறீர்களா? உங்களுக்காக டாப் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மக்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. இதனால் பலர் புதிதாக ஸ்கூட்டர் வாங்க யோசித்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஒரு முக்கியமான ஒரு அப்ஷனாக வைத்திருக்கிறார்கள். இதனால் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 52,999 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள டாப் 10 எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்களே ஓட்டு மொத்தமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் 92 சதவீத பங்கை வைத்திருக்கின்றனர். இதில் ஓலா முதல் இடத்திலும், ஓகினவா இரண்டாவது இடத்திலும், ஹீரோ எலெக்ட்ரிக் 3வது இடத்திலும் இருக்கிறது. இந்த தீபாவளிக்குப் பலர் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றித் தான் காணப்போகிறோம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இரண்டும் வேறு வேறு கான்ஃபிகரேஷனை கொண்டது. எஸ் 1 ஸ்கூட்டரை அந்நிறுவனத்தின் பேஸ் வேரியன்ட் இது 121 கி.மீ ரேஞ்ச் இதுவே எஸ் 1 ப்ரோ அதிக ஸ்பெக் கொண்டது. இது முழு சார்ஜில் 181 கி.மீ இயங்கும் திறன் கொண்டது. இதில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் ரூ1,27,670 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதில் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

ஸ்பீடு
ஓலா எஸ்1 ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டி பிடிக்கும் இதுவே எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 115 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஹைப்பர் சார்ஜர்களை வழங்குகிறது. இது 0-50 சதவீத சார்ஜை வெறும் 18 நிமிடத்தில் ஏற்றும் திறன் கொண்டது. இந்த சார்ஜ் உடன் மொத்த ரேஞ்ஜில் பாதியைக் கடக்க முடியும்.

ஓகினவா ஓகி90
ஓகினாவா நிறுவனம் அதிக திறன் கொண்ட ஸ்கூட்டர் இந்த ஓகி 90 தான். இந்த ஸ்கூட்டரில் 3800 வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 72 வாட்ஸ் 50 ஆர்ம்ஸ் லித்தியம் அயான் மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. இது கழட்டி மாட்டும் அம்சத்துடன் இருக்கிற. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை 1 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிவிடலாம். ஆனால் முழுமையாக சார்ஜ் ஏற 3-4 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் எக்கோ, ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் 0-90 கி.மீ வேகத்தை வெறும் 10 நொடியில் எட்டி பிடிகஅகும். இந்த ஸ்கூட்டர் எக்கோ மோடில் 55-60 கி.மீ வேகம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் 85-90 கி.மீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டரில் முழு சார்பில் 160 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த
160 கி.மீ ரேஞ்ச் ஸ்போர்ட்ஸ் மோடில் தான் எக்கோ மோடில் 200 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ரூ1.21 லட்சம் என்ற விலையில் விற்பனையில் உள்ளது.

ஹிரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா சிஎக்ஸ்
ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா சிஎக்ஸ் ஸ்கூட்டர் ரூ62,355 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் 0.55 கிலோ வாட் பவர் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முன்பக்கம், பின்பக்கம் இரண்டு இடத்திலும் டிரம் பிரேக் உள்ளது. இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படும் படி கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.

இந்த ஸ்கூட்டர் மொத்தம் 2 வேரியன்டில் கிடைக்கிறது சிட்டி ஸ்பீடு (HX)மற்றும் கம்ஃபோர்ட்டு ஸ்பீடு (LX) என இரண்டு வேரியன்டில் கிடைக்கிறது. இதில்சிட்டி ஸ்பீடு அதிவேக ஸ்கூட்டராக உள்ளது. இதில் இரண்டு பேட்டரி ஆப்ஷன் இருக்கிறது. சிங்கிள் பேட்டரி மற்றும் டூயல் பேட்டரி செட்டப் உள்ளது. இதில் சிங்கிள் பேட்டரி செப்டப் 82 கி.மீ ரேஞ்சையும், டூயல் பேட்டரி செட்டல்ப 122 கி.மீ ரேஞ்சையும் தருகிறது. அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 45 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த தீபாவளிக்கு நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் ஐடியாவில் இருந்தால் உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப இந்த 3ல் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தாராளமாகத் தேர்வு செய்யலாம். நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஒர்த்தாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








