இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

புதிய யமஹா பைக் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று யமஹா எம்டி15 (Yamaha MT15). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக புதிய எம்டி15 பைக் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எம்டி15 வி2.0 (MT15 V2.0) என்ற பெயரில் இந்த பைக் அழைக்கப்படுகிறது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

1.60 லட்ச ரூபாய் என்ற விலையில் புதிய யமஹா எம்டி15 வி2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மிகவும் பிரபலமான யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) பைக்கின் அடிப்படையில் இந்த நேக்கட் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் (Naked Street-fighter) பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில், அதாவது நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 9,228 எம்டி15 வி2.0 பைக்குகளை யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுதான் யமஹா எம்டி15 பைக்கின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் யமஹா எம்டி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதில்லை.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 5,692 யமஹா எம்டி15 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் யமஹா எம்டி15 பைக் விற்பனையில் 62 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இது மிகவும் சிறப்பான விற்பனை வளர்ச்சியாகும்.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

பழைய மாடலை காட்டிலும், யமஹா எம்டி15 பைக்கின் புதிய மாடல் டிசைனில் நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய யமஹா எம்டி15 பைக்கில் 2 புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை சியான் ஸ்ட்ரோம் (Cyan Storm) மற்றும் ரேஸிங் ப்ளூ (Racing Blue) ஆகும். இதுதவிர பழைய வண்ண தேர்வுகளான ஐஸ் ப்ளூ-வெர்மில்லியன் (Ice Fluo-Vermillion) மற்றும் மெட்டாலிக் ப்ளாக் (Metallic Black) ஆகியவையும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் யமஹா எம்டி15 வி2.0 பைக் பெற்றுள்ளது. மேலும் யமஹாவின் ஒய்-கனெக்ட் ஆப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

யமஹா எம்டி15 வி2.0 பைக்கில், 155 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 18.4 ஹெச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 14.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் வழங்கப்படுகிறது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது. இந்த பைக்கின் எடை 139 கிலோ. இந்திய சந்தையில் கேடிஎம் 125 ட்யூக் (KTM 125 Duke) பைக்குடன் யமஹா எம்டி15 வி2.0 போட்டியிட்டு வருகிறது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V), பஜாஜ் பல்சர் என்250 (Bajaj Pulsar N250), சுஸுகி ஜிக்ஸெர் 250 (Suzuki Gixxer 250) மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 (Honda Hornet 2.0) போன்ற பைக்குகளுக்கும் புதிய யமஹா எம்டி15 வி2.0 பைக் விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி... விற்பனையில் சாதனை படைத்த புதிய யமஹா பைக்... விலை எவ்ளோனு தெரியுமா?

புதிய யமஹா எம்டி15 வி2.0 பைக்கிற்கு ஏராளமான ஆக்சஸெரீஸ்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. புதிய மாடலின் வருகை மூலம் யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்திய சந்தையில் உயர தொடங்கியுள்ளது. வரும் மாதங்களிலும் எம்டி15 பைக்கிற்கு இதேபோன்று சிறப்பான விற்பனை எண்ணிக்கை கிடைக்கும் என யமஹா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 27, 2022, 14:00 [IST]
English summary
New yamaha mt15 registers 62 per cent sales growth in india
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+