பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்றாங்க! பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டிய டாப் 9 டிப்ஸ்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

நம்மல்ல பல பேரு வாகனங்களை வாஷ் செய்வது மிகவும் சுலபமானது என நினைத்துக் கொண்டு கண்டமேனிக்கு சுத்தம் செய்ய தொடங்கிவிடுகின்றோம். உண்மையைச் சொல்லப் போனால் பைக்கைக் கழுவும்போது சில முக்கிய டிப்ஸ்களை நாம் கடைபிடிக்க தவறிவிடுகின்றோம். ஏன் எனில் நம்மில் பலர் வாகனத்தைச் சுத்தம் செய்வதாக நினைத்துக் கொண்டு அதன் முக்கிய பாகங்களைச் சேதப்படுத்தி விடுகின்றோம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

குறிப்பாக, இருசக்கர வாகனங்களைக் கழுவிவிடும்போது நாம் எந்த ஒரு வழிக்காட்டுதல்களையும் கையாள்வதே இல்லை. தாருமாறாக கழுவிவிடுகின்றோம். இதன் விளைவாக சில நேரங்களில் வாகனத்தின் புதுப்பொலிவுகூட பாதிக்கப்படும் நிலை உருவாகின்றது. "என்ன சொல்றீங்க வாகனத்தை சுத்தம் செய்வதனால் அது புதுசு போல தான தெரியும். அது எப்படி பழசா மாறும்" என நீங்கள் கேட்கலாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

சில முறையற்ற வாஷிங் முறையை பின்பற்றும்போது இதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். வாகனத்தை அவ்வப்போது சுத்தம் செய்வதனால், அவற்றின்மீது படர்ந்துக் காணப்படும் அழுக்கு மற்றும் மண் துகள்களை அகற்ற முடியும். அவற்றை அப்படியே விடும்பட்சத்தில் வாகனத்தை துருபிடிக்க நேரிடலாம். இதனால்தான் வாகன வாஷிங் மிக முக்கியமானது என கூறப்படுகின்றது.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

இந்த செயலின்போது நாம் தவிர்க்க வேண்டிய தவறுகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் என்ன என்பதையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, டூ-வீலர் வாஷிங்கின்போது மேற்கொள்ள வேண்டிய டாப் 9 முக்கிய டிப்ஸ்களையே இங்கு வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்து பார்க்கலாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

சூடான பைக்குகளை கழுவ வேண்டாம்:

பயணத்திற்கு பின்னர் இருசக்கர வாகனத்தை கழுவுவது என்பது செய்யவேக் கூடாத செயல் ஆகும். ஏனெனில் பயணங்களின்போது நாம் நம்ப முடியாத அளவிற்கு உஷ்னத்தை வாகனத்தின் முக்கிய பாகங்கள் அடைகின்றன. உதாரணமாக வீல், எஞ்ஜின், எக்சாஸ்ட் குழாய் போன்ற பாகங்கள் அதிக உஷ்னமாக இருக்கும். இந்த மாதிரியான சூழலில் தண்ணீரைக் கொண்டு வாகனத்தைச் சுத்தம் செய்வது என்பது விரைவில் வாகனத்தை இறக்கச் செய்வதற்கான செயலாக மாறிவிடும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

உலோகங்கள் வெப்பத்தின்போது எளிதில் நெளிய (விரிவடைய)க் கூடதாக இருக்கும். இதனால்தான், நீண்ட தூர பயணத்திற்கு பின்னர் எக்சாஸ்ட் குழாயை வேகமாகத் தாக்கக் கூடாது என்பர். இந்த நேரத்தில் அதன் நெகிழும் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால், சின்னத் தாக்கம்கூட குழாயை நெளியச் செய்துவிடும். இதேநிலையிலேயே உஷ்னமாக இருக்கும் போது பிற மெட்டல்கள் இருக்கும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

இந்த மாதிரியான சூழலில் குளிர்ந்த நீரில் வாகனத்தை வாஷ் செய்வது என்பது அந்த மெட்டல்களின் உறுதித் தன்மையைப் பாதிக்கச் செய்துவிடும். இதுமட்டுமின்றி, உஷ்னமாக உடற்கூறுகள் மீதிருக்கும் பெயிண்டுகளையும் அது எளிதில் அகற்றச் செய்யும். ஆகையால், விரைவில் உங்கள் பழையதைப் போல் காட்சியளிக்க நேரிடலாம். எனவே பயணத்திற்கு பின்னர் குறிப்பாக வாகனம் சூடாக இருக்கும் கழுவவே வேண்டாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

உயர் அழுத்தத்துடன் வாஷ் செய்யும் கருவிகள் அறவே கூடாது:

சிலர் சுலபமாக வேலை முடிய வேண்டும் என்பதற்காக உயர் அழுத்தத்துடன் வாகனங்களைக் கழுவும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறை நம்முடைய வாகனங்களில் இருக்கும் மெல்லிய பாகங்களை எளிதில் பாதிக்கச் செய்துவிடுகின்றது. குறிப்பாக பெயிண்ட் போன்றவற்றை எளிதில் அகற்றிவிடும். அதேவேலையில், வாகனத்தில் அடிப்பகுதியில் மண் மற்றும் அடர்த்தியான சகதிகள் தங்குவதால் அந்த இடத்தை மட்டும் சற்றே அதிக பிரஷ்ஷர் கொண்ட கருவியைக் கொண்டு வாஷ் செய்யலாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

இதேபோல், வாகனத்தின் செயின் பகுதியிலும் இந்த பிரஷ்ஷர் வாஷரைப் பயன்படுத்தலாம். இதன் வாயிலாக கடினமான ஆயில் பிசுக்குகளையும் அகற்ற முடியும். அதேநேரத்தில் மின் இணைப்புகள் உள்ள பகுதிகளில் இதைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம் என்பதை கவனத்திக் கொள்ள வேண்டும். இது மின் இணைப்பு துண்டித்து வாகனத்தை செயலற்றதாக மாற்றிவிடும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்:

இருசக்கர வாகனத்தின் சில பகுதிகளில் அழுக்குகள் மற்றும் கரைகள் விடாப்பிடியாக படிந்திருக்கக் கூடும். இதுமாதிரியான பகுதிகளில் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதன் வாயிலாக நல்ல பலனைக் காண முடியும். குறிப்பாக, குளிர்ந்த நீரால் வாகனத்தை நனைத்த பின்னர் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் அனைத்து அழுக்குகளும் நன்கு ஊறி வெளியேற தயாராகிவிடும். பின்னர் இரண்டாவதாக ஒரு முறை தண்ணீரை ஊற்றி அலசினால் அந்த இடம் தூய்மையானதாக மாறிவிடும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

உச்சி வெயில் நேரத்துல டூ-வீலரை கழுவாதீங்க:

வெயில், நீருக்கு எதிரானதாக இருக்கின்றது. அதிக வெயிலின்போது வாகனத்தை கழுவினால் அது உடனடியாக வாகனத்தின் மீது தெளிக்கப்படும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் மோட்டார்சைக்கிளின் பளபளப்பு தன்மைக் குறைய நேரிடலாம். குறிப்பாக, சோப்பு கலந்த நீரை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது உடனடியாக நீர் காயுமானால், சோப்பு மட்டும் வாகனத்தின்மீது விடாப்பிடியாக படிந்துவிடும். அதை அகற்றும்போது சிராய்ப்பு போன்றவை வாகனத்தின் மீது ஏற்படலாம். எனவே காலை அல்லது வெயில் இல்லா நேரங்களில் வாகனத்தை கழுவுங்கள். இது நல்ல பலனை அளிக்கும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

இருசக்கர வாகனங்களுக்காக தயாரிக்கப்படாத கிளீனிங் பொருட்களை பயன்படுத்த வேண்டும்:

சிலர் சந்தையில் சீப்பாக கிடைக்கின்றது என்கிற காரணத்திற்காக வாகனங்களுக்காக தயாரிக்கப்படாத கிளீனிங் பொருட் (இரசாயனங்)களை வாங்கி வாகனங்களை சுத்தம் செய்கின்றனர். இந்த செயல் ஆரம்பத்தில் நல்ல பலனை வழங்குவதாகத் தெரியும். ஆனால், கால போக்கில் பாதிப்பை வழங்கத் தொடங்கும். விரைவாக பெயிண்ட் உறிதல் அல்லது மங்குதல் போன்ற இன்னல்கள் ஏற்படும். எனவே வாகனங்களுக்காக தயாரிக்கப்படாத சுத்தம் செய்யும் பொருட்களை வாகனங்களில் பயன்படுத்த வேண்டாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

உலர்ந்த துணியை வாகனங்கள் மீது பயன்படுத்த வேண்டாம்:

சாலையோரங்களில் நிறுத்தும்போது வாகனங்கள் மீது எளிதில் தூசி படரக் கூடும். இந்த மாதிரியான நேரங்களில் உலர்ந்த துணியை வைத்து அதனை சுத்தம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் வாகனத்தில் சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்படக் கூடும். தூசிக்கள் சிறு சிறு மணல்களால் ஆனவை. எனவே, இதனால் ஏற்படும் உடனடியாக தெரியவராது. நாள் செல்ல செல்லவே இந்த பாதிப்பு பற்றி தெரிய வரும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

இந்த மாதிரியான நேரங்களில் சோப்பு அல்லது தண்ணீரை போட்டு இருசக்கர வாகனத்தைச் சுத்தம் செய்யலாம். இதனால், தூசிகளால் ஏற்படும் பாதிப்பு சற்றே தவிர்க்கப்படும். இத்துடன், வாகனங்களை கழுவும்போது இரு வாலிகளை பயன்படுத்தவும். ஒன்றை வாகனத்தை துடைப்பதற்கும், மற்றொன்றை துடைத்த பின்னர் சுத்தம் செய்யவும் பயன்படுத்தவும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

பெயிண்டை பாதுகாக்க உயர் ரக வேக்ஸை பயன்படுத்தவும்:

தன்னுடைய வாகனம் எப்போது புது பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இத்தகையோர், வாஷிங்கிற்கு பின்னர் இருசக்கர வாகனத்தின் மீது வேக்ஸ் கிரிமை தர வேண்டும். இதன் வாயிலாக வாகனத்தின் மேற்பரப்பிற்கு புதிய கவசம் அமைக்கப்படும். குறிப்பாக, பெயிண்டை இது பாதுகாக்கும். அதேவேலையில், நாம் பயன்படுத்தும் வேக்ஸை பெயிண்டிற்கு எதிராக மாறிவிடக் கூடாது. எனவே தரமான வேக்ஸை பயன்படுத்த தயங்க வேண்டாம்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

மறைவான இடங்களில் புகுந்திருக்கும் நீரை அகற்றுதல்:

வாஷ் செய்துவிட்டோம் வேலை முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். வாஷிங்கிற்கு பின்னரும் சில வேலைகள் இருக்கின்றன. அதாவது, நாம் வாகனத்தின்மீது தெளித்த நீரை அகற்றுவதுதான் அது. வாகனத்தின் சில இடங்களில் தண்ணீர் மறைந்திருப்பது தெரியாது. இந்த மாதிரியான பகுதிகளை காற்றடிப்பான்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் வாகனத்தை ஸ்டார்ட் செய்து சில நிமிடங்கள் எஞ்ஜினை ரன் செய்ய வேண்டும். இதன் வாயிலாக மறைவான இடங்களில் புகுந்திருக்கும் நீரை அகற்ற முடியும்.

பைக்க இப்படி கண்டமேனிக்கு கழுவாதீங்க! நம்மில் பலபேரு இந்த தவற செய்யுறாங்க... பைக்கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை!

லூப்ரிகேட்டை கையோடு செஞ்சிடுங்க:

அனைத்து நீரையும் வெளியேற்றிய பின்னர் வாகனத்தின் குறிப்பிட்ட பகுதிகளை லூப்ரிகேட் செய்தல் வேண்டும். இது தேவையில்லாமல் துருக்குள் அண்டுவதை தவிர்த்துவிடும். குறிப்பாக, செயின், முக்கிய ஸ்க்ரூ மற்றும் போல்ட் பகுதிகளில் லூப்ரிகேட் ஸ்பிரேவை அடித்தல் வேண்டும். இதன் வாயிலாக அந்த பகுதி தண்ணீர் துளிகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 9, 2022, 14:13 [IST]
English summary
Motorcycle washing tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+