புதிய ஹீரோ கிளாமர் பைக்கின் டீசர் வெளியீடு!! இணையம் வாயிலாகவும் பைக்கை புக் செய்யலாம்!
அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் தொடர்பான டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய கிளாமர் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் குறித்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னணி 2-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் அதன் தயாரிப்புகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட்களை வழங்கக்கூடியது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். கிளாமர் போன்ற பைக்குகள் மட்டுமின்றி, ஹீரோ ஸ்கூட்டர்களும் அவ்வப்போது அப்டேட்டை பெறுகின்றன.

இந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டில் கூட மேஸ்ட்ரோ எட்ஜ் 125 உள்பட ஹீரோ மோட்டோகார்பின் சில ஸ்கூட்டர்கள் தோற்றத்தில் காஸ்மெட்டிக் அப்கிரேடினை பெற்று இருந்தன. கிளாமர் லைன்-அப்பில் புதியதாக எக்ஸ்டெக் வேரியண்ட் சில மாதங்களுக்கு முன்பு இணைக்கப்பட்டு இருந்தது. பிறகு இந்த புதிய வேரியண்ட்டிற்கு இணக்கமாக ஸ்டாண்டர்ட் கிளாமர் பைக்கும் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை விளம்பரப்படுத்தும் விதமாகவே தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் புதிய டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது. புதிய கிளாமர் பைக்கில் எல்இடி டிஆர்எல்-களுடன் முற்றிலும் புதிய H-வடிவ எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

முந்தைய கிளாமர் பைக்கில் இருந்து வேறுப்படும் விதமாக புதிய மாடலில் கவனிக்கத்தக்க காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி புதிய டீசர் படத்தில் காண்பதை போல் பெட்ரோல் டேங்க் பகுதியில் கூர்மையான லைன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய பளபளப்பான கருப்பு நிறத்திலான பெயிண்ட் தேர்வும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பயணத்திற்கான வழிக்காட்டுதல் வசதி புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ப்ளுடூத் வாயிலாக மொபைல் போனை இணைப்பதன் மூலம் போனிற்கு வரும் அழைப்புகள் குறித்த எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

இவற்றுடன் கியர் பொசிஷன் சுட்டிக்காட்டி, நேரம் மற்றும் பராமரிப்பு தேவையை எச்சரித்தல் உள்ளிட்ட வழக்கமான தகவல்களையும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் காணலாம். ஹீரோ கிளாமரில் 124.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 10.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், 5-நிலை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. அப்கிரேட்களுக்கு ஏற்ப ஹீரோ கிளாமர் பைக்கின் விலைகளும் சில ஆயிரங்கள் உயர்ந்தன.

தற்சமயம் ஹீரோ கிளாமரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.75,600 என்கிற அளவில் உள்ளது. இதற்கு முன்பு ஏறக்குறைய ரூ.74,000 ஆக இருந்தது. புதிய கிளாமரில் அலாய் சக்கரங்களின் டிசைன் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பின் சக்கரத்திற்கான டயரும் மாற்றப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை பொறுத்தவரையில், நடப்பு 2021-22 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.7,883 கோடி வருவாயை பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் வரிகள் எல்லாம் கழித்த பின்னர் ஹீரோ நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இலாப மதிப்பு ரூ.686 கோடியாம். மொத்தமாக நடப்பு நிதியாண்டில் ரூ.1.846 கோடி இலாபத்தை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 3,80,476 இருசக்கர வாகனங்களை இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹீரோ இருசக்கர வாகனங்களும் இதில் அடங்குகின்றன.

இந்த கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை ஆனது 2021 ஜனவரி மாதத்தை காட்டிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்த 4,85,889 2-வீலர்ஸை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த மாத மொத்த விற்பனையில் 3,57,845 மோட்டார்சைக்கிள்களும், 22,631 ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன.


Click it and Unblock the Notifications








