இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பைக்குகளில் ஒன்று கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175). இந்த பைக்கை பற்றிய செய்திகள் மிக நீண்ட காலமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வந்து கொண்டுள்ளன. ஆனால் தற்போது வரை கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இடையில் பல முறை கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டதன் காரணமாக விரைவில் இந்திய சந்தையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற யூகங்களுக்கும் இது காரணமாக அமைந்தது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் கவாஸாகி நிறுவனம் வெளியிடவில்லை. இந்த சூழலில், இந்திய வாடிக்கையாளர்களின் மிக நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு கவாஸாகி டபிள்யூ175 பைக் நடப்பு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

கவாஸாகி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ம் தேதி (September 25) இந்திய சந்தையில் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் புதிய பைக் அறிமுகம் என்பதைதான் கவாஸாகி நிறுவனம் உறுதி செய்ததே தவிர, எந்த பைக்? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

எனவே கவாஸாகி நிறுவனத்திடம் இருந்து வரவிருப்பது என்ன பைக்? என வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் கவாஸாகி நிறுவனத்தின் புதிய பைக் டபிள்யூ175 ஆக இருக்கலாம் என மீண்டும் ஒரு முறை யூகங்கள் வெளிவந்தன. இந்த யூகங்கள் மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டி விட்டன.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இந்த சூழலில் வரும் செப்டம்பர் 25ம் தேதி கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது டபிள்யூ175 பைக்தான் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கவாஸாகி நிறுவனம் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 'W' மற்றும் 'Coming Soon' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இதன் மூலம் கவாஸாகி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது டபிள்யூ175 பைக்தான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சரி, கவாஸாகி டபிள்யூ175 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கு என்ன காரணம்? என்ற சந்தேகம் உங்கள் மனதில் தற்போது எழுந்திருக்கலாம்.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

விலைதான் இதற்கான மிக முக்கியமான காரணம். தெளிவாக சொல்வதென்றால், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டபிள்யூ175 பைக்தான், இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக (Kawasaki's Most Affordable Motorcycle) இருக்கும். அனேகமாக இந்த பைக்கின் விலை சுமார் 1.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம்.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

கவாஸாகி போன்ற மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு குறைவான விலையில் ஒரு பைக் வருகிறது என்றால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கவே செய்யும். அதுதான் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நடந்து கொண்டுள்ளது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

கவாஸாகி நிறுவனம் டபிள்யூ175 பைக்கை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. இந்த பைக்கின் விலையை கவாஸாகி நிறுவனம் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதற்கு இதுவே முக்கியமான காரணம். கவாஸாகி நிறுவனத்திடம் இருந்து தற்போது வெளியாகியுள்ள சமூக வலை தள பதிவுகளில் #MadeInIndia என்ற ஹேஷ்டேக்கையும் காண முடிகிறது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) பைக்குடன் கவாஸாகி டபிள்யூ175 போட்டியிடும். மேலும் யமஹா எஃப்இஸட்-எக்ஸ் (Yamaha FZ-X) மற்றும் டிவிஎஸ் ரோனின் 225 (TVS Ronin 225) போன்ற பைக்குகளுக்கும் கவாஸாகி டபிள்யூ175 பைக் விற்பனையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இந்திய சந்தைக்கான கவாஸாகி டபிள்யூ175 பைக்கில், 177 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமானது என்பதுடன், ஃப்யூயல்-இன்ஜெக்ஸன் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும். அதிகபட்சமாக 12.8 பிஹெச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம். சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 110 மிமீ ட்ரம் பிரேக்கும் வழங்கப்படலாம்.

இன்னும் 10 நாளில் லான்ச் ஆவது உறுதி! நம்பவே முடியாத குறைவான விலையில் கவாஸாகி பைக்! ராயல் என்பீல்டுக்கு ஆப்பு!

அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் எல்லாம் வரும் செப்டம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது நமக்கு கிடைத்து விடும். அந்த நாளுக்காகதான் இந்தியாவின் கவாஸாகி ரசிகர்கள் பலரும் தற்போது விஜய் ஸ்டைலில் 'ஐ யம் வெயிட்டிங்' என கூறி கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2022, 13:18 [IST]
English summary
Most affordable kawasaki w175 motorcycle india launch confirmed
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+