புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

யமஹா எம்டி15 2.0 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

யமஹா நிறுவனம் மெருக்கேற்றப்பட்ட புதிய எம்டி15 வெர்சன் 2.0 பைக்கை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது. முந்தைய தலைமுறை எம்டி15 பைக்குடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றுவந்துள்ளது.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

தங்க நிறத்திலான யுஎஸ்டி ஃபோர்க்குகள், புதிய டிசைன் & கியர்மாற்றி இண்டிகேட்டர் உடன் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ப்ளூடூத் இணைப்பு வசதிகள், அலுமினியம் ஸ்விங்கார்ம், அப்டேட் செய்யப்பட்ட 155சிசி என்ஜின், நீட்டிக்கப்பட்ட எல்இடி டெயில்லைட், சிறிய அளவில் புதிய டிசைனில் மட்கார்ட் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பாடி கிராஃபிக்ஸ் என அப்டேட் லிஸ்ட் நீண்டு கொண்டுதான் போகிறது.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

இந்த நிலையில் மேற்கூறப்பட்ட அப்டேட்களுடன் தன்னுடைய பைக்கை மற்றவற்றில் இருந்து வேறுப்படுத்தி காட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்காக அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளையும் யமஹா வழங்க துவங்கியுள்ளது. அவை என்னென்ன என்பது அவற்றின் விலைகளுடன் டிவிசி வீடியோவின் மூலமாக தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவினை கீழே காணலாம்.

இவற்றை ஆன்லைனில் தேர்வு செய்து, அருகில் உள்ள யமஹா டீலர்ஷிப் மையத்திலும் வாங்கி கொள்ளலாம். இந்த ஆக்ஸஸரீகளில், நீலம்-கருப்பு & கருப்பு-க்ரே என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் டேங்க் பேட் ஒன்றாகும். இதன் விலை ரூ.350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தங்களது பைக்கின் நிறத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

புதிய எம்டி15 2.0 பைக் முந்தைய 2 நிறத்தேர்வுகளுடன் புதியதாக 2 நிறத்தேர்வுகளை பெற்றுவந்துள்ளது. புதிய 2 நிறத்தேர்வுகளில் சியான் ஸ்ட்ரோம் & ரேசிங் ப்ளூ என்பவை அடங்குகின்றன. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதாக விளங்கும் இந்த டேங்க் பேட் எளிதில் கீறலடையாது எனவும், இது பைக்கின் ஸ்டாண்டர்ட் பெயிண்ட்டை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

புதிய எம்டி15 பைக்கில் யமஹா அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான வசதிகளில் ஒன்று ப்ளூடூத் இணைப்பு. ஆதலால் பயணத்தின்போது மொபைல் போனின் தேவை இருக்கலாம். இதற்காகவே மொபைல்போன் பிடிப்பான்,யுஎஸ்பி சார்ஜர் போன்றவற்றை யமஹா ஆக்ஸஸரீகளாக வழங்கியுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.350 மற்றும் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

இதில் யுஎஸ்பி சார்ஜர் நன்கு வெளியே தெரியும்படி, இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலுக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது என்றாலும், தூசி, நீர்புகா வண்ணம் கவர் செய்யப்பட்டுள்ளதாம். இந்த ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் மிகவும் விலை குறைவானது என்று பார்த்தால், யமஹா பிராண்ட் லோகோ ஸ்டிக்கர் தான். வெறும் ரூ.80 மட்டுமே. உயர்தரத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த ஸ்டிக்கரை பைக் மட்டுமின்றி, ஹெல்மெட்டிலும் ஒட்டிக்கொள்ளலாம்.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

எல்இடி ஃப்ளாஷர் ரூ.1,490இல் ஆக்ஸஸரீயாக இணைக்கப்பட்டுள்ளது. ஒட்டுனருக்கு யமஹா பிராண்ட் லோகோ பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் ரூ.900 என்ற விலையில் வழங்கப்பட்டுள்ளது. எம்டி பைக் லோகோ இந்த டி-சர்ட்டில் முன்பக்கத்திலும், யமஹா லோகோ பின்பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தனித்தனியாக எம்டி & யமஹா லோகோகளுடன் கருப்பு நிற பைக் ஜாக்கெட்டையும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

இந்த ஜாக்கெட்டுகளின் விலைகள் ரூ.6,500 மற்றும் ரூ.6,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றை எஸ், எம், எல், எக்ஸ்.எல் மற்றும் எக்ஸ்.எக்ஸ்.எல் என்ற அளவுகளில் தேர்வு செய்யலாம். பின் இருக்கை பயணி கால் வைக்கும் ஹேங்கர் ரூ.500இல் ஆக்ஸஸரீயாக சேர்க்கப்பட்டுள்ளது. பைக்கின் பாதுகாப்பிற்கு சீட் கவர் மற்றும் என்ஜின் அடித்தட்டு பாதுகாப்பான் போன்ற வழக்கமான ஆக்ஸஸரீகளும் இடம்பெறுகின்றன.

புதிய யமஹா எம்டி15 வெர்சன் 2.0 பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு - டிவிசி வீடியோ!

இவை இரண்டின் விலைகள் ரூ.400 மற்றும் ரூ.500 ஆகும். இதில் சீட் கவர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, ஸ்கிட் தட்டு போதுமான அளவில், குறைவான எடையில் வழங்கப்பட்டுள்ளது. யமஹாவின் ‘தி கால் ஆஃப் தி ப்ளூ' திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எம்டி15 வெர்சன் 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,59,900ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 15, 2022, 14:28 [IST]
English summary
New yamaha mt 15 accessories range launched price details
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+