ஒன்னல்ல, இரண்டல்ல.. புதுசா 100ஷோரூம்களை திறக்க பிரபல நிறுவனம் திட்டம்! இப்பவே தொடை நடங்கும் போட்டி நிறுவனங்கள்
புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தியாளரான எல்எம்எல் நிறுவனம் நாடு முழுவதும் 100 புதிய ஷோரூம்களை அமைக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்தும், நிறுவனம் முதலில் அறிமுகம் செய்ய உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
எல்எம்எல், இந்த பெயர் 2கே கிட்ஸ்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களுக்கு இது மறக்க முடியாத பெயராகும். கடந்த காலங்களில் இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் கொடிக் கட்டி பறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது, கடந்த 2017 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தனது அனைத்து வர்த்த பணிகளையும் நிறுத்திக் கொண்டது. தொடர்ந்து, தொழிற்சாலையையும் இழுத்து மூடியது.

நிறுவனத்தின் இந்த செயல் அந்த காலகட்டத்தில் எல்எம்எல் நிறுவனத்தின் தயாரிப்பை அதிகம் நேசித்த மக்களைக் கடும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியது. இந்த நிலையிலேயே எல்எம்எல் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக கடந்த மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் எல்எம்எல் இருசக்கர வாகன பிரியர்கள் முகத்தியில் மகிழ்ச்சியை மலர செய்தது. இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக நிறுவனம் புதிதாக மூன்று இருசக்கர வாகன மாடல்களை நாட்டில் அறிமுகப்படுத்தி வைத்தது.
ஸ்டார், மூன்ஷாட் மற்றும் ஓரியன் ஆகிய இருசக்கர வாகனங்களையே இந்தியாவில் எல்எம்எல் நிறுவனம் வெளியீடு செய்தது. இவை அனைத்தும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாகும். ஆமாங்க, இந்த முறை எல்எம்எல் நிறுவனம் முழு மின் வாகன உற்பத்தியாளராகவே இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்வதற்கு ஏதுவாகவே அந்த நிறுவனம் நாடு முழுவதும் விற்பனையகங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.
சுமார் 100 ஷோரூம்களைத் திறக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (நவம்பர் 29) வெளியாகிய தகவலில் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே நிறுவனம் 100 ஷோரூம்களையும் நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை அமைக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், ஷோரூம்களை அமைக்கும் பணியில் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.
இந்தியாவில் மிகவும் ஸ்ட்ராங்கான நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கே நல்ல மதிப்பு நிலவுகின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வளைத்து போடும் வகையில் நாடு முழுவதும் ஷோரூம்களை திறக்க திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கனவே நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புக்கிங்கை ஏற்கும் பணிகளை தொடங்கிவிட்டது. இதைத்தொடர்ந்தே அவற்றை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியிலும் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனை புக் செய்யும் விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன் பதிவு செய்து கொள்ள முடியும். இதனை பூஜ்ஜியம் கட்டணத்திலேயே செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஆயிரக் கணக்கான ரூபாயை புக்கிங்கிற்காக வசூலிக்கும். ஆனால், எல்எம்எல் நிறுவனம் இந்த முன் தொகையைத் தவிர்த்திருக்கின்றது. எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்போர்ட்டி மேக்ஸி ரக வாகனமாக உருவாக்கியிருக்கின்றது.
இதன் கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக டூயல் டோன் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஷார்ப்பான ஹெட்லேம்ப் க்ளஸ்டர், ஏப்ரோன்கள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, கருப்பு நிற அலாய் வீல்கள், பிரத்யேக திரை, டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல பிரத்யேக சிறப்பு வசதிகள் கொண்டதாக எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது.
அந்தவகையில், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எல்இடி லைட்டுகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, அட்ஜஸ்டபிள் இருக்கை, இன்டரேக்டீவ் திரை, ஃபோட்டே சென்சிட்டீவ் ஹெட்லேம்ப் என பற்பல அம்சங்கள் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இந்த வாகனத்தை மேக்ஸி-ரகத்தில் எல்எம்எல் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதற்காக கொழு-கொழு தோற்றத்தை நிறுவனம் கையாண்டுள்ளது.
இப்போதைக்கு மேலே பார்த்த தகவலே வாகனம் பற்றி தெரிய வந்திருக்கின்றது. இன்னும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியிடப்படாத சூழலே காணப்படுகின்றது. குறிப்பாக, என்ன மாதிரியான பேட்டரி பேக், மின்சார மோட்டார் போன்றவை உடன் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தயாராகி வருகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த விபரம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








