ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மோட்டார்சைக்கிள் ஸ்க்ராம் 411 ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் சாலை-சார்ந்த வெர்சனாக ஸ்க்ராம் 411 மாடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இவை இரண்டிலும் பல அம்சங்கள் ஒத்து போகின்றன.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

இதில் 411சிசி ஆயில்-கூல்டு என்ஜின் (24.31 பிஎஸ்/ 32 என்எம்) மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. இருப்பினும் இவை இரண்டிற்கும் மத்தியில் சில விஷயங்கள் வேறுப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பிரிவு வாரியாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

டிசைன்

புதிய ஸ்க்ராம் 411 -ஐயும், ஹிமாலயனையும் ஒரே மாதிரியான இயக்குத்தளத்தின் அடிப்படையில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இருப்பினும் இவை இரண்டையும் தோற்றத்தில் வேறுப்படுத்தி காட்டும் விதமாக வெவ்வேறான பெயிண்ட் தேர்வினை இவற்றிற்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

ஹிமாலயனில் ஹெட்லேம்ப் உடன் சேர்த்து முன்பக்க துணை சட்டகம் பொருத்தப்படுகிறது. அத்துடன் முன்பக்கத்தில் பெரிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் அட்வென்ச்சர் ரக பைக் என்பதால் மேலாக பொருத்தப்பட்ட முன்பக்க மட்கார்டு உள்ளிட்டவற்றையும் ஹிமாலயன் பெறுகிறது. இருக்கை அமைப்பு இந்த பைக்கில் பிளவுப்பட்டதாக வழங்கப்படுகிறது.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

மறுப்பக்கம், புதிய ஸ்க்ராம் 411 பைக்கிற்கு வந்தோமேயானால், ஹிமாலயனை காட்டிலும் இது மிகவும் எளிமையான தோற்றத்தை பெற்றுள்ளது. முன்பக்க ஹெட்லேம்ப் கௌல் மற்ற கிளாசிக் ராயல் என்பீல்டு பைக்குகளை போல் நேர்த்தியான வடிவில் வழங்கப்பட்டிருக்க, சிறிய பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள், பேஷ் தட்டு, ஒற்றை-துண்டு இருக்கை மற்றும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கு எளிமையான இறுதிமுனை கம்பி உள்ளிட்டவற்றை இந்த புதிய பைக் ஏற்றுள்ளது.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

இந்த இரு பைக்குகளிலும் தோற்றத்தில் முக்கிய வேறுப்பாடாக, ஹிமாலயன் 21 இன்ச்சிலும், ஸ்க்ராம் 411 19-இன்ச்சிலும் முன் சக்கரத்தினை கொண்டுள்ளன. இதற்கேற்ப இந்த பைக்குகளில் பொருத்தப்படும் முன் டயரின் அளவும் வேறுப்படுகிறது. அதேபோல் எக்ஸாஸ்ட் குழாய் ஹிமாலயனில் ஸ்க்ராம் 411-ஐ காட்டிலும் நன்கு மேல்நோக்கி வளைக்கப்பட்டுள்ளது. ஹிமாலயனின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 220மிமீ, ஸ்க்ராம் 411 -இன் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 200மிமீ ஆகும்.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

தொழிற்நுட்ப அம்சங்கள்

புதிய ஸ்க்ராம் 411 பைக்கில் மீட்டியோர் 350-இல் உள்ளதை போலவே செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் கூடுதல் தேர்வாகவே கொடுக்கப்பட்டுள்ளது. நிலையான தேர்வாக வழங்கப்படவில்லை. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியின் மூலம் வழக்கமான அம்சங்களை அறியலாம். ஆனால் டச்சோமீட்டர் வழங்கப்படவில்லை என அறிமுகத்தின்போதே தெரிவித்திருந்தோம்.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

அப்படியே ஹிமாலயனுக்கு வந்தால், இதில் சற்று சிக்கலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது. இருப்பினும் இதில் அனலாக் டச்சோமீட்டர் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ட்ரிப்பர் நாவிகேஷனுக்கென இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் தனியாக சிறிய திரை நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் ஹிமாலயனில் ஸ்விட்ச் செய்யக்கூடியதாக கொடுக்கப்படுகிறது.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

சஸ்பென்ஷன் அமைப்பு இரண்டிலும் ஒரே மாதிரியான யூனிட்களாகவே கொடுக்கப்படுகின்றன என்றாலும், முன்பக்க சஸ்பென்ஷன் டிராவல் ஸ்க்ராம் 411-ஐ காட்டிலும் ஹிமாலயனில் 10மிமீ அதிகமாக 200மிமீ ஆக உள்ளது. மற்றப்படி பின்பக்க சஸ்பென்ஷன் டிராவல் இரண்டிலும் ஒரே மாதிரியாக 180மிமீ ஆக உள்ளது. அதேபோல் பிரேக்கிங் அமைப்பு மற்றும் எல்இடி விளக்குகளிலும் இரண்டிலும் எந்த மாற்றமுமில்லை.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

விலை:

ஏற்கனவே கூறியதுதான், ஹிமாலயனில் இருந்து வேறுப்படுத்திக் காட்டும் விதமாக புதுமையான நிறத்தேர்வுகளை ஸ்க்ராம் 411-இல் ராயல் என்பீல்டு வழங்கியுள்ளது. ஹிமாலயனை போல் இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் விலைகளும் நிறத்தேர்வுகளை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஸ்க்ராம் 411-இன் விலை எந்தவொரு பெயிண்ட்டிலும் ஹிமாலயனை முந்தவில்லை.

ஹிமாலயனில் இருந்து எந்தெந்த விஷயங்களில் வேறுப்பட்டது புதிய ஸ்க்ராம் 411? ஓர் முழு அலசல்!!

புதிய ஸ்க்ராம் 411 பைக்கிற்கு ரூ.2.03 லட்சம், ரூ.2.05 லட்சம் மற்றும் ரூ.2.08 லட்சம் என்கிற 3 விதமான எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே ஹிமாலயனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.14 லட்சம், ரூ.2.18 லட்சம் மற்றும் ரூ.2.22 லட்சம் என உள்ளன. ராயல் என்பீல்டின் ஸ்க்ராம் 411 மற்றும் ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியளிக்கும் விதத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஸ்க்ராம்ப்ளர் & அட்வென்ச்சர் பைக்குகளை யெஸ்டி பிராண்டில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 15:29 [IST]
English summary
New royal enfield scram 411 vs himalayan design equipment price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+