குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் 250 சிசி பைக்குகள்.. 150 சிசி டூ-வீலர் எல்லாம் இதுக்கு முன்னாடி வேஸ்டு

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் விலை குறைவான 250 சிசி பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

125சிசி மற்றும் 150 சிசி இருசக்கர வாகனங்களை ஓட்டி உங்களுக்கு போர் அடிச்சிருச்சா. நம்ம சந்தையில் சூப்பரான ரைடிங் அனுபவத்தை வழங்கும் 250 சிசி பைக்குகளும் விற்பனையில் இருக்கின்றன. ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 250 சிசி பைக்குகளும் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

க்யூஜே மோட்டார் எஸ்ஆர்சி 250 (QJMotor SRC 250)

விலை: ரூ. 1,99,000

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமே க்யூஜே மோட்டார். இந்த நிறுவனம் நேற்றைய (நவம்பர் 17) தினமே இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனது கால் தடத்தைப் பதித்தது. ஆரம்பத்தையே அமர்க்களமாக்கும் விதமாக நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் நான்கு புதுமுக இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

அவற்றில் ஒன்றே எஸ்ஆர்சி 250 மாடல். இது ஓர் ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இதுவே நம்முடைய லிஸ்டில் அதிக விலைக் கொண்ட இருசக்கர வாகனம் ஆகும். இந்த வாகனத்தை சீன நிறுவனம் இந்தியாவில் ரூ. 1.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கில், ஆயில் கூல்டு, 249 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.4 எச்பி பவரையும், 17 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மிக சிறந்த பவரை வெளியேற்றும் மோட்டாரகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் சிறப்பு கருவிகளாக 280 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் க்யூஜே வழங்கியிருக்கின்றது. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் மற்றும் அட்ஜெஸ்டபிள் ஷாக் உள்ளிட்ட சஸ்பென்ஷன்களும் சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

சுஸுகி ஜிக்ஸெர் 250 (Suzuki Gixxer 250) மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 (Gixxer SF 250)

விலை: ரூ. 1,81,400

நம்முடைய இந்த 250 சிசி இருசக்கர வாகன பட்டியலில் இரண்டாவது அதிகம் விலைக் கொண்ட 250சிசி பைக்காக சுஸுகி ஜிக்ஸெர் 250 இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, 250 சிசி இருசக்கர வாகன சந்தையில் இந்த பைக்கிற்கும் மக்கள் மத்தியில் கணிசமான அளவில் டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

இது சிறப்பம்சங்கள் நிறைந்த இருசக்கர வாகனமாகும். முரட்டுத்தனமான தோற்றம், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேசன், சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் இன்டர் லாக், டூயல் சேனல் ஏபிஎஸ், ட்வின் மஃப்ளர், பெரிய டிஸ்க் பிரேக்குகள் என எக்கசக்க அம்சங்களை இந்த பைக்கில் சுஸுகி வழங்கியிருக்கின்றது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

இந்த பைக்கை முற்றிலும் கவர்ச்சியான மற்றும் அழகான வெர்ஷனிலும் சுஸுகி விற்பனைக்கு வழங்குகின்றது. அது சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் விலை ரூ. 1,96,336 ஆகும். இந்த வெர்ஷனில் சிறப்பு தேர்வு ஒன்றும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோ ஜிபி (Gixxer SF 250 Moto GP) எடிசனே அது ஆகும்.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

இது மற்றவற்றைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், விலையும் சற்று அதிகம். 1,97,137 ரூபாய்க்கே இப்பைக் விற்கப்படுகின்றது. இந்த அனைத்து பைக்குகளிலும் சுஸுகி நிறுவனம் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. 26.5 எச்பி மற்றும் 22.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே ஜிக்ஸெர் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

பஜாஜ் டோமினோர் 250 (Bajaj Dominar 250)

விலை: ரூ. 1,75,002

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் 250 சிசி பைக்குகளிலேயே மிக அதிக பவரை வெளியேற்றக் கூடியதாக பஜாஜ் டோமினோர் 250 இருக்கின்றது. இந்த பைக் 27 எச்பி மற்றும் 23.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக நிறுவனம் லிக்யூடு கூல்டு எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இதே டோமினார் 400 எனும் பெயரில் மிக மிக அதிக பவரை வெளியேற்றக் கூடிய பைக்காகவும் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

யமஹா எஃப்இசட் 25 (Yamaha FZ25)

விலை: ரூ. 1,49,439

யமஹா எஃப்இசட்25, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட 250 சிசி பைக்குகளில் ஒன்றாகும். மேலும், நாட்டின் இரண்டாவது விலை குறைவான 250 சிசி பைக்காகவும் இது இருக்கின்றது. இதனை யமஹா நிறுவனம் தற்போது ரூ. 1.47 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விலையிலேயே எக்கசக்க சிறப்பு வசதிகளை இப்பைக்கில் நிறுவனம் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

பை-ஃப்ங்க்சனல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டே லைட், பன்முக வசதிகள் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய மோனோக்ராஸ் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ், டிஸ்க் பிரேக், சைடு ஸ்டாண்ட் போட்டால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

யமஹா நிறுவனம் இந்த பைக்கை எஃப்இசட்எஸ் 25 எனும் பெயரிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்ட்ரீட் ஃபைட்டர் ஸ்டைலில் இந்த வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், உருவம் விஷயத்தில் இரண்டும் கணிசமான வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில் இரு பைக்குகளிலும் 249 சிசி சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.8 எச்பி பவரையும், 20.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

150 சிசி பைக்க ஓட்டி ரொம்ப போர் அடிச்சுருச்சா... இந்த பட்டியல்ல இருக்க 250 சிசி பைக் எல்லாமே சூப்பரா ரைடிங் அனுபவத்தை வழங்கும்!

பஜாஜ் பல்சர் என்250 (Bajaj Pulsar N250 single-channel ABS)

விலை: ரூ. 1,40,666

பஜாஜ் பல்சர் பன்முக சிசி திறனிலும், ஸ்டைலிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 250 சிசி தேர்விலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவற்றில் மிக மிக விலை குறைவானதாக என்250 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இருக்கின்றது. இந்தியாவிலேயே மிகக் குறைவான விலைக் கொண்ட 250 சிசி பைக்கும் இதுவே ஆகும். விலை குறைவானதாக இருந்தாலும் மற்ற 250 சிசி பைக்குகளைப் போலவே இதிலும் அதிகளவில் சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2022, 10:43 [IST]
English summary
Most affordable 250cc bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+