ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1,000 ரூபாய் அபராதம் கட்டணும், இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே

இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் என நமக்குத் தெரியும் ஆனால் ஹெல்மெட் போட்டிருந்தாலும் அபராதம் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து உங்களுக்குத் தெரியுமா? ஆம் அப்படியான ஒரு சட்டம் ஒன்று இருக்கிறது. இது குறித்து விரிவாகக் காணலாம்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

இந்தியா முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அது எந்த விதமான இருசக்கர வாகனமாக இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது. கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினால் அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை இந்த ஹெல்மெட் பெரும் அளவிற்குக் குறைக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

இந்த சட்டப்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவருக்கு ரூ1000 வரை அபராதம் விதிக்கப்படும். அதில் அரசு அங்கீகரித்த BISசான்று பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே அணியவேண்டும் BIS சான்று பெறாத ஹெல்மெட்களை அணிந்தாலும் அது ஹெல்மெட் அணியாததாகவே கணக்கில் கொள்ளப்பட்டு அதற்கும் ரூ1000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

நம்மில் பலருக்கு இந்த சப்டம் தான். தான் தெரியும். ஆனால் மோட்டார் வாகன சட்டம் 194D என்ற சொல்கிறது என்றால் ஒருவர் ஹெல்மெட் அணிவது மட்டும் கட்டாயமில்லை, அந்த ஹெல்மெட்டிற்கான ஸ்டிராப்பையும் மாட்டியிருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர் முழுவதுமாக ஹெல்மெட் அணிந்ததாகக் கணக்கில் கொள்ளப்படும். ஸ்டிராப்பை மாட்டாமல் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ஹெல்மெட் மாட்டவில்லை என்றே கணக்கில் கொள்ளப்படும்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

நம்மில் பலருக்கு இந்த விஷயம் தெரியாது. ரோட்டில் பைக் ஓட்டிச்செல்லும் பலர் ஹெல்மெட்டை கழட்டி வைத்திருப்பார்கள். போலீசார் சோதனைசெய்வதைப் பார்த்ததும் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு பயணிப்பார்கள். இப்படி இவர்கள் பயணிக்கும் போது ஹெல்மெட் ஸ்டிராப் மாட்டாமலேயே பயணிப்பார்கள். ஹெல்மெட் ஸ்டாராப்பை மாட்டியிருந்தால் தான் முழுமையாக ஹெல்மெட் அணிந்ததாக சட்டப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

இதே போல பைக்கில் செல்லும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அதே போல 4 வயது வரை உள்ள குழந்தைகளை பைக்கில் கூட்டிச் சென்றால் நீங்கள் அந்த குழந்தையை ஹார்நெஸ் பெல்ட் கொண்டு மாட்டி இணைத்திருக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

இந்த பெல்டை போட்டிருப்பது மட்டும் பத்தாது இந்த குழந்தைகளுடன்பயணிக்கும் பெரியவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அதே போலக் குழந்தைகளுடன் வாகனத்தில் பயணிக்கும் போது வாகனம் 40 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் அதுவும் சட்டப்படி குற்றமாக கருதப்பட்டு ரூ1000 அபராதம் மற்றும் 3 மாதங்கள் வாகனம் லைசென்ஸ் சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

இன்று வாகன சோதனைகளில் ஒரு நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அவர் அங்கே பணத்தைக் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் ஆன்லைன் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம். parivahan என்ற அரசின் இணையதளத்திற்குச் சென்று குறிப்பிட்ட அபராத ரசீது எண் அல்லது வண்டி எண், அல்லது ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அதில் உள்ள அபராத தொகையைச் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் தற்போது சாலை போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராக்கள் செற்கை நுண்ணறிவு மூலம் சாலைகளில் விதிமீறல் செய்பவர்களைப் புகைப்படம் எடுத்து அதில் உள்ள வாகனத்தின் எண்ணிற்கு அபராதத்தை நேரடியாக விதிக்கும் வகையில் தொழிற்நுட்பம் வளர்ந்துள்ளது.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1, 0 0 0 ரூபாய் அபராதம் கட்டணும் . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கறது முன்னாடியே தெரியாம போச்சே !

அதனால் நீங்கள் சாலைகளில் செல்லும் போது கவனிக்கத் தான் போலீஸ் இல்லையே என நீங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும் கேமராவின் கண்களில் நீங்கள் சிக்கினால் உங்களுக்கு அபராதம் உறுதிதான். அதனால் இதை மனதில் வைத்து என்ன அவசரம் என்றாலும் சாலைவிதிகளை மீறாமல் சென்றால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். சுகமான பயண அனுபவத்தைப் பெறலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Motor vehicle act says two wheeler drivers without proper wearing of helmet will have to pay fine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X