2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

ஹோண்டா 2022 சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய ஹோண்டா பைக் குறித்தும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

இந்திய பைக் ரைடிங் சமூகத்தை மத்திய-எடை பந்தய பைக் பிரிவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதன் 2022 சிபிஆர்650ஆர் பைக்கினை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

இதன்படி இந்த மிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக்கின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. சிகேடி முறையில் (பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு) விற்பனை செய்யப்பட உள்ள புதிய சிபிஆர்650ஆர் பைக்கினை ஹோண்டாவின் பிரத்யேக பிரீமியம் தர டீலர்ஷிப்களான பிக் விங் மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

நிகரற்ற செயல்படுதிறன் மற்றும் ஸ்டைலை கொண்ட 2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் உடனடி பிக்-அப்பிற்கு உறுதியளிக்கிறது. இத்துடன் என்ஜினில் இருந்து மீட்டெடுக்கப்படும் இயக்க ஆற்றலும் அதிகம் என்பதால் வழக்கம்போல் புதிய சிபிஆர்650ஆர் பைக்கும் இந்திய இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

இத்தகைய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியிருப்பது குறித்து HMSI நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கருத்து தெரிவிக்கையில், "சிபிஆர்650ஆர் ஆனது புதிய மற்றும் அனுபவமுள்ள ரைடர்களின் ரைடிங் அனுபவத்தில் உற்சாகத்தை தூண்டும் ஒரு நிரூப்பிக்கப்பட்ட டிராக்கை கொண்டுள்ளது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

புதிய சிபிஆர்650ஆர் -இன் அதிநுட்பமான லைன்கள் பைக்கின் காற்றியக்கவியல் பண்பை மேம்படுத்துகின்றன" என்றார். சவுகரியம் மற்றும் அசத்தலான தோற்றம் உள்ளிட்டவற்றை சிறந்த கலவையில் பெற்றிருக்கும் 2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் மோட்டார்சைக்கிளுக்கு புதிய ஆரஞ்ச் ஹைலைட்கள் மற்றும் புதிய ஸ்போர்டியான கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

பைக்கின் மேற்பகுதி மற்றும் முன்-அடிப்பக்க பேனல்கள் பைக்கின் திறனை வெளிக்காட்டுவதுபோல் பைசெப்ஸ் வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பைக்கை சுற்றிலும் மெல்லிய லைன்கள் செல்கின்றன. பைக்கின் பின் முனைப்பகுதி நறுக்கப்பட்டது போன்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. இயக்க ஆற்றலை வழங்க 2022 சிபிஆர்650ஆர் பைக்கில் 649சிசி, DOHC 16-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

4-சிலிண்டர்களின் உதவியுடன் இயங்கும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 12,000 ஆர்பிஎம்-இல் 64 கிலோவாட்ஸ் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 57.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய சிபிஆர்650ஆர் பைக்கிற்கு கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு மற்றும் மேட் கன்பவுடர் கருப்பு மெட்டாலிக் என்கிற இரு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

இந்த 2022 ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.9,35,427 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் சில முக்கிய நகரங்களில் மட்டுமே ஹோண்டா அதன் பிக் விங் டீலர்ஷிப் மையங்களை கொண்டுள்ளது. இதில் நமது மாநில தலைநகர் சென்னையும் ஒன்றாகும். விலை குறைவான ஹோண்டா பைக்குகள் இல்லாமல், பிக் விங் டீலர்ஷிப் மையங்களில் சிபிஆர்650ஆர் போன்ற விலைமிக்க சிகேடி & சிபியூ மாடல்களே விற்பனை செய்யப்படுகின்றன.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

2022 சிபிஆர்650ஆர் பைக்கை வாடிக்கையாளர்கள் www.hondabigwing.in என்ற இணையத்தள பக்கத்திலும் அல்லது 9958223388 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த 2022 ஜனவரி மாத துவக்கத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்கள் இந்தியா நிறுவனம் 2022 சிபி300ஆர் பைக்கை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

2021 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா பைக் வார கண்காட்சியின் மூலம் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட புதிய சிபி300ஆர் பைக் இந்தியாவை தொடர்ந்து சமீபத்தில் ஐரோப்பிய சந்தைகளிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி பைக்குகளுக்கு உண்டான நியோ-ரெட்ரோ தோற்றத்தில் அப்படியே தொடரப்பட்டாலும், 2022 சிபி300ஆர் பைக்கின் ஸ்டைலிலும், சவுகரியத்திலும் சில மேம்பாடுகளை ஹோண்டா கொண்டுவந்துள்ளது.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கியது!! பைக்கின் விலை ரூ.9.35 லட்சம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.77 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 சிபிஆர்650ஆர் பைக்கை போல் புதிய சிபி300ஆர் பைக்கும் ஹோண்டா பிக் விங் டீலர்ஷிப் மையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் 286சிசி, DOHC, 4-வால்வு, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda launches 2022 CBR650R in India, Bookings open!.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X