ராயல் என்பீல்டு பைக்குகளிலேயே விலை குறைவானது... இந்தியாவை கலக்க வருகிறது ஹண்டர் 350... கனவு நிறைவேற போகுது!
வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பற்றிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் புல்லட் 350 (Royal Enfield Bullet 350) போன்ற பைக்குகள் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.

இந்த சூழலில் 350 சிசி செக்மெண்ட்டில் முற்றிலும் ஒரு புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக்கை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். வெகு விரைவில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹண்டர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 ஆகிய 2 பைக்குகளின் எடை 190 கிலோவிற்கும் அதிகம். ஆனால் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 இதை காட்டிலும் குறைவான எடையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 ஆகிய 2 பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே புதிய ஜே பிளாட்பார்ம் (J Platform) அடிப்படையில்தான் ஹண்டர் 350 பைக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 ஆகிய 2 பைக்குகளிலும் தற்போது புதிய 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகளைதான் புத்தம் புதிய ஹண்டர் 350 பைக்கிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 ஆகிய 2 பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் ஆகியவை காரணமாக பைக் ஓட்டும் அனுபவம் மேம்பட்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர். குறிப்பாக அதிர்வுகள் குறைந்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதிவேகத்தில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஹண்டர் 350 பைக்கை ஓட்டும் அனுபவமும் மிக சிறப்பாக இருக்கலாம். ஹண்டர் 350 பைக்கை பற்றி குறிப்பிட வேண்டிய மற்றொரு மிக முக்கியமான விஷயமும் உள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும் என்று (Most Affordable Royal Enfield Bike) எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய பைக்குகளிலேயே ஹண்டர் 350 பைக்கின் விலைதான் மிகவும் குறைவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைவானது என்பதால், 150 சிசி பைக்கில் இருந்து மேம்படுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு ஹண்டர் 350 நல்ல தேர்வாக இருக்கும். அத்துடன் தினசரி தேவைகளுக்கு மிகவும் குறைவான விலையில் ஒரு சக்தி வாய்ந்த பைக்கை வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 நல்ல தேர்வாக இருக்கலாம்.

இவர்களை தவிர, வாழ்க்கையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கையாவது வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் இருப்பவர்களுக்கும், ஹண்டர் 350 மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக்கின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்கு காரணம். ஹண்டர் 350 பைக்கின் மூலம் 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








