நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்!

இந்தியாவில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களின் இரு சக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், டிவிஎஸ் நிறுவனமும் ஒன்று.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

இந்த சூழலில், நாளை மறுநாள் டிவிஎஸ் (TVS) நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதுமுக பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் புதுமுக பைக் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கின்றது. அந்த புதிய பைக்கின் படங்களே தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. அட்டகாசமான ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் புதுமுக பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியிருப்பதைத் தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய தலைமுறையினரை மனதில் வைத்து பைக்கை உருவாக்கியிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

Source: Shreyas Sreedhar

இந்திய இருசக்கர வாகன சந்தையில் தற்போது போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. சமீப காலமாக இந்தியாவில் கால்தடம் பதிக்க பல முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. முந்தைய நாட்களில் இந்தியாவே வேண்டாம் என சந்தையை விட்டு வெளியேறிய மோட்டோ மோர்னி போன்ற முன்னணி நிறுவனங்கள்கூட அதன் மறு வருகையை நாட்டில் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

மேலும், இதற்கான பணிகளையும் அது தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. ஆகையால் வெகுவிரைவில் இந்தியாவில் மோட்டோ மோர்னி இந்திய நுழையும் என்கிற நிலை உருவாகியுள்ளது.இதுமட்டுமின்றி ஜோன்டெஸ் போன்ற புதுமுக நிறுவனங்களும் விரைவில் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றன. ஆகையால், முன்பைக் காட்டிலும் தற்போது சந்தையில் பலமடங்கு போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

இவ்வாறு அதிகரித்து வரும் கடும் போட்டியைச் சமாளிக்கும் விதமாகவே டிவிஎஸ் நிறுவனம், தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புதுமுக பைக்கை உருவாக்கியது. இந்த பைக்கை நிறுவனம் வரும் 6 ஆம் தேதி (நாளை மறுநாள்) வெளியீடு செய்ய இருக்கின்றது. டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) எனும் பெயரில் இப்பைக் அறிமுகத்தைப் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

இது ஓர் க்ரூஸர் ரக பைக்காகும். தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் வாயிலாக இந்த பைக்கில் ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், அது ஓர் 225 சிசி மோட்டார் என்பதும் தெரிகின்றது. ஆனால், இந்த தகவல்களை டிவிஎஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வரும் 6ம் தேதியே பைக்குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியீடு செய்யப்பட இருக்கின்றன.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

அதேநேரத்தில், தற்போது கசிந்திருக்கும் பட வாியலாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் கோல்டன் நிறத்திலான இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க் (முன் பக்கத்தில்), அலாய் வீல்கள், கொழுத்த தொற்றம் டயர்கள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

இதுமட்டுமின்றி, 'டி' வடிவ எல்இடி பகல்நேர மின் விளக்கு, வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, மோட்டார்சைக்கிளில் செல்போன் இணைப்பு, டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

கூடுதல் சிறப்பம்சங்களாக பிரவுன் நிற சேடில், டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் ஆகிய சூப்பர் அம்சங்களும் டிவிஎஸ் ரோனின் பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஜெப்லின் எனும் க்ரூஸர் ரக கான்செப்ட் மாடல் பைக்கைக் காட்சிப்படுத்தியது. இந்த பைக்கை தழுவியே நாளை மறு நாள் அறிமுகமாக இருக்கும் ரோனின் பைக்கை டிவிஎஸ் உருவாக்கியிருக்கின்றது.

நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்... நல்லா கொழுகொழுனு இருக்கு!

இதனை தற்போது வெளியாகியிருக்கும் படங்களும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. இந்த புதுமுக இருசக்கர வாகனத்தின் வருகை ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சில முன்னணி இருசக்கர வாகன மாடல்களுக்கு பெருத்த தலை வலியை ஏற்படுத்த இருக்கின்றது. குறிப்பாக, 100 சிசி தொடங்கி 200 சிசி திறனில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய டிவிஎஸ் ரோனின் பைக்கின் வருகை கடும் போட்டியை ஏற்படுத்தும் யூகிக்கப்படுகின்றது.

குறிப்பு: டிவிஎஸ் ஜெப்லின் பைக்கின் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. 4 முதல் 9 வரையிலான படங்கள்ஜெப்லின் க்ரூஸர் பைக்குடையது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2022, 11:00 [IST]
English summary
New tvs ronin cruiser bike pics leaked
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+