ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

பிரபல எல்எம்எல் (LML) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் தனது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

புகழ்பெற்ற எல்எம்எல் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் வாகன விற்பனையில் களமிறங்கப் போவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அண்மையில் ஸ்டார், மூன் லைட்ஷாட் மற்றும் ஓரியன் ஆகிய இருசக்கர வாகனங்களை வெளியீடு செய்தது.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

இவை அனைத்தும் மின்சார இருசக்கர வாகனங்களாகும். ஆமாங்க, எல்எம்எல் நிறுவனம் இந்த முறை முழுமையான மின் வாகன உற்பத்தியாளராக மட்டுமே இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதனையே சமீபத்திய வெளியீடுகளான ஸ்டார், மூன்ஷாட் மற்றும் ஓரியன் உள்ளிட்டவையும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

இந்த நிலையில், நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புக்கிங்கை ஏற்கும் பணிகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி, தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எல்எம்எல் நிறுவனம் தயார் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

தற்போது எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே புக்கிங்கை தொடங்கியிருக்கின்றது. இதனை புக் செய்யும் விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சில தகவல்களை உள்ளீடு செய்வதன் வாயிலாக முன் பதிவு செய்து கொள்ள முடியும். இதனை பூஜ்ஜியம் கட்டணத்திலேயே செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

ஆமாங்க, பூஜ்ஜியம் கட்டணத்தில் எல்எம்எல் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவுகளை ஏற்க தொடங்கியிருக்கின்றது. பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஆயிரக் கணக்கான ரூபாயை புக்கிங்கிற்காக வசூலிக்கும். ஆனால், எல்எம்எல் நிறுவனம் இந்த செயலை தவிர்த்திருக்கின்றது. ஆகையால், பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான புக்கிங்கை தொடங்கியிருப்பதன் வாயிலாக, நிறுவனம் இந்த வாகனத்தையே முதலில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த வாகனத்தை பற்றிய முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, என்ன மாதிரியாான பேட்டரி பேக், மின்சார மோட்டார் போன்றவை ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

அதேவேலையில், விரைவில் மின்சார வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாக உள்ளன. எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்போர்ட்டி மேக்ஸி ரக வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. இதன் கவர்ச்சிக்காக இரு விதமான வண்ணங்களையும், ஷார்ப்பான ஹெட்லேம்ப் க்ளஸ்டரையும், ஏப்ரோன்களையும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

இதுமட்டுமின்றி, கருப்பு நிற அலாய் வீல்கள், பிரத்யேக திரை, டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல பிரத்யேக சிறப்பு வசதிகள் கொண்டதாக எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹீரோ விடா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும். எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாக இன்னும் பல மின்சார வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே... ஒரு பைசா கூட இல்லாம LML இ-ஸ்கூட்டரை புக் செய்யலாம்!

இதன் ஆரம்பப் புள்ளியாகவே இன்னும் ஒரு சில தினங்களில் ஸ்டாரின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. இந்த வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்டபிள் இருக்கை, இன்டெராக்டீவ் திரை, ஃபோட்டேசென்சிட்டீவ் ஹெட்லேம்ப் மற்றும் பல்கியான தோற்றம் ஆகியவற்றையும் எல்எம்எல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எல்இடி லைட்டுகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி என பற்பல அம்சங்களும் ஸ்டாரில் இடம் பெற இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 2, 2022, 10:13 [IST]
English summary
Lml opens booking for star e scooter at zero cost
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+