மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப்... ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக்... நடந்தது இது தான்

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகமாக இருசக்கர வாகனத்தை விற்பனை செய்த நிறுவனங்கள் எது எவ்வளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளன? முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

இந்தியாவில் கடந்த மே மாதம் விற்பனையான டூவீலர்கள் குறித்த ரிப்போர்ட்டை Federation of Automobile Dealers Associations (FADA) வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் மட்டும் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 12,22,994 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 ஆண்டு வெறும் 4,10,871 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த மாதம் எலெக்டரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

வழக்கம் போல இந்த முறையும் அதிகமான இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ததில் ஹீரோ நிறுவனம் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 4,59,245 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 1,92,897 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது ஒரே ஆண்டில் 138.08 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனம் மார்கெட்டில் 37.55 சதவீத பங்கை வைத்துள்ளது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 2,91,535 வாகனங்கள் விற்பனையானது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 78,360 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒரே ஆண்டில் 272.05 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இது மார்கெட்டில் 23.84 சதவீத பங்கை வைத்திருக்கிறது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

பட்டியலில் மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1,69,621 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 57,659 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஒர ஆண்டில் 194.18 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மார்க்கெட்டில் 13.87 சதவீத பங்கை வைத்துள்ளது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

அடுத்ததாக பஜாஜ் நிறுவனம் மொத்தம் 1,23,083 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் வெறும் 45,557 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 170.17 சதவீத வளர்ச்சியாகும். பட்டியலில் 5வது இடத்தில் யமஹா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 46,055 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த மே மாதம் 9,186 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்நிறுவனம் மார்க்கெட்டில் 3.77 சதவீதம் பங்கை வகித்துள்ளது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

பட்டியலில் 6வது இடத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இருக்கிறது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் மொத்தம் 45,671 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு மே மாதம் இந்நிறுவனம் மொத்தம் 14,977 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 7வது இடத்தில் சுஸூகி நிறுவனம் இருக்கிறது. கடந்த மே மாதம் 42,300 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் மொத்தம் 9,478 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

பட்டியலில் 8வது இடத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஓகினாவா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 9,303 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 217 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அடுத்ததாக 9225 வாகனங்களை விற்பனை செய்து ஒன்பதாவது இடத்தில் ஓலா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவேயில்லை.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

பட்டியலில் 10வது இடத்தில் ஆம்பயர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 5836 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 147வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 11வது இடத்தில் பியாஜியோ, 12வது இடத்தில் ஜாவா யெஸ்டி, 13 இடத்தில் ஏத்தர், 14 இடத்தில் ஹீரோ எலெக்ட்ரிக், 15வது இடத்தில் ரிவோல்ட், 16 இடத்தில் ப்யூர் இவி ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது.

மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் . . . ஆனால் டம்மீ பீஸ் ஆன ஹீரோ எலெக்டரிக் . . .

இந்த பட்டியலில் கடந்த 2021 மே மாத விற்பனையைப் பொருத்தவரை எல்லா நிறுவனங்களும் அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கடந்த 2021 மே மாதம் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா இருந்தது. அதனால் இந்தாண்டு நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது ஹீரோ, பஜாஜ், யமஹா, ஏத்தர், ரிவோல்ட்.ஆகிய நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 9, 2022, 20:20 [IST]
English summary
May 2022 Two Wheeler sales Report Brand wise top list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+