எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்தான் அதிகம் விற்பனையாகுதுனு நினைச்சுட்டு இருக்கோம்.. ஆனா அதுதான் இல்ல! உண்மையே வேற!

எலெக்ட்ரிக் இருசக்கர ரக வாகனங்களைக் காட்டிலும் மற்றொரு ரக மின்சார வாகனமே இந்தியாவில் அதிகளவில் விற்பனையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் நாளுக்கு அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டதே மின்சார வாகனங்கள். இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, பஸ், மினி லாரி மற்றும் டிரக் என அனைத்தும் தற்போது மின்சார வாகனங்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இவற்றிற்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு பல மடங்கு அதிகரிக்கவும் தொடங்கியிருக்கின்றது. மின்வாகனங்களின் விலை சற்று அதிகம் என்றாலும் சுற்றுச்சூழல் மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள் அவற்றைப் வாங்கி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆகையால், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஓர் புதிய தகவல் வெளியாகியது. அந்த தகவல் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கின்றது. இதுகுறித்த தகவலை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இதுகுறித்த ஓர் அறிக்கையையும் அது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தற்போது இந்திய நாட்டின் சாலையில் 13,92,265 மின்சார வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது" என தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இதுமட்டுமில்லைங்க அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் வாயிலாக ஓர் ஆச்சரியமளிக்கும் தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. நம்மில் பெரும்பாலானோர் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்கள் முற்றிலும் மாறுபட்ட தகவலை நமக்கு தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

மின்சார இருசக்கர வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றைக் காட்டிலும் மின்சார மூன்று சக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக அந்த புள்ளி விபரங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றது. இதுகுறித்து மத்திய ஹெவி இன்டஸ்ட்ரீஸ் துறையின் அமைச்சர் கிரிஷான் பால் குர்ஜார் தெரிவிக்கையில், "தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் 57 சதவீதம் இடத்தைப் பிடித்திருப்பதாக" கூறியிருக்கின்றார்.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

அதாவது, ஒட்டுமொத்தமாக 7.93 லட்சம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையையும் அவர் தெரியப்படுத்தியிருக்கின்றார்.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

சுமார் 5.45 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் நாட்டில் பயன்பாட்டில் இருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். இது ஒட்டுமொத்த மின் வாகன பயன்பாட்டில் 39 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகவே 54,252 யூனிட்டுகள் மட்டுமே மின்சார நான்கு சக்கர வாகனங்கள்

பயன்பாட்டில் உள்ளன.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இந்த அனைத்து தகவல்களும் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல்கள் ஆகும். மேலும், இவை அனைத்தும் ஆகஸ்டு 3ம் தேதி அன்றைய நிலவரப்படி வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் ஆகும். இந்தியாவில் மின்சார வாகனங்களின் வாகனங்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைய மத்திய அரசின் மானிய திட்டமும், மாநில அரசுகளின் மின் வாகன பயன்பாடு ஊக்குவிப்பு முயற்சிகளுமே மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

நாம நினைச்சிட்டு இருந்தது தப்பு! எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அதிகமாலாம் விற்பனையாகல... உண்மையை வெளியிட்ட மத்திய அரசு!

இதுமட்டுமின்றி நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்யும் பணியிலும் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் மற்றும் பேட்டரி ஸ்வாப் மையங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளில் அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அரசு மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, August 22, 2022, 9:19 [IST]
English summary
Nearly 14 lakh electric vehicles on using in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+