மீண்டும் கால்தடம் பதிக்க தயாரானது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்! செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்

பழம்பெரும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான எல்எம்எல் (LML) மீண்டும் இந்த உலகில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நிறுவனம் விரைவில் புதுமுக கான்செப்ட் வாகனங்களை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எப்போது? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

பழம்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான எல்எம்எல் மறுபிறவி எடுக்க இருக்கின்றது. ஆமாங்க, நிறுவனம் வெகுவிரைவில் மீண்டும் இந்த உலகில் கால் தடம் இருக்கின்றது. இதுகுறித்த தகவல்கள் அண்மைக் காலங்களாகவே வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதற்காக நிறுவனம் ஏற்கனவே சில வாகன உற்பத்தியாளர்களுடன் கூட்டணியைத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

இந்த நிலையிலேயே கூடுதல் ஓர் முக்கியமான தகவலும் தற்போது வெளியாகியிருக்கின்றது. நிறுவனம் விரைவில் சில கான்செப்ட் இருசக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவே தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றனன. இதுமட்டுமில்லைங்க, நிறுவனம் எப்போது?, எத்தனை கான்செப்ட் வாகனங்களை வெளியீடு செய்ய இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். விரிவான பதிவிற்குள் போகலாம் வாங்க.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

70ஸ் மற்றும் 80ஸ்களில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருந்த நிறுவனங்களில் எல்எம்எல் (LML)-ம் ஒன்று. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரையே மையமாகக் கொண்டு இது இயங்கி வந்தது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக மொபட், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இருந்தன. அப்போதைய காலகட்டத்தில் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு எல்எம்எல்-ஐ ஓரங்கட்ட செய்துவிட்டது. இதன் விளைவாக நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை என அது மேற்கொண்டு வந்த அனைத்து பணிகளையும் கை கழுவியது. இந்த சம்பவம் அரங்கேறி பல ஆண்டுகள் ஆகின்ற நிலையில், தற்போது மீண்டும் வாகனத்துறையில் கால் தடம் பதிக்கும் எண்ணத்தில் எல்எம்எல் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் ஆரம்ப புள்ளியாக அது தயாரித்திருக்கும் மூன்று கான்செப்ட் வாகன மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

இதற்கான அறிமுக நாளாக வரும் செப்டம்பர் 29 தேதியையே நிறுவனம் தேர்வு செய்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிறுவனம் என்ன மாதிரியான வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது?, அவற்றில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகவில்லை.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

அதேவேலையில் நிறுவனம் பொதுபார்வைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் இந்த அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வாகனங்கள் அனைத்தும் நகர்புறங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவைகுறித்த முழு விபரங்களும் வரும் செப்டம்பர் 29லேயே தெரிய வரும்.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

மறு வருகை மற்றும் புதுமுக கான்செப்ட் மாடல்களின் வெளியீடு குறித்து எல்எம்எல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான யோகேஷ் பாட்டியா கூறியதாவது, "நாங்கள் இந்த உலகில் மீண்டும் கால் தடம் பதிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். முதல் 3 மின்சார வாகன கான்செப்டுகளை வரும் 29ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மின் மயமாக்கல் சகாப்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம்" என்றார்.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

மேலும் பேசிய அவர், "எங்களின் புதுமுக மின் வாகனங்கள் பெஸ்ட்-இன்-கிளாஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வரும். உலகளவில் நுகர்வோர்களை இந்த வாகனம் வெகுவாக கவரும்" என தெரிவித்தார். பாட்டியாவின் இந்த கருத்துகளால் எல்எம்எல் நிறுவனத்தின் புதுமுக வாகனங்கள் டிசைன் மற்றும் சிறப்பு வசதிகளில் சூப்பரானதாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் கால் தடம் பதிக்க தயாராகியது பழம்பெரும் நிறுவனம் எல்எம்எல்... செப்டம்பரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தபோவதாக அறிவிப்பு!

ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நிறுவனத்தின் புதுமுக வாகனங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினாவா, ஏத்தர், ஓலா, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கே நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு போட்டியளிக்கும் வகையில் எல்எம்எல் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களின் வருகை அமைய இருக்கின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 31, 2022, 9:52 [IST]
English summary
Lml to reveal 3 concept electric two wheeler on coming september 29
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+