2இரட்டையர்கள் என மொத்தம் 4பைக்குகளை இந்தியாவில் களமிறக்க மோட்டோ மொரினி திட்டம்! ஏதோ தரமான சம்பவம் நடக்கபோகுது!

இரு இரட்டையர்கள் பைக் என ஒட்டுமொத்தமாக 4 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் களமிறக்குவதை மோட்டோ மொரினி நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

இத்தாலி நாட்டை மைமயமாகக் கொண்டு இயங்கும் மோட்டோ மொரினி நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் தன்னுடைய வருகையை பதிவு செய்ய இருப்பாதாக அறிவித்தது. இதற்காக இந்நிறுவனம் ஆரி என்றழைக்கப்படும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா உடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. இந்த கூட்டணியின்கீழே இத்தாலி நிறுவனமான மோட்ட மொரினியின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் விற்கப்பட இருக்கின்றன.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

ஏற்கனவே, ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்துடன் பெனெல்லி மற்றும் கீவே ஆகிய இரு நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்வதற்காக இணைந்திருக்கின்றன. இந்த நிலையிலேயே அதே ஆதீஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியாவுடன் இணைந்து செயல்படும் வகையில் மோட்டோ மொரினி இணைந்திருக்கின்றது.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

இதுகுறித்த தகவலையே சமீபத்தில் நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். ஆனால், நிறுவனம் என்ன மாதிரியான தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப் போகின்றது என்பது பற்றிய விபரத்தை வெளியிடவில்லை. இந்த நிலையில் இதுகுறித்த தகவலே வெளியாகியுள்ளது. அதாவது மோட்டோ மொரினி நிறுவனம் அதன் எந்தெந்த தயாரிப்புகளை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம், வாங்க.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

மோட்டோ மொரினி நிறுவனம் இரு அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து ஒரு ரெட்ரோ ஸ்ட்ரீட் மற்றும் ஒரு ஸ்கிராம்ப்ளர் ரக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. எக்ஸ்-கேப் 650 எக்ஸ் (X-Cape 650X), எக்ஸ்-கேப் 650 (X-Cape 650), சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ஸ்கிராம்ப்ளர் (Seiemmezzo 6 ½ Scrambler) மற்றும் சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ரெட்ரோ ஸ்ட்ரீட் (Seiemmezzo 6 ½ Retro Street) ஆகிய புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களையே நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

எக்ஸ்-கேப் 650:

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 இரட்டையர் (கான்டினென்டல் 650 மற்றும் இன்டர்செப்டார் 650) பைக் மாடல்களைப் போல், மோட்டோ மொரினி நிறுவனத்தின் 650 இரட்டையர்களாக எக்ஸ்-கேப் 650 இருக்கின்றது. உருவத்தில் மட்டுமே கணிசமான மாற்றங்களை இவைக் கொண்டிருக்கும்.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

ஆமாங்க, ராயல் இரட்டையர்கள் பைக்கைப் போலவே இதுவும் எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக இருக்கும். எனவேதான் எக்ஸ்-கேப் 650 எக்ஸ் மற்றும் எக்ஸ்-கேப் 650 பைக்குகளை இரட்டையர்கள் என அழைக்கின்றார்கள். இந்த பைக்கில் 8 வால்வுகள் அடங்கிய 60 எச்பி மற்றும் 54 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

மேலும், இருசக்கர வாகனத்தில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முன்பக்கத்தில் மசரோச்சி அட்ஜெஸ்டபிள் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஒய்பி ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், அட்ஜெஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன், 7 அங்குல டிஎஃப்டி திரை, 19 அங்குல ஸ்கார்பியன் ரேல்லி எஸ்டிஆர் டயர்கள், பிரெம்போ பிரேக்குகள் மற்றும் பாஷ் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 18 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட ஃப்யூவல் டேங்க் ஆகியவையும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

இத்துடன், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக கழுகின் கண்களைப் போன்று அமைப்புடைய முழு எல்இடி ஹெட்லைட் மற்றும் பேக்லிட் ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த அட்வென்சர் பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளன.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

எக்ஸ்-கேப் 650 எக்ஸ் மற்றும் எக்ஸ்-கேப் 650 பைக்குகளைப் போலவே சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ஸ்கிராம்ப்ளர் மற்றும் சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ரெட்ரோ ஸ்ட்ரீட் இவ்விரு பைக்குகளும் ட்வின் பைக்குகளாக காட்சியளிக்கின்றன. இவையும் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமே மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

அதேநேரத்தில் எஞ்ஜின் விஷயத்தில் இவ்விரு பைக்குகளும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. இப்படி கூறுவதற்கு இந்த விஷயத்தில் மோட்டோ மொரினி இந்தியாவில் களமிறக்க ஒதுக்கியிருக்கும் நான்கு பைக்குகளுமே ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. ஆமாங்க, எக்ஸ்-கேப் 650 எக்ஸ் மற்றும் எக்ஸ்-கேப் 650 பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 649 சிசி மோட்டாரே இந்த இரட்டையர்களிலும் மோட்டோ மொரினி பொருத்தியுள்ளது.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

பைக்கின் சூப்பரான கம்பீரமான தோற்றத்திற்கு 20சிஆர்-மோ ஸ்டீல் ஃப்ரேமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், கேஒய்பி சஸ்பென்ஷன், பிரெம்போ பிரேக்குள், பைரல்லி டயர்கள் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் இருசக்கர வாகனத்தில் ரைடு மேற்கொள்வதை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும்.

இரு இரட்டையர்கள் என 4 பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் மோட்டோ மொரினி திட்டம்... வேற லெவல் போட்டி நாட்டுல நடக்கபோகுது!

இத்தகைய சூப்பரான பைக்குகளையே ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்துடன் இணைந்து விற்க முன் வந்திருக்கின்றது மோட்டோ மொரினி நிறுவனம். அனைத்து இருசக்கர வாகனங்களும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட வாகனங்கள் என்பதால் அவை சற்று அதிக விலையில் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றின் விலைகளை இன்னும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2022, 19:50 [IST]
English summary
Moto morini confirme s 4 motorcycles for india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+