எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

ராயல் என்பீல்டு நிறுவனம் எடுத்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக புல்லட் பைக்கை புதிய அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான பைக் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு (Royal Enfield)திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 (Meteor 350), புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350) மற்றும் ஹண்டர் 350 (Hunter 350) ஆகிய பைக்குகளுக்கு இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு காணப்படுகிறது. எனவே 350 சிசி செக்மெண்ட்டின் மீது ராயல் என்பீல்டு நிறுவனம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

இதன் ஒரு பகுதியாக அப்டேட் செய்யப்பட்ட புதிய கிளாசிக் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மேலும் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு புத்தம் புதிய ஹண்டர் 350 பைக்கையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த பைக்குகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

இதனால் உற்சாகமடைந்துள்ள ராயல் என்பீல்டு நிறுவனம், புல்லட் 350 பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பல முறை கேமராவின் கண்களில் புதிய தலைமுறை புல்லட் 350 பைக் சிக்கி விட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் வெகு விரைவிலேயே விற்பனைக்கு வரவிருப்பதை இந்த புகைப்படங்கள் நமக்கு உணர்த்துகின்றன. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம்.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

எப்படியும் இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு வந்து விடும். புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கிற்கும், தற்போது விற்பனையில் உள்ள மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளை போன்று, ''ட்வின் க்ராடில் சேஸிஸ்'' (Twin Cradle Chassis) அடிப்படையில்தான் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கையும் ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் புதிய புல்லட் 350 பைக்கில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு, எஸ்ஓஹெச்சி இன்ஜின் வழங்கப்படலாம்.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம். அதே சமயம் இந்த பைக்கின் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களில், ஹாலோஜன் பல்புகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

மேலும் முன் மற்றும் பின் பகுதிகளில் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகிய வசதிகளையும் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய தலைமுறை புல்லட் 350 பைக் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கைதான் முழுமையாக ஒங்கியுள்ளது. இந்த ஆதிக்கத்தை இன்னும் அதிகரித்து கொள்ள வேண்டும் என ராயல் என்பீல்டு சபதம் எடுத்துள்ளது. எனவே புதிய புல்லட் 350 பைக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் ராயல் என்பீல்டு நிறுவனம் பார்த்து பார்த்து மெருகேற்றி வருகிறது.

எடுத்த சபதத்தை நிறைவேற்றும் ராயல் என்பீல்டு! புல்லட் பைக் புதிய அவதாரத்தில் வருகிறது! எல்லாத்தையும் மாத்தறாங்க

புதிய தலைமுறை புல்லட் 350 பைக் தவிர, இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை உருவாக்கும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது மிகவும் தீவிரமாக செய்து வருகிறது. இந்த பைக்குகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, October 14, 2022, 14:20 [IST]
English summary
More details about new gen royal enfield bullet 350
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+