அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

நஹாக் பி-14 (Nahak P-14) ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நஹாக் மோட்டார்ஸ் (Nahak Motors) நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்வதற்கான விண்டோ (Pre-book Window) குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

இதன்படி மார்ச் 15ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரை மட்டுமே, நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்வதற்கான விண்டோ திறந்திருக்கும். நஹாக் பி-14 எலெக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் மே மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கின் விலை 2.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், இந்த ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை, நஹாக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு, நஹாக் மோட்டார்ஸ் நிறுவனம், பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கின் எம்ஆர்பி விலையில் இருந்து, 10 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. எனவே விரைவாக முன்பதிவு செய்பவர்கள், நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை ஓரளவிற்கு குறைவான விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. முன்பதிவுகளை ஏற்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் கைகளுக்கு, இந்த ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் வரும் மே மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டாப் ஸ்பீடுதான் என்பதில் சந்தேகம் இல்லை. நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கில், லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

இந்த பேட்டரியை வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும். சாதாரண சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். அதேசமயம் நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கில், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது. இதன்மூலம் இந்த ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம்.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

எனவே நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிகளவில் அறிமுகமாக தொடங்கியுள்ளன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. மறுபக்கம் இந்திய சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் நஹாக் பி-14 போன்ற தயாரிப்புகளின் வருகையால், இந்த நிலை வரும் காலங்களில் மாறலாம்.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

மத்திய, மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகளவில் ஆதரவு அளித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்கால போக்குவரத்தின் முக்கிய அங்கமாக திகழப்போகிறது.

அதிவேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் பைக்... சீக்கிரமா புக்கிங் பண்றவங்களுக்கு குறைவான விலை... எவ்ளோனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களும் இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. 10 லட்சம் சிஎன்ஜி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது எட்டியிருப்பது, சிஎன்ஜி கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 16, 2022, 11:29 [IST]
English summary
Nahak p 14 bookings open deliveries in may 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+