எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்கும் ஐடியாவே இல்ல! பிரபல நிறுவனத்தின் அதிரடியால் கஷ்டமர்கள் சோகம்!
முன்னணி நிறுவனம் ஒன்று இப்போதைக்கு இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டமே இல்லை என அறிவித்துள்ளது. பிரபல நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகன உலகின் சூப்பர் ஸ்டாராக எலெக்ட்ரிக் வாகனங்கள் மாறியுள்ளன. இவற்றிற்கு கடந்த சில மாதங்களாகவே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக சாலைகளில் அதிகளவில் மின்சார வாகனங்கள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. முன்பு ஊருக்கு ஒன்று என காட்சியளித்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது, சிக்னலுக்கு சிக்னல் ஒன்று-இரண்டு என காட்சியளிக்க தொடங்கியுள்ளன.

அந்தளவிற்கு மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு தங்களுக்கு இல்லை என அதிரடியாக அறிவித்திருக்கின்றது.

முன்னணி நிறுவனத்தின் இந்த தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனமே இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட நிறுவனம் ஆகும். மிக சமீபத்தில் நடைபெற்ற இணைய வழி செய்தியாளர்கள் கூட்டத்தில் நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் விவசாய உபகரண தயாரிப்பு பிரிவின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அதிகம் லாபம் வழங்கும் பிரிவான மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு பணியில் நிறுவனம் களமிறங்கப் போவதில்லை என தெரிவித்தார். நாங்கள் பயணிகள் மற்றும் வணிக வாகன உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்" என தெரிவித்தார்.

மஹிந்திரா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமான பியூஜியோட் மோட்டார் சைக்கிள்ல் (Peugeot Motorcycles) நிறுவனத்தின் நூறு சதவீத பங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கையகப்படுத்தியது. ஆகையால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை, குறிப்பாக, பியூஜியோட்டின் எலெக்ட்ரிக் வாகனங்களை வெகு விரைவில் இந்திய சந்தையில் மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நிறுவனத்திடம் இதுமாதிரியான எந்தவொரு திட்டமும் இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. அதேநேரத்தில், பியூஜியோட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்குக் களமிறக்கும் திட்டத்தில் மஹிந்திரா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் சற்றே விலகியுள்ளது. இந்த நிலையிலேயே நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் இருந்து விலகியிருக்க இருப்பது தெரிய வந்துள்ளது. அதேவேலையில், எப்போதுதான் இந்த பிரிவில் கால் தடம் பதிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, " தற்போது தங்கள் நிறுவனம் பிதம்புரா ஆலையில் ஹீரோ எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதை அடுத்து அங்கு பியூஜியோட் நிறுவனத்தின் இ-லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவிற்கு தயாரிக்கப்படும். ஆனால், இதனை உடனே மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இப்போதைக்கு இல்லை" என மிக தெளிவாக ராஜேஷ் ஜெஜூரிகர் கூறினார். ஆகையால், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், இதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில், மஹிந்திரா நிறுவனம் மின்சார ஆட்டோரிக்சா மற்றும் கார்களை தயாரிப்பதில் அதி தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் காராக வெகுவிரைவில் எக்ஸ்யூவி 300 கார் அடிப்படையிலான இ-எக்ஸ்யூவி 300 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது இந்த காரை தீவிர சோதனையோட்டத்திற்கு மஹிந்திரா நிறுவனம் உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், கூடிய விலைவில் இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் மஹிந்திரா இ-எக்ஸ்யூவி 300 கார் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. முன்னதாக நடப்பு நிதியாண்டின் மூன்று அல்லது நான்காம் காலாண்டு பகுதியில் அறிமுகமாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








