விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

2022 ஆர்சி390 மோட்டார்சைக்கிளின் பெயர் கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்தும், புதிய ஆர்சி390 மோட்டார்சைக்கிள் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

கேடிஎம் இந்தியா நிறுவனம் சமீபத்தில்தான் புதிய தலைமுறை ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளை விற்பனைக்கு கொண்டுவந்தது. இவற்றை தொடர்ந்து இந்த நிறுவனம் புத்துணர்ச்சியான தோற்றத்தில் புதிய தலைமுறை ஆர்சி390 மோட்டார்சைக்கிளையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இந்த நிலையில் தற்போது புதிய ஆர்சி390 பைக்கின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மிக விரைவில் இந்த புதிய கேடிஎம் ஸ்போர்ட்ஸ் பைக்கினை இந்திய ஷோரூம்களில் எதிர்பார்க்கலாம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் -இன் மத்திய-நிலை சூப்பர்பைக்காக விளங்கும் ஆர்சி390-இன் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடல் இந்த ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இதனை தொடர்ந்து இந்திய சாலைகளில் சிலமுறை 2022 ஆர்சி390 பைக்குகள் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு இருந்தன. அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களின் மூலமாக, புதிய ஒற்றை-துண்டு எல்இடி ஹெட்லைட் மற்றும் அளவில் பெரிய விண்ட்ஷீல்டு உடன் முற்றிலும் புதிய முன்பக்கத்தை இந்த ஸ்போர்ட்ஸ் பைக் பெற்றுவரவுள்ளதை அறிய முடிந்திருந்தது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இதன்படி புதிய டிசைனிற்கு மாற்றப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட்டிற்கு இரு பக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் அமைப்பு ஒற்றை-துண்டாக மாற்றப்பட்டாலும், முன்பக்க டூம் ஆனது முன்பை காட்டிலும் அகலமானதாக மாற்றப்பட்டுள்ளது. இது மேம்பட்ட காற்றியக்கவியல் பண்பிற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

அத்துடன் பைக்கின் காற்றியக்கவியல் பண்பை மேம்படுத்தும் விதமாக காற்று துளைகள் உடன் பக்கவாட்டு பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஆர்சி390 பைக்கின் மற்ற ஸ்டைலிங் அம்சங்களாக பருத்த பெட்ரோல் டேங்க், புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் புதிய இருக்கை அமைப்புடன் திருத்தப்பட்ட பின்பக்க முனை பகுதி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

புதிய ஆர்சி390-இல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளதால், இந்த பைக்கினை முன்பை காட்டிலும் எளிமையாகவும், சவுகரியமாகவும் ஹேண்டில் செய்யலாம். இருப்பினும், சற்று பின்பக்கமாக, ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மற்றும் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் அமைப்பினால் பயண சூழலில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இவற்றுடன் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு உள்ளிட்டவை அப்படியே முந்தைய ஆர்சி390 பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமான சட்டகத்தில் எந்த திருத்தங்களும் இல்லையென்றாலும், புதிய ஆர்சி390 பைக் புதிய போல்ட்-ஆன் பின்பக்க துணை சட்டகத்தை பெற்றுள்ளது. இதுவும் பயணத்தின்போது பைக்கின் நிலைப்பாட்டை மேம்படுத்துவதாக கேடிஎம் கூறுகிறது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

சஸ்பென்ஷனுக்கு புதிய ஆர்சி390 பைக்கில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், அலாய் ஸ்விங்கார்ம் உடன் மோனோ-ஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட உள்ளன. இந்த சஸ்பென்ஷன் யூனிட்கள் இரண்டையும் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாமாம். பிரேக்கிங் பணிக்கு இரு சக்கரங்களிலும் முறையே 320மிமீ மற்றும் 230மிமீ அளவுகளில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இதனுடன் போஸ்ச் நிறுவனத்தின் இரட்டை-சேனல் ஏபிஎஸ் -உம் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏபிஎஸ் ஆனது வளைவுகளில் திரும்பும்போதும், அதிவேக பயணத்தின் போதும் உடனடி பிரேக்கிற்கு கொடுக்கப்படுகிறது. இவற்றுடன் புதிய ஆர்சி390 பைக்கில் புதிய தொழிற்நுட்ப வசதிகளாக ரைடிங் மோட்கள் மற்றும் ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

2022 ஆர்சி390 பைக்கில் வழக்கமான 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினையே கேடிஎம் நிறுவனம் வழங்க உள்ளது. இது வழக்கம்போல் அதிகப்பட்சமாக 44 பிஎச்பி வரையில் வெளிப்படுத்தும். ஆனால் என்ஜின் அமைப்பில் பெரிய அளவிலான காற்று-பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதால் டார்க் திறன் 37 என்எம் -ஆக உயர்ந்துள்ளது.

விற்பனைக்கு தயாராக 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்!! அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு வந்தது!

இதன் விளைவாக இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு 11kmph அதிகரித்துள்ளது. இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் யூனிட் ஸ்லிப்பர்-க்ளட்ச் உடன் செயல்படுகிறது. மேற்கூறப்பட்ட அப்டேட்களுக்கு ஏற்ப இந்தியாவில் 2022 கேடிஎம் ஆர்சி390 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை நிச்சயமாக சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2022, 14:00 [IST]
English summary
New 2022 ktm rc 390 motorcycle listed on company indian website details
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+