புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருவதால், எப்போதுமே வருடத்தின் 2ஆம் பாதியில் தான் புதிய புதிய வாகனங்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்படும். அந்த வகையில் நடந்து முடிந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களையும், ஸ்கூட்டர்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

பலத்தரப்பட்ட சோதனை ஓட்டங்களுக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள்தான் ஹண்டர் 350 ஆகும். ராயல் என்பீல்டின் புதிய ஜே-பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹண்டர் 350 இருப்பதிலேயே மிகவும் விலை குறைந்த ராயல் என்பீல்டு பைக்காக ரூ.1,49,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

பஜாஜ் சிடி125 எக்ஸ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவிலேயே மிக விலை குறைந்த 125சிசி மோட்டார்சைக்கிளாக சிடி125 எக்ஸ் மாடலை சில தினங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தியது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், முரட்டுத்தனமான தோற்றம் & அட்டகாசமான வசதிகளுடன் சிடி125 எக்ஸ் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ஹோண்டா சிபி300எஃப்

தனது விலைமிக்க இருசக்கர வாகனங்களுக்கான பிக்விங் பிராண்டில் ஹோண்டா இந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்திய 300சிசி ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக், சிபி300எஃப் ஆகும். டீலக்ஸ் & டீலக்ஸ் ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபி300எஃப் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,25,900 ஆகும்.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

யமஹா மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன்

யமஹா நிறுவனம் அதன் 2022 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன்களை அதன் ஆர்15 எம், எம்டி-15 வெர்சன் 2.0, ஏரோக்ஸ் 155 மற்றும் ரே இசட்.ஆர் 125 மாடல்களில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. 2022 மான்ஸ்டர் மோட்டோஜிபி எடிசன்கள் மேற்கூறப்பட்ட யமஹா 2-வீலர்களில் உயர்-நிலை வேரியண்ட்களாக அமர்த்தப்பட்டுள்ளன.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ஹோண்டா ஷைன் செலபிரேஷன்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா பிராண்டில் இருந்து அதிக புதிய 2-வீலர்ஸ் அறிமுகமாகியுள்ளன. இந்த வரிசையில் இணையும் மற்றொரு புதிய ஹோண்டா தயாரிப்பு ஷைன் செலபிரேஷன் எடிசன் ஆகும். இரு புதிய நிறத்தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரபலமான 125சிசி ஹோண்டா பைக், அதற்கேற்ப சற்று கூடுதல் விலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ஓலா எஸ்1

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்திய எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எஸ்1 ப்ரோ சில கூடுதல் அம்சங்களை கொண்டதாக இருந்தது. அந்த கூடுதல் அம்சங்களை எஸ்1 வேரியண்ட்டிலும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் எஸ்1 மாடலின் ரேஞ்ச்சிலும், டாப்-ஸ்பீடிலும் எந்த மாற்றமும் இல்லை.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ஹோண்டா ஆக்டிவா பிரீமியம் & டியோ ஸ்போர்ட்ஸ்

இந்தியாவின் நம்பர் இன் ஸ்கூட்டரான ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா பிரீமியம் & டியோ ஸ்போர்ட்ஸ் என்ற பெயர்களில் ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டுமே பிரத்யேகமான பெயிண்ட்டை தவிர்த்து தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இதில் டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் சில காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

கீவே பெண்டா வி302சி

ஹங்கேரியன் மோட்டார்சைக்கிள் பிராண்ட்டான கீவே சீனாவை சேர்ந்த பெண்டா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார்சைக்கிள் தான் வி302 சி ஆகும். பக்காவான க்ரூஸர் மோட்டார்சைக்கிளான இது அட்டகாசமான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டாலும், அதற்கேற்ப விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது வி302 சி பைக்கின் குறையாக பார்க்கப்படுகிறது.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

2022 டுகாட்டி பனிகளே வி4 & ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2

புத்தம் புதிய டுகாட்டி நாக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்காக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 முதலில் அறிமுகமாக, அதனை தொடர்ந்து ஒருவழியாக டுகாட்டி நிறுவனம் அதன் முதன்மையான பந்தய கள பைக்கான பனிகளே வி4-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பனிகளே வி4 பைக்குகளாக, பனிகளே வி4, பனிகளே வி4 எஸ் மற்றும் பனிகளே வி4 எஸ்பி2 என்பவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதுசா 2-வீலர் வாங்கும் திட்டம் இருக்கா? ஆகஸ்ட்டில் களமிறங்கிய புது மாடல்களை ஒரு கண்ணோட்டம் பாருங்க!!

ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர்

இந்தியாவில் எடை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக நைட்ஸ்டர் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக இந்த பைக்கின் விலையை குறைவாக எதிர்பார்த்திட வேண்டாம். புதிய நைட்ஸ்டர் மிக சிறப்பம்சமாக ஹார்லி-டேவிட்சனின் புதிய லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 31, 2022, 20:57 [IST]
English summary
New motorcycles and scooters launched in this august
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+